உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவிரி கூக்குரல் இயக்கத்தின் அறிவிப்பு
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் என்று காவிரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.
By : Karthiga
காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும் அதை சார்ந்த விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் காவிரி கூக்குரல் இயக்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இந்த இயக்கம் மூலம் இதுவரை நான்கு கோடியே 40 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு இருக்கின்றனர் .அதன்படி நடப்பாண்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஒரு கோடிய 10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டு இருக்கிறோம்.
புதுக்கோட்டை,தஞ்சாவூர்,நாகப்பட்டினம் , கடலூர் ,அரியலூர், தர்மபுரி, சேலம் நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வருகிற 4,5-ஆம் தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு புதுச்சேரியில் விவசாயிகளின் நிலங்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நாட இருக்கின்றனர்.
நிலங்களில் தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பணமதிப்புக்கு மரங்களை நடுகின்றனர். இது தவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது.