Kathir News
Begin typing your search above and press return to search.

மறைக்கப்பட்ட வரலாறு , அதிர்ச்சியளிக்கும் உண்மை பின்னணி - ஹைதெராபாத் கொலைகள்.!

மறைக்கப்பட்ட வரலாறு , அதிர்ச்சியளிக்கும் உண்மை பின்னணி - ஹைதெராபாத் கொலைகள்.!

மறைக்கப்பட்ட வரலாறு , அதிர்ச்சியளிக்கும் உண்மை பின்னணி - ஹைதெராபாத் கொலைகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Nov 2020 4:40 PM GMT

கடந்தமறைக்கப்பட்ட வரலாறு , அதிர்ச்சியளிக்கும் உண்மை பின்னணி - ஹைதெராபாத் கொலைகள்.! வாரங்களில் கேரளா மற்றும் மேற்கு வங்க இனப் படுகொலைகளைப் இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்து இன அழிப்பைப் பற்றிப் பார்த்திருந்தோம். இந்த வாரம் நாம் காணவிருப்பது ஹைதராபாத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய இஸ்லாமிய வெறி பிடித்த நிஜாம்களின் கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி.

இந்தியாவின் சுதந்திர தினம் எதுவென்று கேட்டால் சிறு குழந்தை கூட ஆகஸ்ட் 15,1947 என்று தெளிவாக சொல்லிவிடும். ஆனால் இன்றைய தெலங்கானா, வட கிழக்கு கர்நாடகா (இன்றும் அந்த இடங்கள் ஹைதராபாத் கர்நாடகா என்று அழைக்கப் படுகிறது ), மகாராஷ்டிராவின் மரத்தவாடா பகுதிகளின் சுதந்திர தினம் செப்டம்பர் மாதம், 1948. காரணம் இவை ஐராபாத் நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைய மறுத்தான். இந்திய அரசு ராணுவ உதவியுடன் 1948 செப்டெம்பரில் ஆபரேஷன் போலோ மூலம் இந்த இடங்களை தன்னுடன் இணைத்து சுதந்திரம் பெற்று தந்தது.

18ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய முகலாய அரசு தன் கடைசி காலங்களை எண்ணிக் கொண்டிருந்தது. அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்களை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். சில இடங்களில் முகலாய அரசின் பிரதிநிதிகளை தோற்கடித்து குறுநில அரசாங்கங்கள் தோன்றின அந்த குறுநில அரசாங்கங்களில் ஒன்று தான் இந்த ஹைதராபாத் நிஜாம். ஆங்கிலேயரிடம் மண்டியிட்டு தன் ஆட்சிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டான்.

ஹைதராபாத் நிஜாம்கள் இஸ்லாமிய வெறி பிடித்தவர்கள். 1947இல் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய பொழுது இங்கிருந்த குறுநில மன்னர்களுக்கு இந்தியாவுடன் இணையவோ பாகிஸ்தானுடன் இணையவோ வாய்ப்பளிக்கப் பட்டது. ஹைதராபாத் நிஜாம் (கடைசி நிஜாம் ) ஒஸ்மான் அலி கான் ஆசப் ஜாஹ் , தான் இரண்டு நாடுகளோடும் இணையப் போவதில்லை என்று கூறிக்கொண்டே தன்னுடைய ஹிந்து பெரும்பான்மை நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆம் நிஜாம் ஆட்சியாளன் இஸ்லாமியன் என்றாலும் ஹிந்து பெரும்பான்மை மக்கள் இருக்கும் பிரதேசம் அது.

தெலுங்கு , கன்னடம், மராத்தி மொழிகளே வெகு ஜன மக்களிடம் அதிகம் புழங்கும் மொழிகளாக இருந்தன. ஆனால் ஆட்சி மொழியாக மண்ணிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத உருதுவே இருந்தது. இந்த மண்ணின் மொழிகள் புறக்கணியக்கப் பட்டன. காரணம் இவை காபிர்களின் மொழி அதாவது இஸ்லாம் ஏற்காத மொழிகள் என்பதே. மண்ணின் மொழிகளை அழித்து விட்டால் இம்மண்ணின் கலாச்சாரத்தையும் அழித்து விடமுடியும் என்பது அவர்களின் கணக்கு

1926இல் மஜ்லிஸ்-ஏ-இட்டேஹட்-உல்-முஸ்லிமீன் எனும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பை உருவாக்கினான் மஹ்மூத் நவாஸ் கான் என்கிற ஓவிபெற்ற ஹைதெராபாத் அரசு அதிகாரி . இதன் நோக்கம் தூய்மையான இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவது . அதற்கு இடையூறாக இருக்கும் ஹிந்துக்களை அழித்து ஒழிப்பது. அதற்கு ஒரு படி மேலே சென்று மதச் சார்பின்மை பேசும் இஸ்லாமியர்களையும் ஒழிப்பது என்பதே. இந்த நோக்கத்தை நிறைவேற்ற ராசாக்கர் எனும் ஆயுதமேந்திய குழு உருவாக்கப் பட்டது . அந்த குழுவிற்கு காசிம் ரஸ்வி என்பவன் தலைமை தங்கினான்.

1947இல் ஹைதராபாத் பாகிஸ்தானுடன் இனைய வேண்டும் என்பது இந்த ரசாக்கர்களின் விருப்பம். ஆனால் பொது மக்கள் அனைவரும் இந்தியாவோடது இணையே விரும்பினார் அதனால் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அந்த போராட்டத்தை வன்முறை கொண்டு ஒடுக்கியவர்கள் இந்த ரசாக்கர்கள். பல ஹிந்துக்களின் வீடுகள் கொளுத்தப் பட்டன , பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப் பட்டனர். ஹைதராபாதில் காங்கிரஸ், கம்ம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தடை செய்யப் பட்டன.

இதனால் பொதுமக்கள் பலர் காடுகள், மலைகளில் தஞ்சம் புகுந்தனர். கிராமங்கள் பற்றி எரிந்தன. சிலர் அண்டை நாடான இந்தியாவிற்குள் தஞ்சம் புகுந்தார்கள். நிஜாம் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருந்தான். பாகிஸ்தானோடு நாட்டை இணைக்க வேண்டும் ஹைதெராபாத் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப் பட வேண்டும் என்கிற ராசாக்கர்களின் கோரிக்கை இந்தியாவிற்கு தலை வலியாய் மாறத் துவங்கியது.

இந்த நிலையில் ஹைதராபாதை இந்தியாவுடன் இணைக்காவிட்டால் மிகப் பெரிய பிரெச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் ஜவஹர் லால் நேரு, உள்துறை அமைச்சர் சர்தார் வல்லப் பாய் படேல் இருவருமே கருதினர் ஆனால் நேரு பேச்சுவார்த்தையை விரும்பினார். வல்லப் பாய் படேல் அவர்களோ ராணுவ தாக்குதல் மட்டுமே ஒரே வழி என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஐராபாதை தாக்க அனுமதி தந்தார்.

வழக்கம் போலவே பிரிட்டன் இந்தியாவை பேச்சு வார்த்தையில் ஈடு படும்படியும் போர் தாக்குதல் வேண்டாமென்றும் கூற திரு வல்லப் பாய் படேல் அவர்களோ அதை தீர்க்கமாக நிராகரித்தார். ஐக்கிய நாடுகளுக்கு இதை கொண்டு போக முயன்ற நிஜாமுக்கு அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது.

1948 செப்டெம்பர் 13ஆம் தேதி இந்திய ராணுவம் ஹைதராபாதை தாக்கத் துவங்கியது. செப்டெம்பர் 17ஆம் தேதி ஹைதெராபாத் நிஜாம் சரணடைந்தான். ராசாக்கர்களின் தலைவன் காசிம் ரஸ்வி கைது செய்யப்பட்டான். அதன் பிறகு இந்தியாவை விட்டு 48 மணி நேரத்தில் வெளியேறுவேன் என்று அளித்த உறுதிமொழியால் விடுதலை செய்யப் பட்டான். உடனே பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தான்.

1948இல் திரு சர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் துவங்கிய இந்து இன அழிப்பை நடத்தி முடித்திருப்பார்கள்.

1926இல் மஜ்லிஸ்-ஏ-இட்டேஹட்-உல்-முஸ்லிமீன் என்கிற கட்சி துவங்கியது அதன் ஆயுதப் படை தான் ராசாக்கர் என்றும் கூறி இருந்தோம் அந்தக் கட்சி தான் இன்று அனைத்திந்திய-மஜ்லிஸ்-ஏ-இட்டேஹட்-உல்-முஸ்லிமீன் (AIMIM) என்கிற பெயரில் ஆசாதுதீன் ஒவைசியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதற்காக சொந்த மக்களைக் கொன்று குவித்த கட்சி இன்று இந்திய பாராளுன்றத்தில் தன் குரலை பதிவு செய்துகொண்டிருக்கிறது. இதுதான் இந்தியர்களின் பலம் பலவீனம் இரண்டுமே. நம்மைக் கொல்ல வந்தவனையும் நாம் மன்னித்து ஏற்றுக் கொள்கிறோம் இது மனிதர்களாக இந்து தர்மத்தை மதிப்பவர்களாக நம் பலம். ஆனால் நம் எதிரிகள் ,துரோகிகள் திருந்தாமல் நம்மை மீண்டும் மீண்டும் முதுகில் குத்த அனுமதிக்கிறோம் இது பலவீனம்.மீண்டும் மீண்டும் சொல்கிறோம் ஹிந்து ஒற்றுமை ஏற்படாத வரை நம்மை எதிரிகள் எளிதில் வீழ்த்தி விடுவார்கள்.

குறிப்பு :- இந்தக் கட்டுரையில் ஆரம்பத்தில் சுதந்திர தினத்தை சிறு குழந்தையும் சொல்லிவிடும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் திரு முக ஸ்டாலின் அவர்களை இந்தக் கேள்வி கேட்டு ஆசைங்கப் படுத்தே வேண்டாம் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News