Kathir News
Begin typing your search above and press return to search.

திருமாவளவனின் இஸ்லாமிய பாசம் மற்றும் இந்து வெறுப்பு - ஒரு ஒப்பீட்டு பார்வை.!

திருமாவளவனின் இஸ்லாமிய பாசம் மற்றும் இந்து வெறுப்பு - ஒரு ஒப்பீட்டு பார்வை.!

திருமாவளவனின் இஸ்லாமிய பாசம் மற்றும் இந்து வெறுப்பு - ஒரு ஒப்பீட்டு பார்வை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2020 11:36 AM GMT

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இந்து சமுதாயம், இஸ்லாமிய சமுதாயம் என அனேகம் பேர் பிரித்து பார்ப்பதில்லை சிலரே இதனை பிரித்து அதில் தான் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். அதில் முக்கியமானவர் திருமாவளவன் அதிலும் இந்து மக்களை மட்டும் தரைமட்ட அளவில் காயப்படுத்தி, கேவலப்படுத்தி, இழிவுபடுத்தி வந்திருக்கிறார். அதே சமயத்தில் இஸ்லாமிய சமுதாயத்தை மிக நெருக்கமாக அரவணைத்தும் அந்த சமுதாயத்தின் குரலாக இருக்கிறேன் என்ற பெயரில் அவர்களை வைத்து போராடியும் இருக்கிறார்.

1999 ஆம் ஆண்டுதான் திருமாவளவன் தேர்தல் பாதைக்கு வந்தார். ஆனாலும் 1990 வருடத்திலிருந்தே சமூக அமைப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலம் முதலே அவர் முஸ்லிம்களை வைத்து போராட்டம் நடத்தியுள்ளார். "எரிபடும் சேரிகளில், இடிப்படும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி" என்னும் முழக்கத்தை முன்வைத்து முஸ்லிம்களை மையமாக கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருவது இவரது மைய அரசியலாகும். பட்டியல் இனத்தவர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கட்சி என இவர் கூறிக்கொண்டு இஸ்லாமிய சமுதாயத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி இவர் வாய் திறந்ததே இல்லை. 1992, டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மதுரை வீதிகளில் போராடினார். வேலூர் கோட்டை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்த உரிமை கோரி மசூதி நுழைவுப் போராட்டத்தை இஸ்லாமியர்களை வைத்து நடத்தினார். தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு குறித்தான கோரிக்கையைச் சட்டப் பேரவையில் பேசினார். அதை வலியுறுத்தி தனியொரு மாநாட்டையும் நடத்நினார். இஸ்லாமிய பயங்கரவாதிகள் சிறைவாசத்தில் இருந்து விடுபட கோரிக்கையும் விடுத்தவர்.

இஸ்லாமியர் செலவில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் முஸ்லிம்களை அழைத்து இப்தார் விருந்து கொடுத்தவர் திருமாவளவன். இஸ்லாமியரை போல் தாமும் நோன்பிருந்து ஒரு நோன்பாளியாக இப்தாரை மேற்கொண்டார். மேலும் தம்மைப் போலவே தமது தொண்டர்களையும் நோன்பு நோற்கச் செய்து இஸ்லாம் மறைமுகமாக பரவுவதற்கு முயற்சி மேற்கொண்டார்.

காயிதே மில்லத் பெயரில் ஏன் ஒரு விருது இல்லை எனக் கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் தன் கட்சியின் சார்பாக காயிதே மில்லத் பெயரில் விருது அறிவித்து அதை அப்துல் நாசர் மதானிக்கும், குணங்குடி ஹனீபாவுக்கும் கொடுத்து தன்னை இஸ்லாமிய தோழனாக காட்டிக்கொண்டார். இப்படி இஸ்லாமியத்தை பரப்ப தமிழகத்தில் மறைமுகமாக இந்து மக்களையும் வசைபாட தயங்கவில்லை அதற்கு சமீபத்திய உதாரணமாக 'இந்துப்பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்' என்ற பாணியில் பேசி இந்துக்களை அவமானப்படுத்தினார்.

ஆனால் இன்று வரையோ இஸ்லாமிய பெண்கள் படும் இன்னல்களை மற்றும் இஸ்லாமிய தீவிரவாத செயல்களை அவர் கண்டித்ததே இல்லை. முத்தலாக் விவகாரத்தினால் இஸ்லாமிய பெண்களே பிரதமர் மோடியின் பக்கம் நிற்கும் போது அதனை எதிர்த்தவர் திருமாவளவன். ஏன் தற்பொழுதும் கூட பிரான்ஸ் தேசம் இஸ்லாமிய தீவிரவாதத்தால் அமைதி இழந்து நிற்கும் போது கூட இங்கு 'மனுஸ்மிரிதியை' பழித்து தன் அரசியல் பிழைப்பை நடத்திகொண்டிருக்கிறார் திருமாவளவன் பெயரளவில் கூட இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டிக்கவில்லை மாறாக மறைமுகமாக ஆதரிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News