பா.ம.க துணை தலைவரை தட்டி தூக்கிய அண்ணாமலை - 19 வருடமாக பா.ம.க'விற்கு உழைத்தவர் இன்று பா.ஜ.க'வில் ஐக்கியம்
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 19 வருடமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பயணித்து வந்த பா.ம.க துணைத் தலைவர் இன்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்துள்ளார்.
By : Mohan Raj
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 19 வருடமாக பாட்டாளி மக்கள் கட்சியில் பயணித்து வந்த பா.ம.க துணைத் தலைவர் இன்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பா.ஜ.க அசுர வளர்ச்சியை பெற்று வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலையின் கீழான பா.ஜ.க அணி பல போராட்டங்களிலும், ஆளுங்கட்சியை எதிர்த்து செய்யும் அரசியலிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் பிற கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க'வில் இணைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத்தலைவர் பா.ஜ.க'வில் அண்ணாமலை முன்னிலையில் இணைந்துள்ளார். இந்த விவகாரம் பா.ம.க'வினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆ.செந்தில்குமார் என்னும் பா.ம.க'வின் துணைத் தலைவர் கடந்த 2003'ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் நகரில் தொழிற்சங்கத் தலைவராக பா.ம.க'வில் தனது அரசியல் வாழ்வை துவங்கினார், பின்னர் 2005ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக உயர்ந்தவர் 2011ஆம் ஆண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனார் பிறகு 2015ஆம் ஆண்டில் மாவட்ட தலைவராக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பதவி வகித்தார் 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகாலம் பா.ம.க'வில் துணைத்தலைவராக பதவி வைக்கிறார் இவர் இன்று அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க'வில் இணைந்துள்ளார், இந்த விவகாரம் வடமாவட்டங்களில் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.