Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்தில் பரவும் கொரானாவின் புதிய திரிபு - உலக நாடுகள் உஷார்!

இங்கிலாந்தில் பரவும் கொரானாவின் புதிய திரிபு - உலக நாடுகள் உஷார்!

இங்கிலாந்தில் பரவும் கொரானாவின் புதிய திரிபு - உலக நாடுகள் உஷார்!

Saffron MomBy : Saffron Mom

  |  22 Dec 2020 6:30 AM GMT

கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசரமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து முழுவதற்கும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்தார்.

ஒரு புதிய மற்றும் ஆக்ரோஷமான கொரானா வைரஸ் திரிபு, இங்கிலாந்து முழுவதும் பரவி வருவதாக பதற்றங்கள் ஏற்கனவே உருவாகி வந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) இங்கிலாந்தில் ஒரே நாளில் புதிய சாதனையாக 35978 தொற்றுகள் பதிவானது. அன்று முதல் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிகவும் கடுமையான ஊரடங்கின் கீழ்வரும் என்று அறிவித்தார். பரவிவரும் புதிய கொரானா வைரஸ் திரிபு (strain) அதன் முந்தைய திரிபை விட 70 சதவிகிதம் அதிகம் பரவக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்த புதிய திரிபைப் பற்றி பல விஷயங்கள் அவ்வளவாக அறியப்படாத நிலையில், இங்கிலாந்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வாலஸ் கூறுகையில், இந்த வைரசின் மரபணுவில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மாற்றங்களும் திரிபுகளும் உருவாகி வருவதாக கூறினார். இது மற்ற திரிபுகளை விட மிக வேகமாக பரவும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் இந்த புதிய திரிபு இன்னும் கொரானா வைரஸ் பாதிப்பை தீவிரப்படுத்துமா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. மேலும் இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி முயற்சிகளை பாதிக்கும் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இங்கிலாந்த்தில் கடுமையான ஊரடங்கு என்பது, அத்தியாவசியமற்ற கடைகள், சினிமாக்கள, முடிவெட்டும் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு விஷயங்கள் இரண்டு வாரங்களுக்கு குறைந்தது மூடப்பட்டிருக்கும். மற்றொரு வீட்டை சேர்ந்த ஒருவரை மட்டுமே பொது இடத்தில் சந்திக்க முடியும்.

இது கிறிஸ்துமஸ் அன்று ஒரு குடும்பத்தினர் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு செல்வதை தடுத்துவிடும். இங்கிலாந்தின் மற்ற பகுதிகளில் மற்றும் ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸில் குறைந்தபட்ச ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு வீட்டினர் மற்றொரு குடும்பத்தினரை சந்திக்க கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டுமே செல்ல முடியும்.

வைரஸ் திரிபு என்றால் என்ன?

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து வைரஸ் திரிபுகளை போலவே கொரானா வைரசானது வீரியத்தையும், வடிவத்தையும் மாற்றும் திறன் கொண்டது.

தற்போது காணப்படும் தற்போதைய திரிபு அதன் முதல் திரிபும் அல்ல, இது கடைசியாகவும் இருக்க வாய்ப்பில்லை. இதுவரை அந்த திரிபுகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டுள்ள வரை, அதன் அசல் திரிபை விட , பின்னால் திரிபுகள் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரானா வைரஸ்

இதற்கான தடுப்பூசிகளை பற்றி நாம் குறிப்பிடும் பொழுது, தடுப்பு மருந்துகள் இந்த வைரஸின் ஆரம்ப கால திரிபுகளை குறிவைத்து உருவாக்கப்பட்டன. எனவே இது அதன் மற்ற திரிபுகளுக்கும் எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக ப்ளுவிற்கு (flu) பயன்படுத்தப்படும் தடுப்பூசி, அதன் பதினோரு வருடங்களுக்கு முந்தைய திரிபை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.

உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இங்கிலாந்தில் இருந்து கவலை தரும் விதத்தில் வெளிவரும் இந்த செய்திகள் குறித்து அறிந்தவுடன் உலக நாடுகள் பல விதமான பயண தடைகளை இங்கிலாந்து தொடர்பாக ஆரம்பித்து உள்ளனர்.

அர்ஜென்டினா, கொலம்பியா, ஈக்வடார் நாடு மற்றும் சிலி ஆகிய நாடுகள் இங்கிலாந்துக்கு செல்லும் மற்றும் இங்கிலாந்தில் இருந்து புறப்படும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாடும் இங்கிலாந்தில் இருந்து புறப்படும் மற்றும் வெளியேறும் விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் இருந்து இங்கிலாந்தில் இருந்து புறப்படும், செல்லும் விமான சேவைகளுக்கு 72 மணிநேர தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ட்வீட் வழியாக அறிவித்தார்.

அயர்லாந்து நாடும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்திலிருந்து கப்பல் வழியாகவோ, விமானம் வழியாகவோ இங்கிலாந்தில் இருந்து வருபவர்களை தடுத்து வைத்துள்ளது. இத்தாலியும் இதே வரிசையில் சேர்ந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களில் பிரிட்டனுக்கு சென்றுள்ள யாராக இருந்தாலும் இத்தாலி தடுத்து நிறுத்தியுள்ளது.

போர்ச்சுக்கல் நாடு இங்கிலாந்தில் இருந்து வெளியேறும் போர்ச்சுக்கல் நாட்டு குடிமகன்களை மட்டுமே தாங்கள் அனுமதிப்பதாகவும், அவர்களும் தங்களுக்கு கொரானா வைரஸ் இல்லை என்று நெகட்டிவ் சான்றிதழை கொண்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் நாடும் 24 மணி நேரத்திற்கு இந்த தடையை நீட்டித்து உள்ளது. லாவிட்டா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் புதுவருடப்பிறப்பு வரைக்கும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் புறப்படும் விமான சேவைகளை தடுத்து நிறுத்தி உள்ளன. எஸ்டோனியாவும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

இந்த புதிய திரிபு நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் செக் குடி அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா, இங்கிலாந்திலிருந்து கடல் வழியாகவும், தரை வழியாகவும், விமானம் என அனைத்து சேவைகளையும் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த வரிசையில் துருக்கி, டென்மார்க், சவுத் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளது.

இந்தியாவில் சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமையன்று ஒரு அவசர கூட்டத்தை கூட்டியது. அதில், இங்கிலாந்திற்கு செல்லும்/புறப்படும் விமான சேவைகள் நிறுத்தப்படும் என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை திங்கள் இரவு முதல் டிசம்பர் 31 இரவு வரை தற்போதைக்கு நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News