Kathir News
Begin typing your search above and press return to search.

அசாதாரண பிரசவங்கள் பற்றிய ஆச்சரிய விஷயங்கள்.!

அசாதாரண பிரசவங்கள் பற்றிய ஆச்சரிய விஷயங்கள்.!

அசாதாரண பிரசவங்கள் பற்றிய ஆச்சரிய விஷயங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 Oct 2020 10:06 AM GMT

மருத்துவமனைக்கு போகும் வழியில் கார் அல்லது பிற வாகனங்களில் குழந்தை பிறப்பது பற்றி அவ்வப்போது கேள்விப்படுவது உண்டு. பயணம் செய்யும்பொழுது காரில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது நிறைய சிக்கல்களை கொண்டது. காரில் ஏற்ற சூழல் தாய்க்கும், சேய்க்கும் தோற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பிரசவத்திற்கு பிறகு நடக்க வேண்டிய அத்தியாவசிய காரியங்களை செய்ய முடியாது. உலகில் எல்லாப் பகுதிகளிலுமே கர்ப்பிணிகளின் மீது வாகன ஓட்டுனர்கள் கனிவுடனே இருக்கிறார்கள்.



இந்தியாவிலும் வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கர்ப்பிணிகளை அழைத்து செல்லும்போது மிதமான வேகத்தில் வண்டிகளை ஓட்டுகின்றனர் பிரசவத்திற்கு இலவசம் என்று சலுகையும் கொடுக்கும் அளவிற்கு ஆட்டோக்காரர்கள் தாராள மனசு உள்ளவர்களாக உள்ளனர்.



மேற்கத்திய நாடுகளில் இது போன்ற அசாதாரண விஷயங்கள் கொண்டாடப்படுகின்றன. அதாவது அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக ஆகும் பொழுது, நம் ஊரில் நடக்கும் சம்பவங்கள் பெரிதாக இல்லை. ஏனெனில் இந்த விஷயங்களை இங்கு பழக்கமான ஒன்று. கிராமங்களில் மிகவும் சகஜமான இந்த நிகழ்வுகள் உள்ளன. அத்துடன் இது போன்ற அசாதாரண பிரசவங்களை பற்றி பெற்றோர்கள் அதிகம் பேசவும் இங்கு விரும்புவது கிடையாது.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற பிரசவங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம் அங்கு வாகனங்களோ அல்லது பயணம் செய்யும்பொழுது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய் மார்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. உதாரணமாக விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணி திடீரென்று பிரசவ வலியால் துடிக்கிறார். அவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. எனவே விமான பயணத்தின் போது அந்த குழந்தை பிறந்ததால், இனி விமானத்தில் பயணம் செய்ய அந்த குழந்தைக்கு இலவசம் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News