Kathir News
Begin typing your search above and press return to search.

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளைக் குவிக்கும் சீனா - அதிர்ச்சி தகவல்!

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளைக் குவிக்கும் சீனா - அதிர்ச்சி தகவல்!

Saffron MomBy : Saffron Mom

  |  6 July 2021 12:51 PM GMT

கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கப் பாதுகாப்பு துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், சீனா கண்டம் விட்டு கண்டம் தாவும் அணு ஆயுத ஏவுகணைகளைக் (ICBM) குவித்து வருவதாக தெரிவித்திருந்தது. சீனா இதுபோன்ற நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைக் கொண்டிருப்பதாகவும் வரும் காலங்களில் இது இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கடந்த புதன்கிழமை வெளியான செய்தியில், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை விட சீனா அதிகமாக ஏவுகணைகளை குவித்து வருவதாகவும், சீனாவின் பாலைவன மாகாணமான கன்சுவில், ஏமன் என்ற சிறு நகரத்திற்கு வெளியே பெரிய அளவிலான கட்டமைப்புகள் (structures) இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இது அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஜிலன்ட்டா பகுதியில் இருந்த ஏவுகணை குழிகளை (silos) ஒத்து இருந்தது. ஆனால் ஜிலன்ட்டாவில் ஒவ்வொரு கட்டுமானத்திலும் 16 சிலோஸ் இருந்ததாகவும், ஏமனுக்கு அருகில் இருக்கும் இந்த புதிய கட்டுமானத்தில் 145 இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், சீனாவின் மிகவும் புதியதான DF-41 வகை அணுஆயுத ஏவுகணை வார்ஹெட்சிற்காக கட்டப்பட்ட சிலோஸ் இவை என சந்தேகிக்கின்றனர். இதுவரை சீனா, சுமார் 100 கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் மற்றும் 250 முதல் 350 அணுஆயுதங்களை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. தற்பொழுது மற்றொரு 145 ஏவுகணை சிலோஸ் கண்டறியப்பட்டது உலகத்தை கவலையடைய செய்துள்ளது.

இத்தகைய சந்தேகத்திற்குரிய இடங்களை நிபுணர் ஜெப்ரி லெவிஸ் மற்றும் இவருடன் வேலை செய்யும் டெக்கர் என்பவரும் ஆய்வு செய்தனர். வடமேற்கு சீனாவில் வர்த்தக செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட இத்தகைய புகைப்படங்களில் முதலில் சிலோசை கண்டறிந்தனர்.


அமெரிக்கா முதலில் தாக்கினால், தாக்குப்பிடித்து அமெரிக்க ஏவுகணை பாதுகாப்புகளை தோற்கடிக்கும் அளவிற்கு சீனா தங்களுடைய அணுவாயுத சக்திகளை விரிவடைய செய்து வருகின்றனர். இந்த அறிக்கை மேலும் தெரிவிக்கையில் இத்தகைய சிலோக்கள், சீனா மேலும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை மறைக்க வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு தளமும் அதன் அண்டை தளத்தில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் பல தளங்கள் ஒரு குவிமாடம் போன்ற அமைப்பால் மறைக்கப்படுகிறது. சீனாவின் பிற பகுதிகளில் ஏவுகணை குழிகள் (silos) என்று அறியப்பட்ட கட்டுமான தளங்களிலும் இதே நடைமுறையை பின்பற்றுகின்றனர்.

மேலும் இந்த அறிக்கை தெரிவிக்கையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் 9,300 மைல்கள் தாண்டி தாக்கக்கூடியது, இது அமெரிக்கா நிலத்தை நேரடியாக தாக்கும் சக்தியை வழங்கும். இந்த வருட ஆரம்பத்தில் இந்த அமைப்புகளுக்கான பணி ஆரம்பித்தாலும், பல மாதங்களாக இதற்குரிய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மற்றொரு நிபுணர் ஜேம்ஸ் மார்ட்டின் கூறுகையில், சீன ராணுவத்திடம் சுமார் 600 கண்டம் விட்டு கண்டம் தாவும் மற்றும் கப்பல் ஏவுகணைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

1980-களில் சீனாவின் ஏவுகணை படை சிறியதாக இருந்தது. மேலும் இது அணு ஆயுதங்களை கொண்டு செல்வதற்காக மட்டுமே இருந்தது. இந்நிலை 1990-களில் மாறத் தொடங்கியது. சீனா ஆயுதமேந்திய குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை தைவான் எல்லைக்குள் பயன்படுத்தத் தொடங்கியது. இது எந்த ராணுவ மோதலிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

2000-ஆம் ஆண்டில் சீனாவில் 15 ஏவுகணை படைகள் இருந்தன. 2010ல் அந்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. இன்று 34-ஆக உள்ளது. இது 1960-கள் மற்றும் 80-களுக்கு இடையில் அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையில் நடந்த ஆயுதப் பந்தயத்தை நினைவூட்டுகிறது. புதிய ஆயுத கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் தனக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் சீனா எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News