Kathir News
Begin typing your search above and press return to search.

பாரதியின் உண்மையான நினைவு நாள் எது ?வெளியான ஆதாரம் !

Bharathi's Memorial Day in Controversy.

பாரதியின் உண்மையான நினைவு நாள் எது ?வெளியான ஆதாரம் !
X

TamilVani BBy : TamilVani B

  |  11 Sep 2021 1:15 PM GMT

தமிழ் சமூகத்தின் ஈடில்லா கவி சுப்ரமணிய பாரதி. சுகந்திர போராட்டதை அனைவரும் ஒரு கோணத்தில் கொண்டு செல்ல அவர் மட்டும் கவிகளின் வழி சுகந்திர தாகம், பெண்ணுரிமை, சாதிய வேற்றுமை என அனைத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.

அந்த மகா கவிஞனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாரதியின் நினைவு நாள் பற்றிய குழப்பம் பாரதி பற்றாளார்களிடம் நிலவி வருகிறது.

இதுகுறித்து பாரதியார் நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் முத்துமுருகன் ஆதரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரதி பற்றாளர் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாரதியின் நினைவு நாள் எது என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சென்னை மாநகராட்சி 1921, செப்டம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பாரதி மறைந்ததால், அது 12-ம் தேதியாகி விடுகிறது. எனவே பாரதியார் நினைவுநாள் செப்டம்பர் 12-ம் தேதிதான் என பதில் வழங்கியுள்ளது. அது மட்டுமின்றி அவரின் இறப்பு சான்றிதழ் நகலையும் வெளியிட்டுள்ளது.


அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் பராமரிப்பின்கீழ் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் பிறந்தவீடு மற்றும் மணிமண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் பாரதியின் மறைவு நாளை 11-ம் தேதியிலிருந்து 12-ம் தேதியாக திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இதனை தமிழக அரசு கவனத்தில் எடுத்துகொள்ளாமல் பாரதியின் நினைவு தினத்தை இன்று அனுசரித்துள்ளது. வரும் காலத்திலாவது பாரதி நினைவு நாளை சரியான படி அனுசரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News