சீனாவின் அதிகரித்து வரும் 'வயதான மக்கள் தொகை'- இந்தியாவைக் கண்டு சீனா பீதி?
By : Saffron Mom
சீனாவில் பல்லாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஒரு குழந்தைக் கட்டுப்பாடு கொள்கை திட்டம் இந்த வருட ஆரம்பத்திலிருந்து சீனாவில் மறுபடியும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்திய காலங்களில் இந்த சர்ச்சைக்குரிய கட்டாய ஒரு குழந்தை திட்டத்தை சீன அதிகாரிகள் திருப்பி வாபஸ் வாங்கிக் கொண்டு, தற்பொழுது 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால் பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி சீனாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து, பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தடுக்க வேறு பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தாலும் இத்தனை நாள் ஏற்பட்ட பாதிப்புகளை திருப்புவது என்பது தற்போதைக்கு நடவாத காரியம் என்றும் கருத்து கூறுகிறார்கள்.
சீனாவின் பொருளாதாரம் பெரும்பாலும் தொழிற்சாலைகளிலும், உற்பத்தி மையங்களிலும் சார்ந்திருக்கிறது அங்கே மலிவான தொழிலாளர்கள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது வளர்ந்து வரும் கூலியால், சீன தொழிற்சாலைகளின் ஈர்ப்பு குறைந்து விட்டது.
சீனாவின் மிகப்பெரிய பிரச்சினை அதன் வயதாகி வரும் மக்கள் தொகை.. சீனா, 1970களின் கடைசியில் ஒருகுழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சீனாவின் மக்கள்தொகை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1940களின் 500 மில்லியன் மக்கள் தொகையில் இருந்து 1980களில் ஒரு பில்லியனாக சீனாவின் மக்கள் தொகை அதிகரித்தது.
அடுத்த 40 வருடங்களில் சீனாவின் மக்கள் தொகை 40 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளது, அதாவது 1.4 பில்லியன். இதுவே அமெரிக்க மக்கள் தொகையை விட நான்கு மடங்கு அதிகம். மற்ற பொருளாதாரங்களை போலவே, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கு ஆகும் செலவுகள் காரணமாக சீனாவில் குழந்தை பெற்றுக் கொள்வது தவிர்க்கப்படுகிறது.
2016இல் இருந்து குடும்பங்கள் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கும் போதும், பிறப்பு விகிதம் 15 சதவிகிதம் 2020இல் குறைந்திருக்கிறது. உலக நாடுகளுடன் சீனா ஆக்ரோஷமான தன்மையை செயல்படுத்தி வரும் வேளையில், இந்தியாவில் இளைஞர் மக்கள்தொகை அதிகம் இருப்பதாலும் இதை சமாளிக்க சீனாவிற்கு இளமையான துடிதுடிப்பான மக்கள் தொகை வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மிக விரைவாக வழி என்றால் மற்ற நாடுகளைப் போல புலம்பெயர் தொழிலாளர்களை (immigrants) வரவேற்க வேண்டும். ஆனால் சீனாவில் தற்போதைக்கு அது நடக்காத காரியம். வேண்டுமென்றால் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி, இன்னும் மிஷின்கள் செயற்கை அறிவை பயன்படுத்தலாம்.
அடுத்த அடுத்த ஐந்து வருடத்திற்கு தன்னுடைய வயதாகி வரும் மக்கள்தொகையை கவனிப்பதே முன்னுரிமை என சீனா அறிவித்துள்ளது. அடுத்த பத்து வருடங்களில் 123.8 மில்லியன்கூடுதல் மக்கள் 55 வயதிற்கு மேற்பட்ட பிரிவுக்குள் நுழைவார்கள். மற்ற எல்லா வயது பிரிவினரையும் விட இதுவே சீனாவில் அதிகமாக இருக்கும். இதனால் இளமையான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் சவால்களையும், மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவின் சவால்களையும் சீனா எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
With Inputs from: MNBC