Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவின் தைவான், திபெத் தலை வலி - இந்தியா கடும் நிலைப்பாடு எடுக்கும் தருணமா?

சீனாவின் தைவான், திபெத் தலை வலி - இந்தியா கடும் நிலைப்பாடு எடுக்கும் தருணமா?

Saffron MomBy : Saffron Mom

  |  26 July 2021 2:39 AM GMT

இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி திபெத் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவின் 86வது பிறந்த நாளுக்கு வெளிப்படையாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். சாதாரண தருணங்களில் இது அவ்வளவு பெரிய நிகழ்வு ஒன்றுமில்லை. ஆனால் சீனாவுடனான எல்லைப் பதற்றங்களுக்குப் பிறகு இத்தகைய வாழ்த்துக்கள் பல கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தலாய்லாமாவிற்கு தொலைபேசியில் 86வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும், அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். 2015-க்கு பிறகு தற்போதுத தலாய்லாமாவின் பிறந்தநாளுக்கு வெளிப்படையாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

2014-ஆம் ஆண்டு தன்னுடைய பதவி பிரமாணத்திற்கு நாடுகடத்தப்பட்ட திபெத் பிரதமர் லாங் சேவையும் பிரதமர் மோடி அழைத்திருந்தார். 2017-ஆம் ஆண்டில் தலாய்லாமாவை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்திருந்தார். ஆனால் டோக்லாம் நெருக்கடிக்கு பிறகு திபெத்துடனான உறவுகள் சற்று குறைந்து விட்டது. தலாய்லாமா இந்தியாவிற்கு வந்த அறுபதாவது வருடத்தைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் அதிகாரப்பூர்வமாக கலந்துகொள்ள வேண்டாம் என்று 2018-ஆம் ஆண்டில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நிலைமை மாறிவிட்டது. கொரானா நிலைமை இன்னும் கொஞ்சம் கட்டுக்குள் வந்தவுடன், தலாய்லாமா பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 100 ஆண்டுகளான கொண்டாட்டங்களுக்கு இந்தியா எந்த வாழ்த்துக்களும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் சீன தலைமை கவனித்துக் கொண்டுதான் இருக்கும்.

ஹாங்காங், தைவான், திபெத், ஜின்ஜியாங் என பல விவகாரங்களில் சீனா ஆக்ரோஷமான முறையை கடைபிடிக்கிறது. திபெத், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியலில் ஒரு முக்கியமான புள்ளி ஆகும். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், திபெத்தின் மீது புதிய கவனங்கள் குவிந்துள்ளது. தலாய்லாமாவிற்குப் பிறகு வரும் காலகட்டத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள சீனா முனைகிறது. திபெத்தின் சுயாட்சிக் கோரிக்கைகளை தொடர்ந்து மறுப்பதோடு மட்டுமல்லாமல், தலாய்லாமாவிற்கு பிறகு வரும் ஆன்மீகத் தலைவர் சீனாவினால் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் தற்போதைய தலாய் லாமாவை திபெத் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு அடையாளச் சின்னமாக பார்க்கும் வேளையில், சீனா அவரை 'ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயாக' பார்க்கிறது. இந்தியாவில் இருக்கும் திபெத்திய அகதிகளைக் கொண்டு பெரும்பாலும் செயல்படும் சிறப்பு எல்லை காவல் படையின் திறமையைக் கண்டு கவலைப்படும் சீனா, சீன ராணுவத்திலும் திபெத்தியர்களை சேர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியாவைப் பொருத்தவரை 'ஒரே சீனா' என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று இறங்கி வர வேண்டி இருக்கலாம். இந்தியா தனது நிலைப்பாட்டை மறு சிந்தனை செய்ய வேண்டும். இந்தியாவின் அடிப்படை நலன்களை சீனா கண்டுகொள்ளவில்லை என்றால், இந்தியாவும் பழைய ஏற்பாடுகளில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். பழைய நிலைப்பாட்டில் இருந்து இந்தியா நகரலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளன.

திபெத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் இந்தியா அந்தளவு தெளிவான நிலைப்பாடு எடுக்கவில்லை என்று அதிருப்தி அடைந்துள்ளனர். இந்தியா இந்த விவகாரத்தில் திபெத்திற்கு துணை நின்றால் உலக நாடுகளின் கருத்துகளை திபெத்திற்கு ஆதரவாக திருப்பலாம்.

கால்வான் மோதலுக்குப் பிறகு மற்றும் தைவான், திபெத் ஆகிய இரு விவகாரங்களிலும் இந்தியா மறுபரிசீலனை செய்யவேண்டும். எல்லை பிரச்சனைக்குப் பிறகு இந்திய-சீனாவின் பழைய ஏற்பாடுகளும் நிலைகுலைந்ததா? என்பதைப் பற்றி கேள்வி எழுப்பும் தருணம் வந்துவிட்டது.

With Inputs From: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News