Kathir News
Begin typing your search above and press return to search.

திரைத்துறையில் அதிகரித்து வரும் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம்!

திரைத்துறையில் அதிகரித்து வரும் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம்!

ShivaBy : Shiva

  |  1 March 2021 2:39 AM GMT

முன்னர் வெளிப்படையாக மதமாற்றத்தில் ஈடுபட்டுவந்த கிறிஸ்தவ மிஷனரிகள் தற்போது மறைமுகமாக மக்களிடையே பிரபலமான முக்கியஸ்தர்களின் உதவியுடன் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்கள் மற்றும் இந்து மதத்துக்கு எதிரான, அவர்களை இழிவுபடுத்தும் விஷயம் என்றே மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இந்து மதத்தைப் பற்றிய தவறான, இழிவான கருத்துக்களை வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல் பல்வேறு துறைகளின் மூலம் மிஷனரிகள் புகுத்தி வருகிறார்கள். இதில் மிக முக்கிய பங்காற்றுவது சினிமா துறை!
கிறிஸ்தவ மிஷனரிகள் என்றவுடன் முருகப்பெருமானை சாத்தான் என்று கூறிய மோகன் சி லாசரஸ், ஒரு மலையை ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என்று மாற்றி தற்போது வருமான வரித்துறையிடம் சிக்கி தவித்து வரும் பால் தினகரன், இந்துக்கள் மதம் மாறவில்லை என்றால் அவர்களின் மூக்கில் குத்துங்கள் என்று கூறிய எஸ்ரா சற்குணம் போன்றவர்கள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறார்கள்.

ஆனால் இவர்கள் மட்டும்தான் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்களா? இவர்கள் மட்டும் தான் இந்து மதத்துக்கு எதிரானவர்களா? தாங்கள் இருக்கும் துறைகளில் பணியாற்றிக் கொண்டே இந்து மதத்தை இழிவுபடுத்தி இந்து மதத்தில் இருப்பவர்களை மதம் மாற்றும் நோக்கத்துடன் செயல்படுபவர்கள் அனைவரும் கிறிஸ்தவ மிஷனரிகளே.

குறிப்பாக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் திரைத்துறையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவை எடுத்துக் கொள்ளலாம். இவர் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் மாஸ்டர் படத்திற்கு விளம்பரம் தேடி தந்தாரோ இல்லையோ இயேசு சபைக்கும் இந்தியாவில் மதமாற்ற வந்த மதர் தெரசாவிற்கு கொடுத்த விளம்பரங்கள்தான் அதிகமாக இருந்தது.

இசைவெளியீட்டு விழாவே இப்படி இருந்தது என்றால் படம் எப்படி இருக்கும் என்று நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சியே காத்திருந்தது. கதாநாயகன் விஜய் ஒரு கிறிஸ்தவர், வில்லன் விஜய் சேதுபதி ஒரு இந்து. இதேபோல் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பவர் கஞ்சா விற்பது போலவும், கோவிலில் சாமி கும்பிடாமல் அனைவரும் குடித்துவிட்டு கூத்தாடுவது போலவும் பூசாரியை அடிப்பது போலவும், சூடம் காட்டும் தட்டை விஜய் சேதுபதி எட்டி உதைப்பது போலவும் வடிவமைக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே இந்து மதத்தை இழிவுபடுத்துவதாகவே இருந்தது.


இதே போன்று விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு வாக்குவாதம் நடைபெறும்போது விஜய்சேதுபதிக்கு கொம்பு இருப்பது போன்று ஒரு காட்சியை வடிவமைத்து இருப்பார்கள். கிறிஸ்தவ மதத்தில் சாத்தான்களுக்கு தான் கொம்பு இருக்கும் இதனைக் குறிப்பிடும் விதமாகவே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு காட்சி வைத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி நெற்றியில் குங்குமம் வைத்து கழுத்தில் துளசி மாலை அணிந்து பயபக்தியான இந்து போல் காட்சியளிப்பார். கிறிஸ்தவர்கள் இந்து கடவுள்களை சாத்தான்கள் என்று பல ஜெப கூட்டங்களில் குறிப்பிடுவதை நாம் அனைவரும் அறிந்தது தான்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிட்கோவின் வளர்ச்சி அசாதாரணமானது. முதலில் இவர் லயோலா கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இந்த லயோலா கல்லூரி தான் இந்துக்களையும், இந்தியாவையும் அசிங்கப்படுத்தி ஒரு கண்காட்சியை நடத்தியது. இந்த கல்லூரியில் பேராசிரியராக இருந்து கொண்டு INDAV என்ற நிறுவனத்தை தொடங்கி கோடீஸ்வரர் ஆகியுள்ளார். இதற்கு பக்கபலமாக இவருக்கு இயேசு சபை விளங்கியுள்ளது. இதையேதான் அவர் மாஸ்டர் பட இசைவெளியீட்டு விழாவில் ஒப்புக் கொண்டிருந்தார்.


ஒரு கல்லூரி பேராசிரியராக இருந்த இவர் எப்படி கோடீஸ்வரர் ஆனார் என்ற கேள்வி எழுவது சகஜம். சேவியர் பிரிட்டோவிற்கு சேவியர் அல்போன்ஸ் என்ற சகோதரர் இருக்கின்றார். இவர் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல்வராக இருந்தார். அதே கல்லூரியில் பணியிலிருந்த மேரி ராஜசேகரன் என்ற பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து மாட்டிக்கொண்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைகள் இருக்கும் அதே வேளையில் தமிழ்நாடு மகளிர் ஆணையம் லயோலா கல்லூரிக்கு ₹64 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறு நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


சேவியர் பிரிட்டோ நடத்தி வரும் பள்ளியில் குழந்தைகள் முழு கட்டணம் செலுத்தவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்தி அது செய்தியானது. இப்படிப்பட்ட பின்னணியை கொண்டவர்கள் தான் இந்து மதம், கடவுள்கள் மற்றும் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் கதைக்களம் ஒரு சிறார் காப்பகம். நாட்டில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இத்தகைய காப்பகங்கள் கிறிஸ்தவர்களால் தான் நடத்தப்படுகின்றன. ஆனால் அந்த உண்மையை மறைத்து முழுக்க முழுக்க இந்து மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களையே வில்லனாகக் காட்டி கிறிஸ்தவ மதம் தான் முற்போக்கு சிந்தனையுள்ள மதம் என்று மறைமுகமாக கருத்துக்களை திணித்திருப்பார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News