சட்டவிரோத மதமாற்றங்களுக்கு 4.21 கோடி - 'பைபிள் சேப்பல் சொசைட்டி' மீது LRO புகார்! @Legallro
By : Saffron Mom
இந்தியாவில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் உதவியுடன் வெறித்தனமாக செயல்படும் சுவிசேஷ மிஷனரிகளின் (Evangelist Missionaries) உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை வெட்கமின்றி பயன்படுத்துகிறது.
FCRA விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO), பைபிள் சேப்பல் சொசைட்டி 4.21 கோடியை வெளிநாட்டுநிதியாக சட்ட விரோதமான மதம் மாற்றும் வேலைகளுக்காக பெற்றுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வமைப்பிற்கு நிதி கொடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்த சில பாப்டிஸ்ட் அமைப்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளது. இதில், Shenandoah Baptist, Independent Faith Mission, Bethel Baptist, Zoar Baptist ஆகியவையும் அடக்கம். இவை அனைத்துமே அமெரிக்காவை சேர்ந்தவை. சிலவற்றிற்கு இந்தியாவிலும் கிளைகள் உண்டு.
பைபிள் சேப்பல் இன்டர்நேஷனல் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் "கடவுளின் வார்த்தையை போதித்து நீடித்திருக்கும் அடித்தளங்களை உருவாகும் அமைப்பு" எனக் குறிப்பிட்டு உள்ளனர்.
நிதி அளித்திருக்கும் பாப்டிஸ்ட் அமைப்புகளோ சுவிஷேசம் செய்து கிறிஸ்தவத்தை பரப்புவதையே குறியாகக் கொண்டுள்ளன.
பெத்தேல் பாப்டிஸ்ட் அமைப்பின் நிறுவனர்கள் இதற்கு முன்னால் அசாம் மாநிலத்தில் இருந்து மிஷனரி நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சகத்திற்கு LRO அளித்த புகார் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, தீவிரமான FCRA மீறல்களை மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பு பாதிப்புகளையும் பற்றி அக்கறையுடன் விசாரிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.