Kathir News
Begin typing your search above and press return to search.

ஓ ஜீஸஸ்! உலகம் முழுக்கவே 6000 கோடி பிலீவர்ஸ் சர்ச் மோசடி! அதிர்ச்சியில் கிறித்தவர்கள்! #KathirExclusive

ஓ ஜீஸஸ்! உலகம் முழுக்கவே 6000 கோடி பிலீவர்ஸ் சர்ச் மோசடி! அதிர்ச்சியில் கிறித்தவர்கள்! #KathirExclusive

ஓ ஜீஸஸ்! உலகம் முழுக்கவே 6000 கோடி பிலீவர்ஸ் சர்ச் மோசடி! அதிர்ச்சியில் கிறித்தவர்கள்! #KathirExclusive

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  12 Nov 2020 9:04 AM GMT

அரசுக்கு அடுத்து இந்தியாவில் அதிக அளவிலான நிலத்துக்கு உரிமையாக இருப்பது கிறிஸ்தவ தேவாலயங்கள் தான் என்ற ஒரு செய்தி உலவுவதுண்டு. ஒரு புறம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நிலம் வழங்கப்பட்டது தான் இதற்கு முக்கியக் காரணம் என்றாலும், ஏழைகள், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு உதவுவதாகக் கூறி வெளி நாடுகளில் இருந்து நிதி பெற்று அதை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதும் மற்றொரு காரணமாக இருந்து வருகிறது. இதற்கு உதாரணமாக தான் கேரளாவில் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான பிலீவர்ஸ் சர்ச் அமைப்பும் உள்ளது.

முறைகேடாக ஆயிரக்கணக்கான கோடிகள் நிதியை வெளிநாட்டில் இருந்து பெற்று அதை சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக பிலீவர்ஸ் சர்ச், அதன் தாய் அமைப்பான Gospel for Asia மற்றும் கிளை அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அமெரிக்காவில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்தும் தப்பி இருக்கிறார் இந்த அமைப்புகளைத் தோற்றுவித்த K P யோகனன்.

சபரிமலையில் புதிதாக விமான நிலையம் கட்டுவதற்காக கேரள அரசு இந்த அமைப்பின் செருவல்லி ரப்பர் எஸ்டேட்டை கையகப்படுத்த முயற்சித்த போதே இந்த அமைப்பின் பெயர் ஊடகங்களில் அடிக்கடி அடிபட்டது.

இந்த நில விஷயத்திலும் அது கேரள அரசுக்குத் தான் சொந்தம் என்றும் பிலீவர்ஸ் சர்ச் அதை முறைகேடாக விலைக்கு வாங்கி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இருந்தும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை தருவதாக கேரள அரசு ஒப்புக் கொண்டது.

அதன் பின்னர் தற்போது தமிழகம் உட்பட நாடு முழுவதும் பிலீவர்ஸ் சர்ச் அமைப்புக்கு சொந்தமான 66 இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதாக செய்தி வெளியான நிலையில் இந்த சோதனையின் போது ₹ 15 கோடி ரூபாய் வரை ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறி இருக்கிறது.

இதில் இந்த அமைப்பின் தலைமையிடமான திருவல்லாவில் உள்ள இதற்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு காரில் இருந்து ₹ 7 கோடி கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பிலீவர்ஸ் சர்ச் அமைப்பைச் சேர்ந்த ஏப்(Abe) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோவில் இவ்வளவு பணத்தை தனது காரில் வைத்து தன்னை மாட்டி விட்டது ஏன் என்று ஏப் அழுது கொண்டே டேனியல் ஆபிரகாம் என்ற பாதிரியாரிடம் கேட்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன.

ஏப் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டதாகவும் சர்ச் நிர்வாகிகள் அதை வேறு ஒருவருக்கு விற்று பதிவுச் சான்றிதழும் மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளனர். எனினும் அவர் பெயரில் கார் இருப்பது கண்டறியப்பட்டதால் "என்னிடம் இதைப்பற்றி சொல்லி இருந்தாலாவது நான் ஏதாவது வழி செய்திருப்பேன்" என்று அழுது கொண்டே கூறி இருக்கிறார்.

பிலீவர்ஸ் சர்ச் அமைப்பு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், திருவல்லாவில் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றது.இவை அனைத்திலுமே வருமான வரித்துறை சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைகளின் போது கட்டிடப் பணி, நிலங்கள் வாங்குவது, சம்பளம் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட தொகையை அதிகரித்துக் காட்டி சட்டவிரோதமாக பணம் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கணக்கில் வராத பணப்பரிமாற்றம் பற்றிய தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து FCRA சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று கிட்டத்தட்ட ₹ 6000 கோடி ரூபாய் அளவிலான நிதியை பிலீவர்ஸ் சர்ச், காஸ்பல் ஃபார் ஏசியா உள்ளிட்ட அமைப்புகள் பெற்றுள்ளன. சமூக சேவை செய்வதற்காக பெறப்பட்ட இந்த நிதி உண்மையில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், சொத்துக்கள் வாங்கவும் பயன்படுத்தப்பட்டது

FCRA சட்டத்துக்கு விரோதமாக இந்த நிதி பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டுகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது பிலீவர்ஸ் சர்ச்சைப் பற்றியோ அதைத் தோற்றுவித்த யோகனன் பற்றியோ ஊடகங்கள் விவாதிக்கவில்லை. யோகனனின் பெயரை ஊடகங்கள் உச்சரிக்கக் கூட இல்லை.

இவர் கனடாவிலும் அமெரிக்காவிலும் கிறிஸ்தவத்தின் பெயரில் பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னரே தெரியவந்தது. கனடாவில் இவர் செய்த மோசடிகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஒரு பேராசிரியரின் கூற்றுப்படி கனடாவில் வசிப்பவர்கள் பிற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுவது பற்றி தெரியாமலே யோகனனின் காஸ்பல் ஃபார் ஏசியா அமைப்பு இந்தியாவில் சமூக சேவை ஆற்றுவதாக எண்ணிக்கொண்டு ஏராளமாக நிதி உதவி செய்துள்ளனர்.

இந்த நிதி டெக்சாஸ் மாகாணத்தில் காஸ்பல் ஃபார் ஏசியா அமைப்பின் சர்வதேச தலைமையகத்தை கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக $ 19.8 மில்லியன் டாலர் பெயர் தெரியாத நபரிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டதாக இந்த அமைப்பு கூறிய நிலையில் உண்மை தெரிய வந்த பிறகு இந்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையின் போது இந்த நிதி உண்மையில் கனடாவில் இருந்து வந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க சட்டங்கள் மட்டுமல்லாது கனடாவின் சட்டவிதிகளையும் மீறி இந்த நிதியை காஸ்பல் ஃபார் ஏசியா அமைப்பு முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த பிரச்சினையில் இந்த அமைப்புக்கு எதிராக தீர்ப்பு வந்த நிலையில் நன்கொடை அளித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க $ 37 ஒதுக்குவதாக இந்த அமைப்பு அறிவித்தது.

இதேபோல் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட $ 108 மில்லியன் டாலர் நிதியை பற்றி கனடா அதிகாரிகளுக்கு அறிவித்த இந்த அமைப்பு இந்தியாவில் சட்டபூர்வமாக இதற்கான எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை.

இவ்வாறு தொடர்ந்து முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் Evangelical Council for Financial Accountability (ECFA) என்ற கிறிஸ்தவ மிஷனரிகளுக்கான சர்வதேச அமைப்பிலிருந்து காஸ்பல் ஃபார் ஏசியா அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.

அப்போது இந்த அமைப்பு நன்கொடை நிதியை முறைகேடாக பயன்படுத்துவது பற்றிய பல தகவல்கள் வெளியிடப்பட்டன. கனடாவிலும் தற்போது கே.பி.யோகனன் பண மோசடி வழக்குகளை சந்தித்து வருகிறார்.

கனடாவில் உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நன்கொடை அனைத்தையும் வேறு பகுதிகளுக்கு திருப்பிவிட்டு நஷ்டத்தில் இயங்குவதாக கூறி இந்த வழக்குகளில் இருந்து யோகனன் தப்பிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கிறிஸ்தவம் பற்றி ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சி பட்டமும் பெற்ற யோகனன் பல நாடுகளிலும் ஆதரவற்றோர் இல்லங்களில் நடத்தி வருகிறார். இவை மதமாற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இத்தனை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் யோகனன் பற்றி ஊடகங்களில் செய்தி வராததற்கு காரணம் அரசியல் வட்டங்களில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு தான் என்று கூறப்படுகிறது. ₹ 2,000 கோடி மதிப்பிலான ரப்பர் எஸ்டேட்டை விலைக்கு வாங்கிய போது கூட யோகனன் மீதும் அவரது அமைப்புகள் மீதும் யாருக்கும் சந்தேகம் வராதது ஏன் என்று‌ கேள்வி எழுப்பப்படுகிறது.

தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ள போதும் அமெரிக்காவிலும் கனடாவிலும் செய்த மோசடிகளுக்கு இந்தியாவில் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News