Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் காப்பர் இறக்குமதி அதிகரிக்க காரணம் என்ன?

இந்தியாவின் காப்பர் இறக்குமதி அதிகரிக்க காரணம் என்ன?

TamilVani BBy : TamilVani B

  |  24 Sep 2021 11:40 AM GMT

இந்தியாவில் காப்பர் இறக்குமதி கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த காலாண்டில் 25 சதவீதம் அதிகமாக காணப்படுகிறது.

கோவிட்பெருந்தொற்றால் அதிக தொழில்கள் முடங்கியது. தற்போது தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதனால் முக்கிய காப்பரின் தேவைகள் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் காப்பர் இறக்குமதி 48,150 டன்னாக இருந்தது ஆனால் இந்த காலாண்டில் அது 60,766 டன்னாக உயர்ந்துள்ளது.

உலோகங்களில் காப்பர் அதி முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் உலக நாடுகள் காப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றனர் இந்தியாவின் காப்பர் உற்பத்தி உள்நாட்டு வளர்ச்சிக்கு போதும் என்றாலும் தற்போதுள்ள இறக்குமதி அவசியமான ஒன்றாகிறது.

பலதுறைகளுக்கு காப்பர் முதலீடாக உள்ளதால் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் இறக்குமதி செய்வது அவசியமான ஒன்றாகிறது. இந்த நிதியாண்டின் காப்பர் இறக்குமதி 295000 முதல் 304,000 டன் வரை இருக்கும் என சர்வதேச காப்பர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச செப்பு சம்மேளன இயக்குனர் மயூர் கர்மாகர் கூறும்போது நாட்டின் வளர்ச்சி அதிகரித்தாலும் இறக்குமதியால் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதாயம் அடைவதாக அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் கோவிட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் உற்பத்தி வேகம் அதிகரிக்கும் இதனால் இந்தியாவில் காப்பர் தேவை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது அதற்கு காரணம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆகும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூலம் இந்தியா காப்பர் ஏற்றுமதியில் ஆண்டுக்கு சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டி வந்தது.

இந்தியாவின் தாமிர உற்பத்தி குறைந்தது சீனாவிற்கு பலனளிக்கும் வகையில் உள்ளது சீனா கடந்த காலங்களில் இந்தியாவிடமிருந்து சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்து வந்தது தற்போது இந்தியாவின் உற்பத்தித் திறன் குறைந்து உள்ளதால் அது பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

Money Control

Next Story
கதிர் தொகுப்பு
Trending News