Kathir News
Begin typing your search above and press return to search.

அறநிலையத்துறை அலட்சியத்தால் சேதம் அடையும் சோழர் காலத்து கோவில்கள்..

அறநிலையத்துறை அலட்சியத்தால் சேதம் அடையும் சோழர் காலத்து கோவில்கள்.

அறநிலையத்துறை அலட்சியத்தால் சேதம் அடையும் சோழர் காலத்து கோவில்கள்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 May 2023 2:52 AM GMT

தமிழகத்தில் பல்வேறு பழமையான கோவில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது ஆனால் கோவில்களின் பழமைகளை பாதுகாக்க வேண்டிய அறநிலையத்துறையை அவற்றை செய்தப்படுத்தும் பல்வேறு செயல்களை ஈடுபடுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் தற்போது, சோழர் கால கல்வெட்டுகளை சிதைக்கும் அறநிலையத்துறை செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது என்று மக்கள் கருத்து. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அருகில் உள்ள சிவா ஆலயம் உள்ளது. இங்கு மே 15 2023 அன்று 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற அருள்மிகு ரத்தின கிரிஸ்வரர் சிவன் திருக்கோவிலில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் இந்த ஒரு கோவில் இருந்து வருகிறது. மலையின் மேல் உள்ள சிவன் தமிழகம் முழுவதும் சுமார் பத்து லட்சம் குடும்பங்களுக்கு குடிப்பாட்டு தெய்வமாக அதாவது குலதெய்வமாக வழிபடப் பட்டு வருகிறார். அய்யர்மலை திருக்கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 50க்கும் மேற்பட்ட சோழர் காலத்து கல்வெட்டுகள் இடம் பெற்று இருக்கிறது. திருக்கோவிலில் வழிபாடு காவிரி தீர்த்த திருமஞ்சனம், நந்தா விளக்கு முதலிய சிவப்பணிகள் தொடர்ந்து நடைபெற சோழ மன்னர்கள் மற்றும் பக்தர்களால் நிலம் முதலியவை இந்த திருக்கோவிலுக்கு நன்கொடைகளாக கொடுக்கப்பட்டது.


இவைகள் குறித்த விபரங்கள் அந்த கோவிலில் உள்ள கல்வெட்டுக்களால் இன்றளவும் நிலைத்து வருகிறது. இந்த கல்வெட்டுகள் ஆலயத்தின் தொன்மை மற்றும் சிறப்பை பறைசாற்றும் வகையில் அமைந்து இருக்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய கல்வெட்டுகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் அறநிலையத்துறை தற்பொழுது கோவிலின் பல்வேறு வேலைகளுக்காக இந்த ஒரு கல்வெட்டை சேதபடுத்தும் நிகழ்வுதான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிலில் மின்சார வயரிங் செய்யும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது அந்த ஒரு வேலைகளுக்காக கல்வெட்டுகள் இடம் பெற்றிருக்கும் சுவர்களில் பெரிய துளைகள் போடப்பட்டு இருக்கிறது. ஆலயத்தின் தொன்மை மற்றும் சிறப்பை பறைசாற்றும் கல்வெட்டுகளை அறநிலையத் துறையை இப்படி செய்த படுத்தலாமா? பழமையான சுவரில் கல்வெட்டுக்கள் மேல் ட்ரில்லிங் துளைகள் மற்றும் பெரிய அளவில் ஆணிகளை அடித்து கல்வெட்டுகளை சேதம் படுத்தி வருகிறார்கள்.


அறநிலையத்துறை மேல் அதிகாரிகள், தொல்லியல் துறையினர் உடனடியாக தலையிட்டு இந்த கல்வெட்டுக்கள் சிதைவடையாமல் தடுத்து ஆலயத்தின் பழமை மற்றும் கல்வெட்டுக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தங்களுடைய எதிர்ப்பை இதன் மூலம் மக்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.


ஏற்கனவே இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்து சமயத்துக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக தி.மு.க அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தி.மு.க அரசு, மதச்‌சார்பின்மையையும்‌, தங்கள்‌ கட்சிக்‌ கொள்கைகளில்‌ ஒன்றான போலி நாத்திகத்தையும்‌ குழப்பிக்‌கொண்டு, தொடர்ந்து இந்து மத நம்பிக்கைகளிலும்‌, வழிபாட்டு முறைகளிலும்‌ தலையிட்டுக்‌ கொண்டிருக்கிறது. அதன்‌ அடுத்தகட்டமாக தற்போது, காரணமேயின்றி அரசியலமைப்புச்‌ சட்டம்‌ மக்களுக்கு வழங்கியிருக்கும்‌ அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையையும்‌ தடுத்து நிறுத்த முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் பாதுகாக்கப்பட வேண்டிய புராதண கோவிலை இப்படி அறநிலையத்துறை பராமரிப்பு என்ற பெயரில் முறையாக கையாளாமல் சீரழிப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கடும் கோபம் ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News