Kathir News
Begin typing your search above and press return to search.

'ச்சீ இந்த பழம் புளிக்கும்' - நரித்தனத்தை வெளிப்படுத்திய முரசொலி கட்டுரை

ஒரு பழங்கால நீதிக்கதையில் இதுபோன்று வரும், 'ஒரு நரி திராட்சை தோட்டத்திருக்குள் சென்று திராட்சை பழங்களை சாப்பிட ஆசைப்பட்டு சென்று எட்டி எட்டி பார்த்து குதித்துவிட்டு உயரத்தில்

ச்சீ இந்த பழம் புளிக்கும் - நரித்தனத்தை வெளிப்படுத்திய முரசொலி கட்டுரை

Mohan RajBy : Mohan Raj

  |  12 Dec 2022 11:38 AM GMT

ஒரு பழங்கால நீதிக்கதையில் இதுபோன்று வரும், 'ஒரு நரி திராட்சை தோட்டத்திருக்குள் சென்று திராட்சை பழங்களை சாப்பிட ஆசைப்பட்டு சென்று எட்டி எட்டி பார்த்து குதித்துவிட்டு உயரத்தில் இருக்கும் பழங்களை பறிக்க முடியாமல், 'சீ இந்தப்பழம் புளிக்கும்' என்று கூறி சென்றதாக நீதிக்கதையில் வரும், அதற்கு பின்னணியில் உள்ள அர்த்தம் தன்னால் முடியவில்லை எனில் அது சரியில்லை என கூறும் நரித்தனம் என்பதே ஆகும். அந்த வகையில் தி.மு.க'வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி குஜராத் தேர்தலில் பா.ஜ.க வெற்றியை 'குஜராத் தேர்தல் - பயப்பட ஏதுமில்லை' என்ற தலைப்பில் விமர்சித்துள்ளது.

2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதன்முறையாக 182 சட்டமன்றத் தொகுதிகளில் 156 இடங்களை அக்கட்சி கைப்பற்றியுள்ளது. குஜராத் வரலாற்றில் அக்கட்சி தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று எதிர்க்கட்சிகளை வீழ்த்தி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வைத்து பல சாதனைகளை படைத்துள்ளது.

முதன்முறையாக, குஜராத்தின் கிராமப்புறங்களில் பா.ஜ.க களப்பணிகளை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. குஜராத் சட்டசபையில் 98 கிராமப்புற இடங்களும், 84 நகர்ப்புற இடங்களும் உள்ளன.

2017 தேர்தலில், காங்கிரஸ் வென்ற 52 இடங்களை கிட்டத்தட்ட 40 இடங்களை பா.ஜ.க'வுக்கு தன் செயல்பாடுகள் மூலம் தாரைவார்த்துவிட்டது. ஆனால் 2022 இல், பாஜக 75 கிராமப்புற தொகுதிகளை வென்று காங்கிரஸ் கட்சியை புரட்டிபோட்டுள்ளது இது வெற்றி கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்.

பா.ஜ.க இந்த வெற்றியை ஒரே இரவில் பெற்றுவிடவில்லை, அதற்க்கு பல ஆண்டுகள் திட்டமிடல், களப்பணி, பலரின் அர்பணிப்புகள் அடங்கியுள்ளன.

குஜராத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 20% பதிதர் சமூகத்தினர் உள்ளனர், மேலும் இந்த சமூகம் குஜராத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவிலான வாக்குகளை கொண்டுள்ளது. தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிராவின் பெரும்பாலான பகுதிகளில், வெற்றி தோல்வி படேல் சமூகத்தினரால் தீர்மானிக்கப்படுகிறது. லியூவா படேல் சமூகம் (சமூகத்தில் 70%) மற்றும் கத்வா படேல் சமூகம் (சமூகத்தில் 30%) என பிரிக்கப்பட்டுள்ளது.


சௌராஷ்டிரா-கட்ச் பகுதி முழுவதுமாக லியூவா பட்டேலின் ஆதிக்கத்தில் உள்ளது. சௌராஷ்டிரா-கட்ச் பகுதி போன்ற கிராமப்புறங்களில், பா.ஜ.க 2017-ல் 23 இடங்களிலிருந்து 2022-ல் 47 இடங்களாக வெற்றி பெற்று வெற்றியை இருமடங்காகியுள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் 2017-ல் பெற்ற 30 இடங்களிலிருந்து 2022-ல் வெறும் 3 இடங்களாகக் வெகுவாக குறைந்துள்ளது. இந்த கிராமப்புற வாக்குகள் பா.ஜ.க'வின் வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க'வின் சமூகத்தை மையப்படுத்திய களப்பணி

2022 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க'வின் முக்கிய நடவடிக்கை படேல் சமூகத்தை சென்றடைவதுதான். பா.ஜ.க 2021 செப்டம்பரில் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேலைக் கொண்டு வந்து 2022 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. பா.ஜ.க காங்கிரஸிலிருந்து ஹர்திக் படேலைக் கொண்டு வந்து, அவரை விரும்காம் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தியது, அங்கு அவர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும், நரேந்திர மோடி என்கிற பா.ஜ.க'வின் முகம் மற்றும் பா.ஜ.க'வின் மக்களை சென்றடையும் முயற்சிகள் படிதார்களை பா.ஜ.க'வை நோக்கி வரவழைத்தது. 60% படிதார் வாக்குகளைக் கொண்ட வாரச்சாவில் பிரதமர் மோடி 18 கிமீ சாலைக் காட்சியை நடத்தினார். 1995ல் கேசுபாய் படேல் தலைமையில் குஜராத்தில் பா.ஜ.கவை முதன்முறையாக ஆட்சிக்குக் கொண்டு வந்த அதே பாடிதர் சமூகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்த வாக்குகள்

காங்கிரஸ் 118 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும், 39 இடங்களில் மூன்றாவது இடத்தையும், ஆம் ஆத்மி 35 இடங்களில் இரண்டாவது இடத்தையும், 114 இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. குஜராத்தில் பா,ஜ.க வெற்றி பெறுவதற்கு வாக்குப் பிளவு முக்கிய காரணியாக இல்லாவிட்டாலும், அது காங்கிரஸின் வாக்குப் பங்கை கணிசமாகக் குறைத்துவிட்டது. காங்கிரஸ் பிரதானமாக மக்கள் விரும்பக்கூடிய முகத்தை வைத்து பிரச்சாரம் செய்யததும் அதன் தோல்விக்கு முக்கிய காரணம்.

இலவசத்தை வெறுத்த மக்கள்

உற்பத்தி, சேவைகளில் கவனம் செலுத்துதல் மற்றும் புதிய காலத் தொழில்களுக்கான திறனை வளர்ப்பதன் மூலம் குஜராத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதாக பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. தெற்கு குஜராத் மற்றும் சௌராஷ்டிராவில் இரண்டு கடல் உணவுப் பூங்காக்களை அமைப்பதாகவும், இந்தியாவின் முதல் நீலப் பொருளாதாரத் தொழில்துறை தாழ்வாரத்தை இந்தப் பகுதியைச் சுற்றி அமைப்பதாகவும் பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசு நடத்தும் அனைத்து நலத்திட்டங்களின் பலன்களைப் பெற உதவும் குடும்ப அட்டை யோஜனாவையும் பா.ஜ.க உறுதியளித்தது. ₹2 லட்சம் வரை பிணையில்லாத கடனுடன் கூடிய தொழிலாளர்களுக்கான ஷ்ராமிக் கிரெடிட் கார்டுகள் என வாழ்க்கையில் உழைத்து முன்னேற துடிப்பவர்களை பா.ஜ.க'வின் திட்டங்கள் ஈர்த்தது.


குறிப்பாக பொருளாதார மையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைப்பை வழங்குவதற்காக சௌராஷ்டிரா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை கட்டத்தை உருவாக்குவதாகவும், பழங்குடியினரின் அனைத்து சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக வன்பந்து கல்யாண் யோஜனா 2.0 இன் கீழ் ₹1 லட்சம் கோடி செலவிடுவதாகவும் பா.ஜ.க உறுதியளித்துள்ளது.

இந்த முழுமையான வளர்ச்சி மாதிரி மாநில மக்களிடையே பா.ஜ.க மீதான நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகவும் நம்பகத்தனமானது, 505 வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை மடை மாற்றும் திராவிட மாடல் போல் இல்லை.

மேலும் முக்கிய பிரச்சனையாக குஜராத் பல ஆண்டுகளாக வறட்சி போன்ற சூழ்நிலையில் தத்தளித்தது, பெண்கள் ஒரு பானை தண்ணீர் எடுக்க பல மைல்கள் நடந்து சென்றனர். இதன் காரணமாக பா.ஜ.க அரசு சர்தார் சரோவர் அணையை வெற்றிகரமாக உயர்த்தியதும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும், குஜராத்தின் வறண்ட பகுதிகளுக்கு SAUNI யோஜனா மூலம் தண்ணீர் சென்றடைந்ததும் குஜராத் மக்கள் பா.ஜ.க மீது நம்பிக்கை வைக்க வழிவகுத்தது.

குஜராத் மக்களின் வாழ்க்கைத் தரம் பல ஆண்டுகளாக மாநிலம் இலவசங்களை வழங்காமல் மேம்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் கல்வி, சுகாதாரம் மற்றும் மின்சாரம் போன்ற துறைகளில் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசின, அதுவே அவர்களுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இப்படி களத்தில் உழைத்து மக்களுக்கு எது தேவை என புரிந்துகொண்டு, யார் பெருவாரியான மக்கள் என்பதை கண்டறிந்து அவர்களை ஈர்த்து என பா.ஜ.க வரலாற்று வெற்றியை சாதகமாக்கியுள்ளது. ஆனால் 505 வாக்குறுதிகளை கொடுத்து அதில் பாதியை கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி திரைத்துறையை அபகரித்து, ரியல் எஸ்டேட் துறையை கபளீகரம் செய்து, அமைச்சர்களிடம் 'சினிமா எப்படி இருந்தது?' என கேள்வி எழுப்பி, அரசு மருத்துவமனைகளை மக்கள் வரவே பயப்படும் அளவிற்கு செய்து, அமைச்சர்களை விட்டு மக்களை அடிமைபோல் நடத்தி ஆட்சி செய்யும் தி.மு.க அரசின் நாளேடான முரசொலி நரி எட்டி எட்டி குதித்து பார்த்துவிட்டு 'ச்சீ இந்த பழம் புளிக்கும்' எனக்கூறி சென்றதுபோல் ' களப்பணி செய்து மக்களை ஈர்த்து, வாக்காளர்களின் நம்பிக்கையை பெற்ற பா.ஜ.க'வின் வெற்றியை 'பயப்பட ஏதுமில்லை' என கூறுகிறது.

ஆமாம் இலவச அறிவிப்புகள் இல்லாமல், வாக்குறுதிகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என மக்களின் நம்பிக்கையை சம்பாதித்து களப்பணி செய்து பா.ஜ.க பெற்ற வெற்றி என்பது தி.மு.க விற்கு ஏதுமில்லை தான்! ஏனெனில் இது எல்லாமே தி.மு.க'விற்கு எதுவுமே முடியாததுதான்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News