நள்ளிரவில் உலக அளவிலான சதுரங்க போட்டி, பகலில் பள்ளி தேர்வு - அசால்ட்டாக அசத்தும் பிரக்ஞானந்தா!
By : Thangavelu
இந்தியாவை சேர்ந்தவரும் செஸ் உலகின் 'ஒண்டர் பாய்' 16 வயது ரமேஷ் பாபு பிரக்ஞானந்தா நேற்று செஸ்ஸபிள் செஸ் போட்டியின் அரையிறுதியில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த அனிஷ் கிரியை வீழ்த்தும்போது இரவு 2 மணி ஆகும். ஆனாலும் இன்று காலை நடைபெறும் 11ம் வகுப்பு தேர்வுக்கு 8.45 மணிக்கு அவர் பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.
இது தொடர்பாக பிரக்ஞானந்தா கூறும்போது: நான் காலை 8.45 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும். இருந்தாலும் இப்போதே இரவு 2 மணி என்றார். நேற்று இரவு அனிஷ் கிரியுடனான அரையிறுதிப் போட்டியில் முதல் கேம் டிராவில் முடிந்தது. 2வது ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே தடுப்பு மட்டும் மீதம் உள்ள நிலையில், நெதர்லாந்து வீரருக்கு பிரக்ஞானந்தா கிடுக்கிப்பிடி போட்டார் அனிஷ் கிரி தனக்கிருந்த ஒரே தடுப்பு வாய்ப்பையும் நழுவ விட எண்ட் கேம். இதன் பின்னர் செக் மேட் பிரக்ஞானந்தா முன்னிலையில் இருந்தார்.
3வது கேமில் கிரி வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலை. இந்த ஆட்டத்தில் சிலபல நகர்வுகளினால் இருதரப்புக்கும் சாதக பாதகங்கள் மாறி மாறி வந்தன. கடைசியில் அனிஷ் கிரி பிரக்ஞானந்தாவின் தடுப்பு வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் பிரக்ஞானந்தாவின் ஒரு மூவ் அனிஸ் கிரியின் வாய்ப்பை முறியடிக்க ஆட்டம் ட்ரா ஆக பிரக்ஞானந்தா 2-1 என்று முன்னிலை வகித்தார். அடுத்த நடைபெற்ற ஆட்டங்களில் அவரை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தார் பிரக்ஞானந்தா. மேலும், விடிந்தால் காலை தேர்வு என்றாலும் அதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.
Source: News 18 Tamilnadu
Image Courtesy: The New Indian Express