இயேசு கிருஸ்து அராஜகத்தின் அடையாளம் பகுதி – 43 !
By : Dhivakar
கிருஸ்தவ மதத்தின் உண்மைத் தன்மை பற்றிய பல வலுவான சந்தேகங்கள் மேற்கத்திய நாடுகளில் எழத்தொடங்கிவிட்டது. பால்ட்மேன் போன்ற நபர்கள் என்னதான் சால்ஜாப்புக் கதைகளை கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள மேற்கத்திய நாட்டினர் தயாராக இல்லை. அறிஞர் 'கொயென்ராட் எல்ஸ்ட்' (Koenraad Elst) கூறும்போது, 'மேற்கத்திய நாடுகளில் கிருஸ்தவ மதம்' தொடர்ந்து அழிந்து வருவதை புரிந்துக்கொள்ள முடியும் என்கிறார். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கிருஸ்தவ மதம் வேகமாக அழிந்து வருவதை நாம் பார்க்க முடியும். அங்கே பல நாடுகளில் சர்சுகளுக்கு வருவோரின் எண்ணிக்கை 10 சதவிகிதத்திற்குக் கீழ்தான் உள்ளது. இன்னும் சில சர்சுகளில் வெறும் 5 சதவிகித மக்கள் மட்டுமே சர்சுகளுக்குச் செல்பவர்களாக உள்ளனர்.
சொல்லப்போனால் பாதிரியார், கன்னியாஸ்திரி போன்ற வேலைகளில் ஈடுபட ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கைக் கூட குறைந்து வருகிறது. இது நிச்சயம் கிருஸ்தவ மதம் அழிவுப்பாதையை நோக்கிச் செல்வதையே காட்டுவதாகவும் உள்ளது. பாதிரியார்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் ஒரே பாதிரியார் பல சர்சுகளிலும் ஷிஃப்ட் முறைப்படி செல்லவேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல… வயது மூப்பு காரணமாக ஒருசில சர்சுகளில் பாதிரியார்கள் டிக்கெட் வாங்கும்பட்சத்தில், வேலை பளூ அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கத்தோலிக்க பாதிரியார்களின் சராசரி வயது 55. ஆனால் நெதர்லாந்து நாட்டில் 62 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. வயது மேலும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்படிப்பார்த்தாலும் பாதிரியார் வேலைக்கு வர தற்போது யாரும் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மொத்ததில் கிருஸ்தவ மதத்தின்மீது நம்பிக்கைக் கொண்டு அந்த மதத்தைப் பின்பற்ற யாரும் தயாராக இல்லை என்பதும் புரிகிறது.
சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மதமாற்ற பாதிரியார்கள் சென்றக் காலம் போய், தற்போது இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குப் பாதிரியார்கள் செல்லும் காலம் வந்துவிட்டது. அதுவும் சர்ச் நிர்வாகத்தைக்கூட நடத்த ஆள் இல்லாத நிலையை சமாளிப்பதற்காகத்தான். மற்றபடி மீண்டும் கிருஸ்தவ மதத்தை இந்திய பாதிரிகள் மக்களிடம் விதைக்கும் பேச்சுக்கே தற்போது இடமில்லை. பத்திரிக்கையாளர் Arthur J. Pais கொடுத்த ஒரு தகவலின்படி, '5000 வெளிநாட்டுப் பாதிரியார்கள் காண்டிராக்ட் முறையில் அமெரிக்க பிஷப்களால் வரவழைக்கப்பட்டிருந்தனர். இதில் 500 பேர் இந்தியர்கள். இது தவிர 250 இந்திய பாதிரியார்கள் ஏற்கனவே முதுகலைப் பட்டப்படிப்பு, பி.எச்.டி படித்து வருபவர்களாகவோ அல்லது பகுதி நேரமாக சர்சுகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகள், மறுவாழ்வு மையங்களில் வேலை பார்த்து வருபவர்களாகவோ இருந்து வந்ததாக குறிப்பிடுகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளும் தற்போது அமெரிக்காவிற்கு மிகவும் தேவைப் படுபவர்களாக உள்ளனர். பெரும்பாலான கன்னியாஸ்திரிகள் மதர் தெரசா கான்வெண்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் பிராக்ஸ் மற்றும் சிகாகோ நகரங்களில் உள்ள சேரிகளில் பணிபுரிகின்றனர். அதாவது பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் கண்டுக்கொள்ளத பகுதிகள் இவை. அதேநேரம் தற்போது சற்று வலிமை வாய்ந்த அமைப்பாக கத்தோலிக்க கிருஸ்தவம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் பலமாக உள்ளது.
உலக கிருஸ்தவ என்சைக்ளோபீடியாவில், கூறப்பட்டுள்ள ஒரு கருத்துக்கணிப்பின்படி, 'கடந்த 60 ஆண்டுகளில் கிருஸ்தவம் மேற்கத்திய நாடுகள் மற்றும் கம்யூனிஸ்டு நாடுகளில் மோசமான அழிவை சந்தித்து வந்துள்ளது. ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவில், கிருஸ்தவ மதத்திலிருந்து வெளியேறி மதமற்றவராகவோ அல்லது பிற மதங்களுக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்கு 18,20,500 பேர் என்று சொல்லப்படுகிறது. வெறும் சர்சுகளின் கணக்கை எடுத்துக்கொண்டால் அதன் எண்ணிக்கை 22,24,800 ஆக அதிகரித்துக் காணப்படுகிறது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஒரு ஆண்டுக்கு சர்சு செல்லும் மக்களின் எண்ணிக்கை 27,65,100 ஆக குறைந்துள்ளது. எப்படிப் பார்த்தாலும் இந்தியா மாதிரியான பிற நாடுகளில் இவர்கள் மதம் மாற்றும் எண்ணிக்கையை விட இது அதிகம்!
சரி… அப்போது கிருஸ்தவம் மொத்தமாக செயலிழந்துவிட்டதா? என்று கேட்டால் அங்கே ஒரு இக்கு வைக்க வேண்டியிருக்கிறது.
மேற்கத்திய நாட்டு மக்கள் கிருஸ்தவத்தை ஒதுக்கிவிட்டாலும், மேற்கத்திய அரசாங்கம் கிருஸ்தவத்தை விடுவதாக இல்லை.
அதற்கு என்ன காரணம்? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.