Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூரில் அம்மன் கோயில் அருகே தேவாலயம் ! அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், ஏகபோகமாக நடைபெறும் கட்டுமான பணிகள் !

அதிகாரிகள் தேவாலயம் கட்டப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், இன்றும் அந்த கட்டுமான பணிகள் தொடர்கிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் ?

திருப்பூரில் அம்மன் கோயில்  அருகே தேவாலயம் ! அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், ஏகபோகமாக நடைபெறும் கட்டுமான பணிகள்  !
X

DhivakarBy : Dhivakar

  |  28 Sep 2021 10:00 AM GMT

இப்பொழுதெல்லாம் கிறிஸ்துவ ஜெப கூட்டங்கள் பொது இடங்களில் நடப்பது வாடிக்கை ஆகிவிட்டது. பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கடை வீதிகள் என பொது மக்கள் கூடும் இடங்களாக பார்த்து ஜெப கூட்டங்களை நடத்துகின்றனர். அந்த கூட்டங்கள் நடக்கும் விதம் பொது மக்களின் கவனத்தை பெரும் வகையில் நடத்துவர். ஒருவர் தன் குரலை ஓங்கி ஒளித்து அந்த கூட்டத்தை வழி நடத்துவார். அவரது குரல் சத்தம் ஜெப கூட்டங்களில் மட்டுமில்லாமல் பொது இடங்களில் இருக்கும் பொது மக்களையும் அந்த கூட்டத்தில் மேல் கவனம் பெறவைக்கும். அதுவே அவர்களது நோக்கமும் ஆகும்.

மாற்று மதத்தினரை கிறிஸ்துவத்துக்குள் கொண்டு வர, பொது இடங்களில் ஜெப கூட்டம் நடத்துவது, தேவாலயம் நிறுவுவது போன்ற செயலகளில் மத மாற்றம் செய்யும் கும்பல் ஏக போகமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூரில் ஒன்றரை வருடமாக பல எதிர்ப்புகளை மீறி அம்மன் ஆலயம் அருகாமையில், அரசாங்க இடத்தில், தேவாலயம் ஒன்றை கிறிஸ்துவ மதத்தினர் நிறுவி வருகின்றனர்.

கடந்த மாதம் ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்ட விஸ்வ இந்து பரிஷத் தலைவர் டீ ராஜகோபாலன் அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

அந்தப் புகாரில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி சேனாபதிபாளையத்தில் கொங்கலம்மன் கோயில் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் கிறிஸ்துவ மதத்தினர் தங்களுக்காக ஜெபக்கூட்டம் நடந்த ஆலையம் ஒன்றை நிறுவி வருகின்றன என்றும், கோயில் அருகே மாற்று மதத்தினரின் தேவாலயம் அமைவது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்றும், இந்தப் பிரச்சனையை ஏற்கனவே எடுத்துக் கூறி 2020 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி புகார் அளித்ததன் விளைவாக தேவாலயம் கட்டுமான பணிகள் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டன என்றும், ஆனால் மீண்டும் அந்த தேவாலய பணிகள் தொடங்கி இருப்பதாகவும், அதனை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இன்றும் அந்த தேவாலயம் கட்டும் பணி நடந்தேறி தான் வருகிறது.

இரண்டு முறை மனு கொடுத்தும்,சட்டப்படி நடவடிக்கை எடுத்தும், இன்றும் அந்த தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருவதை எதிர்த்து, நேற்று சேனாபதிபாளையத்தில் இந்து முன்னணி மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.






ஒரு புறம் அந்த தேவாலயம் கட்டப்பட்டு வரும் நிலம் அரசுக்கு சொந்தமான நிலம், மற்றோரு புறம் அம்மன் கோயிலுக்கு அருகாமையில் அந்த தேவாலயம் அமைவது. இந்து இரண்டையும் பொருத்திப் பார்க்கையில் அந்த தேவாலையும் அந்த இடத்தில் கட்டப்படுவது உத்தமம் இல்லை.

அதிகாரிகள் தேவாலயம் கட்டப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், இன்றும் அந்த கட்டுமான பணிகள் தொடர்கிறது என்றால் அதற்க்கு என்ன காரணம் ?

Image : OpIndia

Source : Dinamani , Hindu Munnani ( Twitter Handle)

Next Story
கதிர் தொகுப்பு
Trending News