Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவுக்கு எதிராகவும் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிராகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவ அமைப்பு.!

இந்தியாவுக்கு எதிராகவும் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிராகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவ அமைப்பு.!

இந்தியாவுக்கு எதிராகவும் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிராகவும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கிறிஸ்தவ அமைப்பு.!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  11 Dec 2020 6:32 PM GMT

Persecution Relief என்ற கிறிஸ்தவ அமைப்பும் அதன் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஷிபு தாமஸ் என்பவரும், சாதாரண நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் ஒடுக்கப்படும் நிகழ்வுகள் என்று வேண்டுமென்றே திரித்து USCIRF அமைப்புக்கு தவறான தகவல்களை அளித்து வந்த உண்மை சில நாட்களுக்கு முன்பு வெளிக்கொண்டு வரப்பட்டது. சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரைக் கெடுக்க பொய்களைப் பரப்பி வந்த ஷிபு தாமஸ் தற்போது மற்றொரு விஷயத்தில் சிக்கியுள்ளார்.

Abundant Life Society என்ற மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இயங்கும் அரசு சாரா தொண்டு நிறுவனம் சட்ட விரோதமாக குழந்தைகள் காப்பகங்களை நடத்துவதாகத் தெரிய வந்துள்ளது. Persecution Relief அமைப்பின் தலைவரான ஷிபு தாமஸ் தான் இந்த தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கிறார்.

‘Abundant Life Society’ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரப்பட்டுள்ள தகவல்களின் படி, போபாலில் உள்ள தங்களது மையங்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உறைவிடம் மற்றும் கல்வி வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ம.பி அரசின் சுற்றுலா மேம்பாட்டுத் துறையுடன் கல்வி சார்ந்த திட்டங்களிலும் இணைந்து பணியாற்றுவதாகத் தெரிகிறது.

இந்த Abundant Life Society அமைப்பு ஒரு FCRA உரிமம் பெற்ற வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு. முன்னர் குறிப்பிட்ட அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட Persecution Relief அமைப்பிடமிருந்து Abundant Life Society நன்கொடை பெறுகிறது. இரண்டு அமைப்புகளுக்கும் இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஷிபு தாமஸ் தான் தலைமை வகிக்கிறார்.

இந்தியாவில் ஒடுக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவதாகக் கூறி Persecution Relief அமைப்பு, இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைத் திரித்து அறிக்கை தயாரித்து சர்வதேச மற்றும் அமெரிக்க அமைப்புக்கள் மற்றும் கிறிஸ்தவ நிறுவனங்களிடையே இந்தியாவைப் பற்றி மோசமான பிம்பத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.

குறிப்பாக மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடும் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளை பெரிதுபடுத்தி கிறிஸ்தவர்கள் இந்தியாவில் நிம்மதியாக வாழவே முடிவதில்லை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த இந்த அமைப்பு முயல்கிறது.

Persecution Relief உடன் இணைந்து பணியாற்றும் Federation of Indian American Christian Organizations of North America (FIACONA) போன்ற அமைப்புகள், கட்டாய மதமாற்றத்தை ஆதரிப்பதோடு அதற்காக அமெரிக்க சட்டப் பிரதிநிதிகளிடம் லாபி செய்கின்றன. மேலும் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கவும் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. 2019ஆம் ஆண்டின் ஆண்டறிக்கையில் Persecution Relief அமைப்பு, குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் கொண்டு வந்த விதிகளை "கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறை" என்று குறிப்பிட்டது.

அந்த அறிக்கையில், 2019ஆம் ஆண்டு POCSO சட்டத்தின் கீழ் கிறிஸ்தவர்கள் மீது பல போலி வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் எனவே வேண்டுமென்றே கிறிஸ்தவ அமைப்புகளையும், அனாதை இல்லங்களையும் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. POCSO சட்டத்தில் பொய்ப் புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் விதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ‘Abundant Life Society’ அமைப்பு சட்ட விரோதமாக குழந்தைகள் காப்பகங்கள் நடத்தி வரும் நிலையில் வேண்டுமென்றே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகளை அது பற்றி வெளியில் கூறுவதற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்த முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சாதாரண நிகழ்வுகளை திரித்து கிறிஸ்தவர்கள் மீதான அடக்குமுறை என்று பொய்களைப் பரப்பும் ஷிபு தாமஸ் இந்த அமைப்புக்கு தலைமை வகிப்பதால், இதன் குழந்தைகள் காப்பகங்களில் உண்மையில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து LRPF அமைப்பு ‘Abundant Life Society’ பற்றி விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம், குழந்தைகள் உரிமைகள் ஆணையம் மற்றும் மத்தியப் பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News