Kathir News
Begin typing your search above and press return to search.

FCRA விதி மீறலில் ஈடுபடும் கத்தோலிக்க திருச்சபை - பழங்குடியினரைக் குறிவைத்து மதமாற்றம்!

FCRA விதி மீறலில் ஈடுபடும் கத்தோலிக்க திருச்சபை - பழங்குடியினரைக் குறிவைத்து மதமாற்றம்!

FCRA விதி மீறலில் ஈடுபடும் கத்தோலிக்க திருச்சபை - பழங்குடியினரைக் குறிவைத்து மதமாற்றம்!

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  9 Jan 2021 9:38 AM GMT

ராஞ்சி திருச்சபை பல்வேறு அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புகளிடம் இருந்து நிதி பெற்று இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. Legal Rights Observatory என்ற தன்னார்வ அமைப்பு வெளிநாட்டு நிதியை தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் அமைப்புகள் குறித்து ஆய்வு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு புகார் அனுப்பி வருகிறது.

இந்த அமைப்பு சமீபத்தில் கண்டறிந்துள்ள தகவல்களின் படி ராஞ்சி கத்தோலிக்க திருச்சபை (RCA) நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. Aid to Church in Need போன்ற வெளிநாட்டு மிஷனரி அமைப்புகளிடம் இருந்து சுமார் ₹62 கோடி வரை ராஞ்சி திருச்சபை பெற்றுள்ளது.

FCRA மூலம் இந்த நிதியைப் பெற்ற ராஞ்சி திருச்சபை FCRA விதிகளை மீறும் வண்ணம் பாதிரியார் ஸ்டான் சுவாமி கைதை எதிர்த்து
பிரச்சாரம்
மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகிறது. ஸ்டேன் சுவாமி நக்சல்களுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் 'சார்னா' என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் வரையறுத்து மாநில அரசு ஆணை வெளியிட்டது. இதன் பின்னணியிலும் ராஞ்சி கத்தோலிக்க திருச்சபை உள்ளது.

அன்னை தெரசாவால் தோற்றுவிக்கப்பட்ட மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி அமைப்பின் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை விலை பேசி விற்பதாக அரசு அமைப்புகளின் ஆய்வில் தெரிய வந்த போது, அந்த அமைப்புக்கு ராஞ்சி திருச்சபை ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலர்கள் 5 பேர் நக்சல்களால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இதைத் தடுக்க எதுவும் செய்யாதது, குற்றம் நடந்தது தெரிந்தும் புகார் அளிக்காதது உள்ளிட்ட பிரிவுகளில் ஜெசூட்
பாதிரியார்
அல்போன்ஸ் ஐண்ட் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராகவும் ராஞ்சி கத்தோலிக்க திருச்சபை பிரச்சாரம் செய்ததோடு பா.ஜ.க அரசு வேண்டுமென்றே கிறிஸ்தவர்களைக் குறிவைப்பதாக குற்றம் சாட்டியது.

திருச்சபைக்கு நிதி அளிக்கும் Aid to Church in Need தனது முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் படத்தை பதிவிட்டு நிதி சேகரித்ததாகவும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பழங்குடியினரை தலித் போராட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பழங்குடியினர் இந்துக்கள் அல்ல என்றும் தனி இனம், மதம் கொண்டவர்கள் என்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி இந்த சமுதாயத்தைப் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர் Calvary Gospel Ministries என்ற பழங்குடியினரைக் குறிவைக்கும் மிஷனரி அமைப்பு பற்றிய உண்மைகளை வெளியிட்ட LRO அமைப்பு தற்போது கத்தோலிக்க திருச்சபையே ஜெசூட் பாதிரியார்களின் தலைமையில் இந்துக்களை பிரிக்கும் வகையிலும் தேச நலனுக்கு எதிரான செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நடவடிக்கை கோரி புகார் அனுப்பியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News