Kathir News
Begin typing your search above and press return to search.

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி - யார் இந்த சந்திரசூட்?

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய் சந்திர சூட்டை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் சிபாரிசு செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி - யார் இந்த சந்திரசூட்?
X

KarthigaBy : Karthiga

  |  12 Oct 2022 6:00 AM GMT

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யு.யு.லலித் அடுத்த மாதம் எட்டாம் தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை சிபாரிசு செய்யுமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு கேட்பது வழக்கம். அதுபோல் அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யக்கோரி கடந்த 7 ஆம் தேதி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு கடிதம் எழுதினார். இந்த நிலையில் நீதிபதி டி.ஒய்.சந்திரசேகர் பெயரை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு சிபாரிசு செய்துள்ளார். மத்திய அரசுக்கு எழுதிய அந்த சிபாரிசு கடிதத்தின் நகலை நீதிபதி சந்திர சூட்டிடம் ஒப்படைத்தார். தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி சிபாரிசு செய்வது வழக்கம். அதற்கு ஏற்ப யு.யு.லலித் சிபாரிசு செய்துள்ளார்.


நீதிபதி சந்திர சூட் நவம்பர் ஒன்பதாம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க்கிறார். அவர் நாட்டின் 50 வது தலைமை நீதிபதி ஆவார்.இரண்டு ஆண்டுகள் அதாவது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் நீண்ட காலம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திர சூட்டின் மகன் ஆவார்.அவருடைய தந்தை 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வரை தலைமை நீதிபதியாக இருந்தார்.நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படித்தார்.டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி படித்தார். அமெரிக்காவில் ஹார்வர்டு சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம் பட்டமும் டாக்டர் பட்டமும் பெற்றார் .


சுப்ரீம் கோர்ட்டிலும், மும்பை, குஜராத், கொல்கத்தா, அலகாபாத் மத்திய பிரதேசம் டெல்லி ஆகிய ஹைகோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றினார்.1998 ஆம் ஆண்டு அவரை மும்பை ஐகோர்ட்டு மூத்த வக்கீலாக அறிவித்தது.அதே ஆண்டில்,கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆனார். 2000-ம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி மும்பை ஹை கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.2013 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News