Kathir News
Begin typing your search above and press return to search.

மாவீரர் அலெக்சாண்டர் பற்றி வியக்கவைக்கும் தகவல்கள்.!

மாவீரர் அலெக்சாண்டர் பற்றி வியக்கவைக்கும் தகவல்கள்.!

மாவீரர் அலெக்சாண்டர் பற்றி வியக்கவைக்கும் தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Oct 2020 3:16 PM GMT

உலக சரித்திரத்திலேயே இவருக்கு இணையாக ஒரு மாவீரனை அடையாளம் காண்பது அரிது. 33 வயதுக்குள் அன்றைய மனிதன் அலெக்சாண்டர் இந்த உலகில் பாதி வென்றவர். அந்த மகாவீரர் தான் அலெக்சாண்டர். மிகப்பெரிய வீரர் மட்டுமல்ல. இவர் மிக உயர்ந்த மனிதரும் கூடவே. அன்றைய மன்னர்கள் எல்லாம் ஒரு நாட்டை வெற்றி கொண்டு விட்டால், அந்த மன்னர்களையும், அந்த நாட்டு மக்களையும் அடிமைகளை விட மோசமாக நடத்துவார்கள். ஆனால் அலெக்சாண்டர் தான் வெற்றி கொண்ட நாடுகளை அப்படி அடிமைகளாக நடத்தியதே கிடையாது.




இந்திய நாட்டின் வளத்தை பற்றியும், நிறைந்த செல்வத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு இந்தியா முழுவதும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அலெக்ஸாண்டர் நினைத்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. ஜீலம் நதிக்கரையில் நடந்த போரில் அலெக்ஸாண்டர் இந்திய மன்னரான போரசை வென்றார்.
சிறைப்பட்டு கைதியாக நின்ற போர் அரசை பார்த்து, நான் உங்களை எப்படி நடத்தவேண்டும்? என்று கேட்டார். அதற்கு போரஸ் வீரத்துடன் ஒரு மன்னரை போல நடக்க வேண்டும் என்றார். இப்படிப்பட்ட ஒரு பதிலை எதிர்பார்க்காத அலெக்சாண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து. தனது நண்பர் ஆக்கினார். நாட்டைத் திருப்பிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பல பகுதிகளையும் இணைத்து கொடுத்தார்.


அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் தனது சவப்பெட்டி செய்தவரை அழைத்து சவப்பெட்டியின் முன்பகுதியில் தலைக்கு பக்கத்தில் இரண்டு பக்கமும் பெரிய துவாரம் இடும்படி சொன்னார். அது எதற்கு? என்று சவப்பெட்டி தயாரிப்பாளர் கேட்டார். அதற்கு மன்னர் அலெக்சாண்டர் நான் இறந்த பின் எனது இறுதி ஊர்வலத்தில் என்னை கொண்டு செல்லும் பொழுது, அந்த துவாரத்தின் வழியாக எனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி செய்யுங்கள்.
உலகை வென்ற அலெக்சாண்டர் போகும்போது, வெறும் கையோடு தான் போகிறார். எதையும் கையோடு எடுத்துக் கொண்டு செல்லவில்லை என்பது உலகுக்கு இனியாவது தெரிய வரட்டும் என்றார். இந்த தத்துவம் பேராசைக்கு அணை போடுவதாக இருந்தது. இன்றைக்கும் பேராசையை அழிக்க இந்த தத்துவம்தான் முன்னுதாரணமாகும் சொல்லப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News