Kathir News
Begin typing your search above and press return to search.

முபின் போன்று தமிழகத்தில் 96 பேர் நாச வேலையில் ஈடுபட தயாராக இருக்கிறார்களா - அதிர வைக்கும் உளவுத்துறை அறிக்கை

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரித்தும் தமிழக காவல்துறை கோட்டைவிட்ட சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.

முபின் போன்று தமிழகத்தில் 96 பேர் நாச வேலையில் ஈடுபட தயாராக இருக்கிறார்களா - அதிர வைக்கும் உளவுத்துறை அறிக்கை

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2022 2:40 PM GMT

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரித்தும் தமிழக காவல்துறை கோட்டைவிட்ட சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.

கோவை கார் குண்டுவெடிப்பில் இருந்த ஜமோசா முபின் குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரியாது என்பது போல் தமிழக காவல்துறை கைது இருக்கிறது ஆனால் இதனை தமிழக பா.ஜ.க மறுத்துள்ளது. இது குறித்து பா.ஜ.க வட்டாரங்கள் கூறியதாவது, ஜமோசா முபின் செயல்பாடுகள் 2019 ஆம் ஆண்டிலிருந்து துவங்குகின்றன. பொறியியல் பட்டதாரியான ஜமோசா முபின் சில நாடுகளுக்கு முன் ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். அதன் தொடர்பில் இருப்பதை பெருமையாகவும் நினைத்தார்.

முபின் சில ஆண்டுகளுக்கு முன் கோவை கோனியம்மன் கோவில் திருவிழாவின் போது காரில் வெடிகுண்டுகளுடன் தற்கொலை படையாக மாறி மாபெரும் சேதத்தை ஏற்படுத்த தீர்மானித்தார். இந்த தகவல் வெளியானதும் போலீசாரின் கண்களில் இருந்து தப்பிவிட்டார். அதற்கு அடுத்ததாக முபினுடன் சேர்ந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் கேரள மாநிலம் கொச்சின் வெடிகுண்டு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்தனர். அதையும் போலீஸ் முன்கூட்டியே மோப்பம் பிடித்துவிட மாபெரும் கொடிய சம்பவம் தடுக்கப்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து சிலரை போலீசார் சிறை படுத்தினர். அதே சமயத்தில் போலீஸ் கண்ணில் மண் தூவி விட்டு ஜமோசா முபின் தப்பிவிட்டார். இது 2018 ஆம் ஆண்டு நடந்தது ஆனால் அவரை முழுமையாக கண்டறிந்த மத்திய உளவுத்துறை போலீசார் முபின் தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க கூறி தமிழக அரசுக்கு 2018 செப்டம்பர் 27 முதல் தகவல் தெரிவித்தனர்.

ஆனால் தமிழக போலீஸ் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அதன் பின்னர் 2018 ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் ஆறு தேவாலயங்கள் மீது குண்டு வெடிப்புகள் நடந்தன எனவும் இதில் 269 பேர் இறந்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துக்கு பின் ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பக்தாதி, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை பாராட்டி பேசினார்.

இந்தியாவின் ரஷீத் அலி, அசுருதீன், ஜக்ரன் ஹாஸ்மி ஆகியோர் ஈஸ்டர் வெளிவந்த நிகழ்ச்சிக்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட விவரங்கள் தெரியவர அப்போது அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட ஜமோசா முபின் குறித்த தகவலும் தமிழக போலீசுக்கு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் முபினின் செயல்பாடுகள் தீவிரமாவதை மத்திய உளவுத்துறை கண்டறிந்து இந்த தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன.

என்.ஐ.ஏ 2019'ல் ஜமோசா முபினை நேரடியாக விசாரணைக்கு அழைத்தது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில், இலங்கையில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் அவருக்குள்ள தொடர்புகள் குறித்து வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும் முபினை தமிழக போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அந்த சமயத்தில் முறையான தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜமோசா முபின் போன்று தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்தோடு பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக உள்ளனர் என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பியது.

அந்த பட்டியல் 89 நபராக ஜமோசா முபின் இடம் பெற்றுள்ளார் அந்த தகவலையும் தமிழக போலீஸ் வழக்கம்போல் ஓரமா வைத்து விட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என மத்திய அரசு எதிர்பார்த்தது, இதற்காக நாடு முழுவதும் மத்திய உளவு துறை தகவல் சேகரித்தது. இதில் ஜமோசா முபின் பற்றிய தகவல்களை அதிகமாக இருந்தன.

இந்த தகவலை தமிழக போலீஸ் தலைமையகம், கோவை மாநகர போலீசுக்கு தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தியது. ஆனால் கோவை மாநகர போலீஸ் முபினை கண்காணிப்பதில் கோட்டை விட்டுவிட்டது. இதற்க்கு அடுத்தே கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் வெடிகுண்டுடன் முபின் சென்ற கார் வெடித்து அவர் இறந்து போனார். இனியாவது மாநில உளவுத்துறை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மத்திய அரசின் எச்சரிக்கைகளை தமிழக அரசு முழு கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும் என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News