Kathir News
Begin typing your search above and press return to search.

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 75 லட்சம் ரூபாய் தி.மு.க எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனுக்கு செல்ல வேண்டிய கமிஷன் பணமா?

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியது தி.மு.க திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனுக்கு செல்ல வேண்டிய கமிஷன் பணம் என தெரியவந்துள்ளது.

திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 75 லட்சம் ரூபாய் தி.மு.க எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனுக்கு செல்ல வேண்டிய கமிஷன் பணமா?

Mohan RajBy : Mohan Raj

  |  18 Oct 2022 2:03 PM GMT

லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கியது தி.மு.க திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணனுக்கு செல்ல வேண்டிய கமிஷன் பணம் என தெரியவந்துள்ளது.

தமிழக முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் வசூல் வேட்டை நடக்கிறது என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதனை எடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் கந்தசாமி ஆங்காங்கே இருக்கும் பிரிவு அலுவலகங்களை முடுக்கி விட்டார். உடனே அதிகாரிகளை எந்தெந்த அரசு அலுவலகங்கள் புகாருக்கு ஆளாகி இருக்கிறதோ அங்கு உடனடியாக சோதனை நடத்த உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது. இதில் அதிகபட்சமாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் 75 ரூபாய் லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அப்போது உதவி போட்ட பொறியாளர் மாரிமுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பிடிபட்ட தொகை திருவாரூர் உட்கோட்டத்தில் உள்ள ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து பெறப்பட்டது எனவும் அந்த பணம் திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ'வுமான பூண்டி கலைவாணனுக்கு கொடுத்து வைத்திருந்த சதவீத தொகை பணம் என கூறினார். அந்த பணத்தை வாங்க மாவட்ட செயலாளர் மகன் பூண்டி கலைஅமுதன் வந்திருந்தார் அதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பணத்தை கைப்பற்றி விட்டனர்' இவ்வாறு மாரிமுத்து கூறியதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வாக்குமூலமாக பதிந்து ஆவணப்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிவராமல் அதனை மறைத்து மாரிமுத்துவிடம் பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கிழித்தெறிந்து மீண்டும் புதிய ஒப்புதல் வாக்குமூலம் வாங்குங்கள் என மேல் இடத்திலிருந்து விசாரணை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது. இதனை அடுத்து வாக்குமூலத்தை மாற்றும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் களம் இறக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News