Kathir News
Begin typing your search above and press return to search.

உங்கள் குழந்தைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்.!

உங்கள் குழந்தைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்.!

உங்கள் குழந்தைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா ? இதை செய்யுங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 3:47 PM GMT

கொரோனாவின் தாக்கம் மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றுதான் கூறலாம். ஏனென்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலேயே அடைபட்டு இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் செல்லாமல் அவர்களுடைய மனம் இறுகி விட்டு, அந்த கோபத்தை யார் மீது காட்டுவது? என்று தெரியாமல் யார் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறார்களோ? அவர்கள் மீது அந்த கோபம் காட்டப்படுகிறது.



பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்பதில்லை சக மாணவர்கள் நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள் மற்றும் அவர்களுடன் விளையாடுவார்கள். இதன் வழியாக அவர்களுக்கு மனோ வளர்ச்சி கிடைக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் அந்த வாய்ப்புகளை குழந்தைகள் இழந்து இருக்கிறார்கள். ஏமாற்றம் அடைகிறார்கள். அதை புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிகம் கோபம் பெற்றோர்கள் காட்டக் கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பு படிப்பை வெறுக்கும் ஒரு சூழல் ஏற்படலாம்.



பள்ளிக்கு செல்லும் போது குழந்தைகளுக்கு பயணம் மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில் படுவது போன்றவை எல்லாம் கிடைக்கும். இது மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிலுள்ள இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டுக்கு வெளியே வருவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை.

பள்ளிகள் இல்லாததால் மைதானங்களில் ஆன விளையாட்டுகளுக்கு பதிலாக செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். இதனால் டிஜிட்டல் எனப்படும் கணித உலகிற்கு நிறைய சிறுவர்கள், குழந்தைகள் அடிமைகளாக உள்ளாகிறார்கள். இவ்வாறான எலக்ட்ரானிக் சாதனங்கலோடு குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களுக்கு உறக்கமின்மை, அலட்சியம், உற்சாகமின்மை, மறதி போன்றவை ஏற்படுகிறதாம்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News