Kathir News
Begin typing your search above and press return to search.

கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவின் 'வளர்ச்சி உதவி' திட்டங்கள் அம்பலம்!

கடன் பொறியில் சிக்க வைக்கும் சீனாவின் வளர்ச்சி உதவி திட்டங்கள் அம்பலம்!

Saffron MomBy : Saffron Mom

  |  8 April 2021 5:19 AM GMT

உலகின் வலிமை மிக்க சக்திகளில் முன்னணியில் இருந்தாலும் சீனாவும் அதன் கொள்கைகளும் மர்மமாகவே உள்ளன. சீனாவின் நெருங்கிய கூட்டாளிகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் நாடுகளுக்கு கூட சீனாவின் கொள்கைகளின் தாக்கம் பற்றி அதிகம் தெரியாது.

சீனாவின் நடத்தை கூட மர்மத்தால் சூழ்ந்துள்ளது. இது உலகத்தினுடனான சீனாவின் உறவிற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் இருப்பதால் உண்மையான தரவுகள் இல்லாமல், சீனாவின் நோக்கங்களை யூகிக்க மட்டுமே முடிகிறது. இதன் விளைவாக அந்த நாட்டின் கேள்விக்குரிய ஒரு நிலைப்பாட்டை பொறுத்து முற்றிலும் எதிர்மறையான, மாறுபட்ட கூற்றுகள் யூகிக்கப்படுகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் போர்க்குணம் வளர்ந்துள்ளது. வர்த்தகம், தகவல், அடுத்த நாடுகளுக்கு செய்யும் உதவி, சுகாதார ஈடுபாடு என அனைத்தையும் ஒரு உள்நோக்கத்துடன் ஆயுதபாணியாக்கியே சீனா செயல்பட்டு வருகிறது.

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தவறு ஏதும் செய்ய முடியாத வளரும் நாடாக இருந்த சீனா, தற்போது உலகின் தவறான நிர்வாகங்களுக்கு மூலமாக பார்க்கப்படுகிறது. பொறுப்புள்ள ஒரு உலகளாவிய பங்குதாரராக தன்னுடைய நற்பெயரை அடிக்கோடிட்டு காட்டக்கூடிய ஒரு நேரத்தில் இருக்கும் சீனா, உலகின் வல்லரசு நாடுகளிடம் இருந்து ஒரு தாக்குதலை தூண்டுவதில் உறுதியாக உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையம், ஜெர்மனியின் கீல் நிறுவனம் மற்றும் சர்வதேச பொருளாதாரத்திற்கான நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் 24 குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுடன் சீனாவின் 100 கடன் ஒப்பந்தங்களை ஆய்வு செய்துள்ளனர். இது சீனாவின் முன்னுரிமைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் தங்களுடைய ஒத்துழைப்பிற்காக "கடன் பொறி" போன்ற விஷயங்கள் சில காலமாக விவாதத்தில் இருந்த பொழுதும், பெருகி வரும் உலக கடன் நெருக்கடியில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் சீனாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இது ஒரு முதல் அனுபவ ஆய்வாகும்.

சீனாவை வளரும் நாடுகளுக்கு வணிக ரீதியாக ஆர்வமுடன் கடன் வழங்குகிறது என்று இந்த அறிக்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதற்கான பல தடைகளை சீனா தாண்டியுள்ளது. அதிகப்படியான மறைமுக தன்மையுடன் இத்தகைய காண்ட்ராக்ட்கள் போடப்படுகின்றன. அதாவது லோன் விதிமுறைகளை வெளிப்படுத்தாமல் இருப்பது, ஒரு PRC (சீனா) அமைப்பின் நன்மைகளுக்கு எதிராக போகும் கடன்காரர்களுக்கு தண்டனைகள் கொடுப்பது போன்ற பல.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் உலகளாவிய உள்கட்டமைப்பு முதலீட்டு மூலம் கடன் வழங்கும் BRI (Belt and Road Initiative) திட்டம் தான் பெரும்பான்மையான கடன்களுக்கான முக்கியமான நங்கூரம் ஆகும். சீனா உலகின் மிகப் பெரிய கடனாளியாக வளர்ந்து வருகிறது.

வளர்ச்சி என்ற பெயரில் மிகவும் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதாகக் சீனா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் சீனாவின் அன்னிய செலவாணி விகிதம் அதிகரித்துள்ளது. நீடித்த கடன்களின் தன்மையும் மாறியுள்ளது. தங்களுடைய சொந்த முன்னேற்றத்தின் பாணியிலேயே இத்தகைய உதவி என்றும் மற்றவர்கள் இதே போல் வழங்க தயாராக இல்லை என்றும் சீனா கூறி வருகிறது.

சீனாவிடம் கடன் பெறும் வளரும் நாடுகளும், மற்ற இடங்களில் கடன் பெற முடியாமல் வேறு வழியில்லாமல் சீனாவிடம் கடன் பெறுகின்றன. மெதுவாக சீன கடன்களின் உண்மையான ரூபம் வெளிவருகிறது.

கடன் சுமை அதிகரித்து, அந்நாட்டின் மூலோபயமான சொத்துக்களை சீனா கைப்பற்ற முயற்சிக்கிறது. சீன காண்ட்ராக்ட்களில் வணிகரீதியான உள்நோக்கம் இருந்தாலும், சில வடிவங்கள் அரசியல் ரீதியாகவும் உள்ளன.

ராஜதந்திர ரீதியிலான உறவுகளை சீனா முறித்துக் கொள்ளும் என்ற பயம் கடன் வாங்கியவர்களிடம் எப்போதும் இருக்கிறது. சீனா இத்தகைய ஒப்பந்தங்களைக் கொண்டு பலவீனமான நாடுகளில் தாக்குகிறது.

இதற்கு சீனா பதில்கள் சொல்ல வேண்டி இருந்தாலும், மேலை நாடுகளும் மாற்று வாய்ப்பு கொடுக்காமல் இருந்ததற்கு அவர்களையும் நாம் கேள்வி கேட்க வேண்டும். வளரும் நாடுகள் சீனாவின் பிரச்சினைக்குரிய BRI திட்டத்திடம் செல்லவேண்டியிருக்கும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அது ஒரு திட்டம் தான் இருக்கிறது. இலங்கை முதல் பங்களாதேஷ் வரை மாற்று நிதிகளுக்கான ஆர்வத்தை காட்டியுள்ளன. ஆனால் முக்கிய உலக சக்திகள் இன்னும் தங்களுடைய உறுதிப்பாட்டை காட்டவில்லை.

ஒரு சமீபத்திய அறிக்கையில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியுறவு விவகார ஆலோசகர் கூறுகையில், "பங்களாதேஷின் சீன உறவு முதலீடுகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் கூட மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். செலுத்த முடிந்ததை விட அதிகமாக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாக நாங்கள் விரும்பவில்லை. வளரும் நாடுகள் உதவி கேட்கின்றன.

ஆனால் இந்தியா-ஜப்பான் தலைமையிலான ஆசியா ஆப்பிரிக்கா வளர்ச்சி யோசனை மிகவும் நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்தோ-பசுபிக் பகுதியில் தனியார் துறை தலைமையிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு அதிகரிப்பதற்காக அமெரிக்காவின் நிர்வாகம் 2019ல் ப்ளூ டாட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது நேரடியாக நிதி அளிப்பதில்லை" என்று கூறினார்.

இவையெல்லாம் சீனாவிடமிருந்து வளரும் நாடுகள் கடன் வாங்காமல் இருக்க போதுமானதாக இருக்குமா என தெரியவில்லை. சீனாவின் கொள்ளையடிக்கும் முன்னேற்ற திட்டங்களில் பல சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அவை மட்டும் தான் இருக்கின்றன. மாற்று நிதி ஆதாரங்கள் இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை. சீனாவின் ரகசிய கடன் ஒப்பந்தங்கள் உலகை ஒருவழியாக உசுப்பிவிட்டுள்ளன. சீனாவின் தீங்கு விளைவிக்கும் செல்வாக்கில் இருந்து விலகி ஒரு புதிய முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என்று பல நாடுகள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றார்கள்.

Reference: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News