Kathir News
Begin typing your search above and press return to search.

வரவிருக்கும் சட்டங்கள் 'லவ் ஜிகாத்'த்தை தடுக்கப் போதுமானதா?

வரவிருக்கும் சட்டங்கள் 'லவ் ஜிகாத்'த்தை தடுக்கப் போதுமானதா?

வரவிருக்கும் சட்டங்கள் லவ் ஜிகாத்த்தை தடுக்கப் போதுமானதா?

Saffron MomBy : Saffron Mom

  |  24 Nov 2020 8:46 AM GMT

கடந்த சில வாரங்களில் கிட்டத்தட்ட ஐந்து மாநில அரசாங்கங்கள், (உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அஸ்ஸாம்) ஆகியவை முஸ்லிம் ஆண்களுக்கும், முஸ்லிம் அல்லாத பெண்களுக்கும் இடையில் நடக்கும் திருமணங்கள் தவறாக பயன்படுத்தபடுவதை தடுக்க சட்டங்கள் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக கூறினர்.

கிறிஸ்தவ மற்றும் இந்து மத ஆர்வலர்களால் 'லவ் ஜிகாத்' என்று அழைக்கப்படும் இந்த விவகாரம், முஸ்லிம் ஆண்கள், முஸ்லீம் அல்லாத பெண்களை, இஸ்லாமிற்கு மதம் மாற்றுவதற்காக தவறான உள்நோக்கத்துடன் காதல் அல்லது திருமணம் புரிவதை குறிப்பிடுகிறது.

உத்தர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேசங்களில் வரவிருக்கும் இந்த சட்டத்தைப் பற்றிய சில தகவல்கள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவை பா.ஜ.க, 'லவ் ஜிஹாத்' விவகாரத்தில் என்ன பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது குறித்து நமக்கு ஒரு தெளிவைக் கொடுக்கிறது.

இந்த சட்டங்களை பற்றிய சில தகவல்களின்படி, இது லவ் ஜிகாத்தை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை. கட்டாயம், ஏமாற்றுதல், முறையற்ற செல்வாக்கு, மிரட்டல் மற்றும் தூண்டுதல் போன்ற மோசடிகள் மூலம் மதமாற்றம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் திருமணங்களை செல்லாது என அறிவிக்கும் சட்டமாக கூறப்படுகிறது. இதன் கடைசி பகுதி இரு மதங்களுக்கு இடைப்பட்ட கலப்புத் திருமணங்களில் வளர்ந்து வரும் பிரச்சனைகளை சமாளிக்க பயன்படுத்தப்படலாம்.

இந்த சட்டங்கள் இரண்டு மாநிலங்களிலும் 'மத சுதந்திரச் சட்டம்' (Freedom of religion act) என்று அழைக்கப்படலாம். இது ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே தற்போது இருக்கும் ஒரு சட்டத்திலிருந்து ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் இந்த மத சுதந்திர சட்டத்தை 2019ல் அமல்படுத்தியது.

இம்மாதிரியான சட்டத்தை அறிமுகப்படுத்திய 7 மாநிலங்களில் ஒன்றாக இமாச்சல பிரதேசம் இருக்கிறது. இதேபோல் சட்டம் இருக்கும் மற்ற மாநிலங்கள் ஒரிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் .

ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இருக்கும் மதமாற்ற தடைச் சட்டத்தில் இது ஒரு திருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் சில திருத்தங்களை காலங்களுக்கு ஏற்றவாறு மாற்றி இருக்கிறார்கள். மதமாற்றத்திற்கு மட்டுமே செய்யப்படும் திருமணங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்தியது, இத்தகைய கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்களை, இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதற்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

சில சிறிய மாற்றங்களை தவிர மத்தியபிரதேச சட்டமும், உத்தரப்பிரதேச சட்டமும் இமாச்சல் பிரதேசத்தின் சட்டத்தை ஒத்ததாக இருக்கும் என்று நாம் தாராளமாக நம்பலாம். அதுதான் உண்மை என்றால் மதக் கலப்புத் திருமணங்களில் நடைபெறும் தவறுகளை குறைக்க இந்த சட்டம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தகைய கேள்விகளை எழுப்புவதற்கு காரணம் இருக்கிறது. இந்து திருமண சட்டம் அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் (SMA) திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் உரிமைகள் மிக அதிகம். அதே சமயம் ஷரியா அல்லது முஸ்லிம் தனி சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிமல்லாத பெண்களின் உரிமைகள் மிகவும் குறைவு.

முஸ்லீம் ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் முஸ்லிமல்லாத பெண்கள் தங்களுடைய நிறைய உரிமைகளை இழக்கின்றனர். இமாச்சல பிரதேசத்தின் சட்டத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், மதமாற்றத்திற்கு மட்டுமே செய்யப்படும் திருமணங்கள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் மட்டுமே அந்தப் பெண்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு கிடைப்பதில்லை. ஒரு திருமணத்தை உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பிரிவினைக்கு எல்லோரும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இந்த சட்டம் திருமணம் நடப்பதற்கு முன்னால் வரவேண்டும், பின்னால் அல்ல.

உண்மையான பிரச்சினை, மதமாற்றத்திற்காகவே செய்யப்படும் திருமணங்கள் அல்ல, திருமணங்களுக்காகவே செய்யப்படும் மதமாற்றங்கள். இரண்டாவதாக குறிப்பிட்டிருப்பதை நாம் சட்டரீதியாக தடை செய்தால் முஸ்லிம் அல்லாத பெண்கள் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டு அதாவது ஷரியா சட்டத்தின் கீழ் தங்களுடைய உரிமைகளை எல்லாம் இழந்து (சொத்துரிமை, தங்கள் குழந்தைகளை வளர்ப்பது, ஜீவனாம்சம் உட்பட பல) திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.

தான் காதலிப்பவரை திருமணம் செய்து கொள்வதற்காக மதத்தை மாற்றிக்கொள்ள இருமுறை கூட யோசிக்காத பெண்களை எந்த மாநில அரசாங்கத்தினாலும் காப்பாற்ற முடியாது. தங்கள் சொந்த குடும்பங்களின் பேச்சுகளையே அந்தப் பெண்கள் கேட்கவில்லை என்றால் அரசாங்கம் சொல்வதை எப்படி கேட்கப் போகிறார்கள்?

இந்த சட்டத்தின் மூலம் நாம் லவ் ஜிகாத்தை தடுக்க வேண்டும் என்றால், ஷரியா சட்டத்தின் கீழ் ஒரு முஸ்லிம் ஆணுக்கும் முஸ்லிமல்லாத பெண்ணுக்கும் நடக்கும் எல்லா திருமணங்களையும் தடை செய்ய வேண்டும். சிறப்புத் திருமண சட்டத்தின் (SMA) மூலம் மட்டுமே மதரீதியிலான கலப்புத் திருமணங்கள் நடைபெற வேண்டும்.

மாப்பிள்ளைக்கும் இந்த கலப்பு திருமணத்தை நடத்தி வைக்கும் மாலுவிகளுக்கும் அரசாங்கம் கடுமையான தண்டனையை அறிவித்தால் மட்டுமே, மதமாற்றம் செய்து ஷரியாவின் கீழ் திருமணம் செய்துவைக்கும் பிரச்சனை மிகப்பெரிய அளவில் குறையும். இதுதான் அவர்களுடைய மனதில் பயத்தை ஏற்படுத்ததும்.

இமாச்சல பிரதேச சட்டத்தின்கீழ், அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்னால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதே மதமாற்றம் செய்வதற்காக மட்டுமே என்று நிரூபிக்க வேண்டும். இது அந்த அளவு எளிதாக இருக்காது. இதில் பல வழக்குகளுக்கு தீர்ப்பும் வராது. இந்த சட்டத்தை கடுமைப்படுத்த, அந்தப் பெண்ணை மதமாற்றம் செய்வதற்காக தொந்தரவு கொடுத்தால் அவர் கணவரின் மீதும், அவர் குடும்பத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஷரத்தை சேர்க்கவேண்டும்.

மைனர் சிறுமிகள் தான் இந்த லவ் ஜிகாத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மைனர் சிறுமிகள் முதலில் மதமாற்றம் செய்யப்பட்டு, ஷரியா சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

ஷரியாவில் திருமணம் செய்து கொள்ளும் வயது மிக மிக குறைவு. முஸ்லிமல்லாத பெண்கள் மணப்பெண்களாக இருக்கும் ஷரியா திருமணங்களை அரசாங்கம் தடை செய்தால் இந்தப் பிரச்சனைகள் நிறுத்தப்படும். மைனர் சிறுமியை திருமணம் செய்வதற்காக மதம் மாற்றும் நபர்களின் மீது போஸ்கோ வழக்கு அல்லது மானபங்க வழக்கு போடப்பட வேண்டும்.

எனவே இத்தனை விஷயங்களை நன்கு ஆராய்ந்து, அவசரப்படாமல், நல்லபடியாக, பயனுள்ளதாக இருக்கும் சட்டங்களை மாநில அரசாங்கங்கள் கொண்டு வரவேண்டும்.

Translated From: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News