Kathir News
Begin typing your search above and press return to search.

சிறப்பு கட்டுரை : கொரோனா மூலம் சீனா தொடுக்கும் 'பயோ வார்'? சாத்தியமா?

சிறப்பு கட்டுரை : கொரோனா மூலம்  சீனா தொடுக்கும் பயோ வார்? சாத்தியமா?

Saffron MomBy : Saffron Mom

  |  10 Jun 2021 2:15 AM GMT

கொரனா வைரஸ் பெருந்தொற்று ஒன்றரை வருடத்திற்கு மேலாக உலகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மக்கள் இந்த வைரஸின் மூலம் என்ன? எங்கிருந்து வந்தது? என்பது குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

தற்போது இவ்விவகாரத்தில் இரண்டு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வைரஸ் இயற்கையாகவே உருவாகியதா? அல்லது ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, தேவையான மாற்றங்கள் செலுத்தப்பட்டு மக்களுக்கு தொற்று ஏற்படுத்தும் படி ஏவி விடப்பட்டதா?

இதுவரை இந்த இரண்டு கருத்துகளையும் ஆதரிப்பதற்கு ஏதுவாக எந்த ஒரு ஆதாரமும் வெளிவரவில்லை.

சமீபத்தில் இது தொடர்பாக 'வெளியான' ஒரு ஆராய்ச்சி கட்டுரை மறுபடியும் இந்த வைரஸின் மூலங்கள் குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons என்று தலைப்பிடப்பட்ட இந்த கட்டுரை 2015ஆம் ஆண்டில் 18 சீன ராணுவ விஞ்ஞானிகள் மற்றும் ஆயுத நிபுணர்களால் எழுதப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் கொரானா வைரஸ் என்றழைக்கப்படும் வைரஸ் குடும்பத்தை மனிதர்களுக்கு வியாதிகளை ஏற்படுத்தும் அளவிற்கு செயற்கையாக உருமாற்றம் அடைய செய்ய முடியும் என்றும், இதை ஒரு ஆயுதமாக்கி இதுவரை பார்த்திராத அளவிற்கு பேரழிவை உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுப் பரவல் சீனாவிலுள்ள யுகான் மாகாணத்தில் ஆரம்பித்தது எனக் குறிப்பிடத்தக்கது. இதற்கு SARS-CoV-2 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை மேலும், இப்படி செயற்கையாக உருவாக்கப்படும் வைரஸ்கள் எப்படி உயிரியல் ஆயுதங்களில் ஒரு புது யுகத்தை உருவாக்கும் என்று 'கணித்துள்ளது'. மேலும் எதிரிகளின் சுகாதாரத்துறை வீழும் அளவிற்கு இந்த உயிரியல் போர் இருக்கும் என்றும் கற்பனை செய்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை ஒரு இந்திய ஹேக்கரால் கண்டறியப்பட்டு, வெளியிடப்பட்ட பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், விசாரணை செய்து வைரஸ் குறித்த முடிவை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணை முடிவுகளுக்கு அனைவரும் காத்திருக்கும் வேளையில், சீனாவிற்கு இவற்றையெல்லாம் செய்யக்கூடிய அளவிற்கு திறனும், வில்லத்தனமும் உள்ளதா என்று நாம் ஆராயலாம். உயிரி ஆயுதங்கள் (bio weapons) ராணுவ ரீதியிலான தாக்குதல்களுக்கு பயன்படுத்துவது மிகவும் மோசமான, ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு செயலாகும்.

17 நாடுகள் தற்போது இது போன்ற ஆயுதங்களை தயாரிக்கும் திட்டங்களை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. அவற்றுள் கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜப்பான், லிபியா, வட கொரியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, தைவான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் அடக்கம்.

இதுபோன்ற உயிரியல் ரீதியிலான போரை முன்னெடுப்பதில் சிறிது வரலாறு உண்டு. சீனா இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜப்பானுக்கு எதிராக இதை கையாண்டது. பூபோனிக் பிளேக் உருவாக்கும் ஒட்டுண்ணிகளை பரப்புவது உள்ளிட்ட செயல்கள் இதில் அடக்கம். 1984இல் சீனா சர்வதேச அளவிலான உயிரி ஆயுத மாநாட்டில் எந்தவிதமான உயிரி ஆயுதங்களை தயாரிக்க, வாங்க, மாற்றம் செய்ய, சேகரிக்க மாட்டோம் போன்ற விதிகளுக்கு உட்படுவதாக அறிவித்தது.

வெளிப்படையாக, சீனா இத்தகைய ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தாலும் இது குறித்த சந்தேகங்கள் பலருக்கும் இருந்து வருகின்றன. 1993 இல் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட 'உயிரியல் ஆராய்ச்சி மையங்கள்' இத்தகைய ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியது. அதே வருடத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே சீனா தங்களுடைய உயிரியல் போர் முறையை கைவிட வில்லை என்று சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அப்போது தொடங்கி சீனாவின் மேல் சந்தேகம் வலுத்து வருகிறது. இப்படி திட்டங்கள் போடுவதை சீனா மறுக்கவில்லை. தங்களுடைய ராணுவ ஆராய்ச்சி நடவடிக்கைகள் தங்களுடைய 'பாதுகாப்புக்காக' தான் என்று தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக ஒரு அமைப்பு 'ராணுவ மருத்துவ நிறுவனம்' என்று அறியப்பட்டு தொற்று நோய்களை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. ஆனால் சீனா 'உயிரி போரிற்காகவே' இத்தகைய திட்டங்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உளவு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் 1980 களின் கடைசியில், சீனா 'தவறுதலாக' வெளியிட்ட வைரஸால் அங்கே ஹீமோராய்டு காய்ச்சல் தொற்று இரண்டு முறை ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். சீன ஆராய்ச்சி விஞ்ஞானிகள் இத்தகைய வைரஸ் நோய்களை ஆயுதம் ஆக்குவதற்காக நடத்திய ஆராய்ச்சியில் உண்டான விபத்து இது என்று சந்தேகிக்கப்படுகிறது.

சீனாவால் இவற்றைச் செய்ய முடியுமா?

1999 இல் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவிடம் ஏவுகணைகள், பசிலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவற்றிற்கும் மேலாக, பலவிதமான பாம்பர்ஸ், வீரர்கள், ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் அணுஆயுதம், உயிரியல் மற்றும் வேதியல் ஆயுதங்களை பரப்புவதற்காக தெளிப்பான்கள் ஆகியவையும் இருப்பதாக தெரிவித்தது.

உயிரி ஆயுதம் தயாரிப்பதற்கு சீனாவிடம் அத்தனை வசதிகளும் இருப்பதாக 2001 அமெரிக்க உளவு அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த பல வருடங்களாக சீனா உயிரியல் ஆயுதங்களை உருவாக்க பலவிதமான வைரஸ்களையும் கிருமிகளையும் ஆராய்ச்சி செய்தாக கூறப்படுகிறது.

இத்தகைய ஆயுதங்களை உருவாக்க பெரிய அளவில் தொழில் நுட்பங்களையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 1993-ஆம் ஆண்டு சீனா தங்கள் நாட்டில் உள்ள எட்டு ஆராய்ச்சி அமைப்புகளை 'தேசிய பாதுகாப்பு உயிரியல் போர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள்' என அறிவித்திருந்தது.

ரகசிய தன்மை காரணமாக சீனாவின் ராணுவ தகுதிகளையும் திறமைகளையும் குறித்து அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. ஆனால் உயிரியல் போர்கள் உலகத்தை முன்னோக்கிச் எல்லாம் செலுத்தாமல் அதை அழித்துவிடும். இயற்கையுடன் விளையாடுவது எந்த அளவிற்கு ஆபத்தோ, அதை ஆயுதமாக உருவாக்கி அதைக் கொண்டு போர்களை நடத்துவதும் பேராபத்து. இதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் பெருந்தொற்றை விட மோசமான விளைவுகள் நேரலாம்.

With Inputs from: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News