Kathir News
Begin typing your search above and press return to search.

சீன-பாகிஸ்தான் நட்பு இந்தியாவிற்கு அச்சுறுத்தலா? பின்னணி என்ன?

சீன-பாகிஸ்தான் நட்பு இந்தியாவிற்கு அச்சுறுத்தலா? பின்னணி என்ன?

Saffron MomBy : Saffron Mom

  |  4 Jun 2021 3:32 PM GMT

நமது அண்டை நாடுகளுடன் நாம் கொண்டிருக்கும் உறவுகளும் தொடர்புகளும் சிக்கலானது. உருவான நாள் முதல் நம்முடன் விரோதம் பாராட்டும் பாகிஸ்தானையும், நம்முடைய வளர்ச்சியை கட்டுப்படுத்த நினைக்கும் சீனாவையும் அண்டை நாடுகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் அதைப் பொறுத்தே மற்ற நாடுகளுடனான தொடர்பு வடிவமைக்கப்படுகிறது. பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான், நேபாளம் என பிற அண்டை நாடுகளுடனும் நாம் கொண்டிருக்கும் நல்லெண்ண, வெளியுறவு, வர்த்தக உறவுகள் சீனா, பாகிஸ்தானைப் பொறுத்தே பெரும்பாலும் அமைகிறது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது? எங்கே செல்கிறது? இந்தியாவிற்கு அதனால் இருக்கும் சவால்கள் என்னென்ன? என்பதை ஆராய்வது அவசியம்.

சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராஜாங்க ரீதியிலான தொடர்புகள் 1951இல் தொடங்கியது. இந்த மே 22, 2021உடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கராச்சி நகரில் அமைந்துள்ள ஒரு அணு ஆயுத ஆலையின் இரண்டாவது யூனிட்டை திறந்து வைத்து பேசினார்.

இந்த ஆலையில் சீனாவால் வடிவமைக்கப்பட்ட ஹுஆலோங் ஒன் ரேடியேட்டரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த விழாவில் சீன- பாகிஸ்தான் நட்பின் அம்சங்களைப் பற்றி இம்ரான் கான் மிகவும் புகழ்ந்து பேசினார். சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை (CPEC) பற்றியும் பேசினார். சீனாவின் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையும் சீனாவிற்கு நன்றியுடன் இருக்கும் பாகிஸ்தானியர்கள் பேட்டிகளை பிரசுரித்தது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு "கடலைவிட ஆழமானது, மலைகளை விட உயரமானது, தேனை விட இனிமையானது" என்று பாகிஸ்தானில் பொதுவாகக் கூறப்படும் கருத்தை மறுபடியும் தெரிவித்தார். இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக புதிய தபால் தலையும் இஸ்லாமாபாத்தில் வெளியிடப்பட்டது. சீனாவின் சின்குவா நியூசும், சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் சாதனைகளைக் குறித்து குறும்படங்களை வெளியிட்டது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு இந்தியாவில் பேசுபொருளாக இருக்கிறது. இது இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவும் கருதப்படுகிறது.. சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டம் இதைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இதுவரை பொருளாதார கூட்டுறவு இருந்து வந்த நிலையில், தற்பொழுது ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. ஆயுத வர்த்தகம், கூட்டுப் பயிற்சிகள், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஆகியவையும் இதில் அடக்கம். இந்நிலையில் பாகிஸ்தானிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவை சீனாவின் பார்வையில் அறிந்துகொள்வது அவசியம். பாகிஸ்தான் போன்ற ஒரு தோல்வியடைந்த நாடு எதற்காக சீனாவின் ஆதரவை பெறுகிறது என்பது பெரிய கேள்வி?

சீனா-பாகிஸ்தானின் உறவுக்கு முக்கியமான காரணம் இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவுடன் கொண்ட போட்டியா? குறிப்பாக 1962 இந்திய சீன-போருக்குப் பிறகு, பாகிஸ்தான் சுதந்திரமாக, சக்தி வாய்ந்ததாக, ஸ்திரத்தன்மையுடன் இருப்பது தான் இந்தியாவிற்கு இரண்டு முனைகளிலும் அச்சுறுத்தலாக இருக்கும் என சீனா கருதியது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் 1950களில் ஆரம்பித்து நடந்த பனிப்போரில் பாகிஸ்தான் மேலை நாடுகளுடன் கூட்டணியில் இருந்தது. ஆனால் அப்போதும் அந்த கூட்டணியில் இருக்கும் ஒரு பலவீனமான சங்கிலியாகத் தான் பாகிஸ்தான் கருதப்பட்டது.

1960 மற்றும் 70களில் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் ஏற்பட்ட பிளவின் போது, சீனா பாகிஸ்தானுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டது. அமெரிக்கா-சீனாவிற்கு இடையிலான உறவில் பாகிஸ்தான் தூதர் போல் செயல்பட்டது. சீனா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தாங்கள் சர்வதேச அளவில் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த எல்லைப் பிரச்சினையும் இல்லை. அவை 1964ளிலேயே தீர்த்துக் கொள்ளப்பட்டது. கம்யூனிஸ்ட் சீனா உருவாக்கப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகும் அதனுடைய எல்லைகள் இன்னும் சர்ச்ச்சைகளில் தான் உள்ளது. ஹாங்காங், திபெத், க்ஸின்க்ஸியா மாகாணம் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

க்ஸின்க்ஸியா மாகாணத்தில் உய்க்குர் முஸ்லிம்களை சீனா துன்புறுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளும் கூட பாகிஸ்தானிடம் இருந்தோ, பல இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்தோ பெரிதாக எந்த எதிர்ப்பையும் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா பல நாடுகளுடன் தன்னுடைய எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதில் வலிமையான நாடுகளும், சீனாவிற்கு போட்டியாளராகவும் சீனாவின் நலன்களுக்கு எதிராக இருக்கும் நாடுகளும், பலவீனமான அடக்கம். இந்நிலையில் தெற்கு ஆசியாவில் சீனாவின் முக்கிய போட்டியாளரான இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் சீனாவிற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான தூதுவராக பாகிஸ்தான் செயல்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் உறவிற்கு உதவியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் நல்ல உறவைப் பேண வேண்டும் என்ற சீனாவின் முயற்சிகள் இந்தியாவைத் தாண்டியும் செயல்படுகிறது. பாகிஸ்தானிலேயே சீனாவின் பொருட்களுக்கும், தயாரிப்புகளுக்கும், திட்டங்களுக்கும் எதிர்ப்புகள் இருக்கிறது. இந்த உறவு முழுக்க முழுக்க நல்லவிதமாகவே செல்லும் என்றும் சொல்வதற்கில்லை.

பாகிஸ்தானின் பொருளாதார வலிமையின்மை, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, உள்ளூர் எதிர்ப்புகள் ஆகியவை சீனாவிற்கு பிரச்சினையாக வந்து சேரும். பாகிஸ்தானிற்கு சர்வதேச அளவில் உள்ள மோசமான பெயர் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமமான உறவு இல்லை எனக் காட்டுகிறது.

சீனாவின் ஒரு சாட்டிலைட் மாநிலம் போல பாகிஸ்தான் மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளும் வலம் வருகிறது. ஆனால் இது சீனாவிற்கு பாகிஸ்தானின் உறவு எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News