Kathir News
Begin typing your search above and press return to search.

இதயத்தை காக்க உதவும் ஈசியான பயிற்சிகள்.!

இதயத்தை காக்க உதவும் ஈசியான பயிற்சிகள்.!

இதயத்தை காக்க உதவும் ஈசியான பயிற்சிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 3:35 PM GMT

உலக அளவில் தினமும் ஏராளமானோர் இதய நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 71 லட்சம் பேர் இதய பிரச்சனைக்கு ஆளாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வயதானவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் இதயநோய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் மேம்படுத்துவதற்கு உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம்.



கொழுப்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக தக்க வைத்துக் கொள்வது மாரடைப்பு, இருதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகளை தடுக்க கூடும். உடல் பருமன், புகைப்பிடிப்பது வரை பல்வேறு பழக்க வழக்கங்கள் இருதய நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

அவற்றில் உடல் பருமன், உடல் இயக்க செயல்பாடு இல்லாமல், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளைக் உணவு கட்டுப்பாடுகள் மூலமும் உடற்பயிற்சிகள் மூலமும் நிவர்த்தி செய்து விடமுடியும். ஒரு சில உடற்பயிற்சிகள் இதய பிரச்சனையில் இருந்து விலகி இருக்க உதவும் அத்தகைய பயிற்சிகள் தினந்தோறும் செய்து இதே பிரச்சனையிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.



தரையில் அமர்ந்தபடி கைகளைக் கொண்டு கால்களை தொடுவது, உடலை வில்லாக வளைத்து கைகளை கொண்டு காலை தொடுவது, உடலை பின்னோக்கி வில்லாக வளைத்து போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும். இத்தகைய நெகிழ்வான பயிற்சி மூட்டுவலி, தசைப்பிடிப்பு, தசை சார்ந்த பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது. இத்தகைய பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்பில்லை என்றாலும் இவை இதய நலனை காக்க துணைபுரியும்.

ஒரு நிமிடம் ஓடுவது பின்னர் மூன்று நிமிடம் நடப்பது. பின்னரும் மீண்டும் ஓடி விட்டு, நடப்பது என குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் சுழற்சி அடிப்படையில் இருவேறு பயிற்சிகளை செய்வது நல்லது. இப்படி இடைவெளியுடன் பேர் பயிற்சிக்கு மாற்றுவது, உடல் சோர்வடையாமல் நீண்ட நேரம் பயிற்சி செய்வதற்கு உதவும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News