Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவை ஆட்டம்காண வைக்கும் அடுத்த ஆயுதத்தை எடுத்த அண்ணாமலை - கிடுகிடுக்கும் அறிவாலயம்

திமுக அரசுக்கு எதிராக பாஜக அடுத்த அட்டாக்கை கையில் எடுத்துள்ளது, கோவில்கள் விவகாரத்தில் இந்து மத விரோத திமுக அரசை வீழ்த்திய தீருவோம் என பாஜக

திமுகவை ஆட்டம்காண வைக்கும் அடுத்த ஆயுதத்தை எடுத்த அண்ணாமலை - கிடுகிடுக்கும் அறிவாலயம்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jan 2023 1:13 PM GMT

திமுக அரசுக்கு எதிராக பாஜக அடுத்த அட்டாக்கை கையில் எடுத்துள்ளது, கோவில்கள் விவகாரத்தில் இந்து மத விரோத திமுக அரசை வீழ்த்திய தீருவோம் என பாஜக தற்பொழுது கங்கணம் கட்டி இறங்கி உள்ளது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து திமுக அரசுக்கு எதிராக முழு வீச்சுடன் களமாடி வருகிறார், திமுக செய்யும் செயல்கள் அனைத்தும் மட்டுமல்லாது திமுக செய்யும் தப்புகள், சுரண்டிய ஊழல்கள் பொதுமக்கள் முன் சுட்டிக்காட்டி இதுதான் இதுதான் திமுகவின் லட்சணம், வருங்கால தேர்தல்களில் திமுகவை துக்கி வெளியே வீச வேண்டும் என ஆவேசமாக பேசி வருகிறார். இந்த நிலையில் அடுத்த அஸ்திரமாக தற்பொழுது திமுக இந்து மத மக்களுக்கு விரோதி தான் என்னும் அனைவருக்கும் புரிய வைக்கும் வகையில் இன்று போராட்டம் ஒன்று நடைபெற இருக்கிறது.

பாஜக தரப்பில் ஆன்மீக உணவுகளை உணர்வுகளை திமுக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் புண்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி பாஜக திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. கோவில்களின் புனிதம் காக்கும் இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர், இது தொடர்பாக தமிழக பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் எம் நாச்சியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்த போராட்டமானது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடத்தப்படவிருக்கிறது' என அறிவித்துள்ளார். இந்த போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தின் மூலம் திருக்கோவில்களின் நிலங்கள் சுரண்டப்படுவது, திருக்கோவில்களின் மரபுகள் மீறப்படுவது, கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுவது, புராதான கோவில் நகைகள் உருக்கப்படுவது, பக்தர்கள் காணிக்கை உண்டியல் பணம் சுரண்டப்படுகிறது, பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகிறது, பக்தர்களின் வருகைகள் தவிர்க்கப்படுகிறது, கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது, அறங்காவலர்கள், தக்கார்கள் நியமங்கள் தடுக்கப்படுகிறது என திமுக அரசு கோவில்களுக்கு செய்யும் துரோகத்தையும் இந்து சமய அறநிலையத்துறை முறையாக செயல்படாத என் கண்டித்து களமிறங்க உள்ளனர் பாஜகவினர்.

ஆக மொத்தத்தில் திருக்கோவில்களின் புனிதங்களை சிதைத்து இந்து மத நம்பிக்கையை உறுதெரியாமல் அழித்து இறை நம்பிக்கை இல்லாமல் செய்யும் திமுக அரசு எப்படி இந்து மத சடங்குகளில் தலையிட்டு இந்து மதத்தை உடைக்க நினைக்கிறது எனவும் இன்றைய கூட்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இப்படி முழு வீச்சுடன் திமுகவை எதிர்த்து பாஜக போராட்டத்தில் இறங்கி உள்ளது அறிவாலயத்தை சற்று ஆட்டம் காண செய்துள்ளது.

ஏற்கனவே வரும் தமிழ் புத்தாண்டு முதல் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து திமுக அரசின் ஊழல்கள், அமைச்சர்கள் செய்யும் அடாவடிகள், கோபாலபுர குடும்பம் செய்யும் குடும்ப அரசியல், சமூக நீதி என்ற நாடகம், தீண்டாமை திமுக அரசில் எப்படி நிலவுகிறது என பிரச்சாரம் செய்ய திட்டமிட்ட நிலையில் இப்படி ஒரு போராட்டத்தை பாஜக அறிவித்திருப்பது திமுகவிற்கு மேலும் ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News