Kathir News
Begin typing your search above and press return to search.

தற்போதைய இந்திய-ரஷ்ய மற்றும் இந்திய-அமெரிக்க உறவு: ஒரு ஒப்பீடு.!

தற்போதைய இந்திய-ரஷ்ய மற்றும் இந்திய-அமெரிக்க உறவு: ஒரு ஒப்பீடு.!

Saffron MomBy : Saffron Mom

  |  17 April 2021 12:16 PM GMT

அயல் நாட்டு தூதுவர்கள் மற்ற நாடுகளுக்குச் செல்வது வழக்கமானது. அதிகாரப்பூர்வமாக தேவையான ஒன்று என்பதைத் தவிர இதற்கு வேறு எந்த குறிப்பிடத்தக்க முக்கியத்துவமும் கிடையாது. பல வெளிநாட்டு பிரமுகர்களின் இந்திய வருகைகள் இரண்டு நாடுகளின் இருதரப்பு உறவிலோ அல்லது மற்ற செயல்பாடுகளிலோ எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஆனால் சில சமயங்களில் இத்தகையவர்களின் தொணி மற்றும் பாணி ஆகியவை எதிர்பார்த்ததைவிட மேலும் விஷயங்களை வெளிப்படுத்தி ஒரு அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருப்பதை குறிக்கிறது. கடந்த வாரம் இந்தியாவிற்கு இரண்டு முக்கியமான பார்வையாளர்கள் வந்தார்கள் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லவ்ராவ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி சிறப்பு பருவநிலை தூதர் ஜான் கெர்ரி.

எந்தவித பெரிய ஆவணங்களில் கையெழுத்திடும் அல்லது அது பெரிய அறிவிப்புகளை வெளியிட இவர்கள் வரவில்லை. இவை வழக்கமான வருகைகள். ஒன்று, அடுத்து ரஷ்ய அதிபர் இந்தியாவிற்கு வரவிருப்பதற்கான வேலைகளை ஆரம்பித்து வைப்பதற்கு, மற்றொன்று சுற்றுச்சூழல் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் நோக்கங்களை மதிப்பிடுவதற்கு.

தற்போதைய இந்திய-ரஷ்ய மற்றும் இந்திய-அமெரிக்க உறவுகள் குறித்து ஹர்ஷ் பாண்ட் எழுதிய கட்டுரையின் தமிழ் சாராம்சமே இக்கட்டுரை.

ஆனால் இந்த இரண்டு குறுகிய வருகைகளும் இந்தியா-ரஷ்யா மற்றும் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் நிலைப்பாடு பற்றி அதிகம் வெளிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ராவ் குறிப்பிடுகையில், "இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாண்மை மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டுறவின் மையத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால நட்பு உள்ளது" என்று கூறினார். இரண்டு நாடுகளின் உறவுகளும் மூலோபாய கூட்டாண்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்பதே வெளிப்படை.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் வேறுபாடுகள் அதிகரித்து கொண்டு வருகின்றன. இரண்டு நாடுகளும் மாறிவரும் உலக ஒழுங்கை வித்தியாசமாக கையாளுகின்றன. இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் வரலாற்று ரீதியிலான உறவு இருக்கிறது என்று ரஷ்யா கூறிக்கொண்டாலும், இந்தோ-பசுபிக் முதல் QUAD விவகாரங்கள் வரை ரஷ்யா, சீனாவின் சார்பாக பேசுகிறது. இந்தியாவை சற்று குறைத்து மதிப்பிடுகிறது.

கடந்த காலத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கை மற்ற சக்திகளால் வடிவமைக்கப்படுகிறது என்று லாவ்ராவ் கூறியிருந்தாலும், இந்த முறை ரஷ்யாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலான உறவிற்கு பாகிஸ்தானை முக்கிய தூணாக ஆக்க முயற்சிக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவை தள்ளி வைக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் முயற்சி, மேலும் பாகிஸ்தானுக்கு அதிக நிதி உதவி அளிப்பதாக கூறியிருக்கும் ஆபர் ஆகியவை, ரஷ்யா வெளியுறவு கொள்கையில் எந்த அளவு வந்துவிட்டது என்பதை காட்டுகிறது.

அதே சமயத்தில் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் ஜான் கெர்ரி இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் பருவநிலை மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள வந்திருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பிடென் அழைத்துள்ள 40 உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவராவார். இந்த உச்சி மாநாட்டில் வலிமையான பருவநிலை நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவசியம் குறித்தும், பொருளாதார பலன்கள் குறித்தும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக்கு வந்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மறுபடியும் நுழைத்தார். உலகளாவிய இலக்குகளை அடைவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. தற்போது இந்தியாவும் அமெரிக்காவும் பருவநிலை மாநாடு விவகாரத்தில் ஓரளவு சேர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியா அமெரிக்கா, ரஷ்யா இரு நாடுகள் இடையே நல்ல உறவு வைத்துக்கொள்ள விரும்பும் என்பதை மறுப்பதற்கில்லை. சொல்லப்போனால் கடந்த சில வருடங்களாக இந்தியா, ரஷ்யாவுடன் உறவை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கூட்டுறவிற்கு புதிய பிரிவுகளை கண்டறிவது, பாதுகாப்பு உறவுகளை தாண்டி இருதரப்பு உறவை வலுப்படுத்துவது, ஆற்றல் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது, உயர்மட்ட அளவில் தகவல் தொடர்புகளை திறந்த நிலையில் வைத்திருப்பது ஆகியவற்றை எல்லாம் செய்தாகி விட்டது.

ஆனாலும் இந்த உறவு அவ்வளவாக முன்னேறவில்லை. சொல்லப்போனால் ரஷ்யாவை பொறுத்தவரை மேற்கு நாடுகளுடன் அதனுடனான பிரச்சினைகளுக்கு சீனா உதவி செய்து மேலை நாடுகளை தள்ளிவிட்டால் அது நல்லது என்று நினைக்கிறது. இது இந்தியாவிற்கு சரியான தீர்வு அல்ல. இந்திய-அமெரிக்க உறவுகளோ இந்த நூற்றாண்டில் ஒன்றிணைந்து வேறுபாடுகளை நிர்வகித்து செயல்பட தயாராக உள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் உறவு இப்படித்தான் இருந்தது. ஆனால் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்பது உண்மை. அதை பற்றி புகார் அளித்து பிரயோஜனமில்லை. வளர்ந்து வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாடுகளே தலைவர் தலைமைப் பண்புள்ள நாடுகளாக வெளிப்படுகின்றன.

Cover Image Credit: Dainik Bhaskar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News