Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வாதிகார நாடுகள் vs ஜனநாயக நாடுகள் - ஐரோப்பிய ஒன்றியம் எதை தேர்ந்தெடுக்கும்?

சர்வாதிகார நாடுகள் vs  ஜனநாயக நாடுகள் - ஐரோப்பிய ஒன்றியம் எதை தேர்ந்தெடுக்கும்?

Saffron MomBy : Saffron Mom

  |  10 April 2021 12:26 PM GMT

இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான உறவு பல்லாண்டுகள் பழமையானது. ஜெர்மனியை இராஜதந்திர ரீதியாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையிலான 70 வருட இருதரப்பு உறவுகள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையில் கூட்டாளித்துவம் இருக்கிறது. கேபினட் அளவிலான இருதரப்பு ஆலோசனைகளை 2011 முதல் செயல்படுத்தி வருகின்றன. 2020 செப்டம்பரில் இந்தோ-பசுபிக் விதிமுறைகளில் தன்னுடைய விருப்பத்தையும் உறுதியையும் ஜெர்மனி வெளிப்படுத்தியது.

இந்த பகுதியில் இந்தியா ஒரு முக்கியப் புள்ளி என்பது குறிப்பிடத்தக்கது என்றாலும், இந்தோ-ஜெர்மன் கூட்டுறவில் ஏதோ ஒரு முக்கியமான பகுதி தவறுவதாகவே பலரும் கருதுகிறார்கள். ஏன் இந்த உறவு, எதிர்பார்ப்புகளுக்கு குறைவாக செயல்படுகிறது என்று இரு தரப்பில் இருக்கும் கொள்கை உருவாக்குபவர்களும் யோசனை செய்து வருகிறார்கள்.

இருதரப்பு உறவுகளுக்கான எதிர்பார்ப்பிற்கும், உண்மை நிலைக்கும் இடையே எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன. கவுன்சிலில் தலைவர் பதவியை வகிக்கும் ஜெர்மனியின் ஐரோப்பிய ஒன்றியம், சமீபத்தில் முதலீட்டுக்கான விரிவான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் உள்ளன.

இந்நிலையில் இந்தியாவுடனான ஒத்துழைப்பிற்கு பேச்சுவார்த்தையை முடுக்கி விடுவது ஐரோப்பாவின் கடமையாகும். அடுத்து இந்தியாவிற்கு போர்ச்சுக்கீசிய அதிபர் வருகை புரிய உள்ளார். ஜெர்மனி தன்னுடைய முன்னுரிமைகளை மறு பரிசீலனை செய்வதற்காக நேரம் வந்துவிட்டது.

பல்லாண்டுகளாக இந்த ஜெர்மன் உறவு அவ்வளவாக பெரும் தாக்கங்கள் இல்லாமல் சென்றது. அதாவது இரு தரப்பினருக்கும் பெரிய இழப்போ அல்லது லாபமோ இல்லை. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச அளவில் உண்டாகும் சில மாற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஒன்று, உலகளாவிய லட்சியங்களை கொண்ட ஒரு சர்வாதிகார சக்தியாக உருவாகும் சீனாவின் எழுச்சி. ஒருவரை ஒருவர் பொருளாதார ரீதியாகவும் மற்ற வகையிலும் சார்ந்திருக்கும் நாடுகள் அந்த சார்பை ஆயுதம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனாவில் எழுச்சி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. இதில் அதிக உற்சாகம் அடைந்த நாடுகளில் ஜெர்மனியும் ஒன்றாகும்.

சீனாவுடனான வர்த்தகம் அதிகரிப்பு அனைவருக்கும் செழிப்பையும் வளர்ச்சியையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே நேரம் ஜனநாயக கொள்கைக்கும், மேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் சீனா நுழையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. வர்த்தகத்தின் மூலமாக மாற்றங்கள் உருவாகலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அவை நடக்கவில்லை.

சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரங்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டது. தன்னுடைய பிராந்தியத்திலும் அதற்குப் பின்னாலும் சீனாவின் விரிவாக்கம், அதன் லட்சிய அதிகாரத்தையும் நாம் பார்த்தோம். இத்தகைய லட்சியங்கள் எப்பொழுதும் மறைவில் இல்லை. ஆனால் கடந்த வருடங்களில் இது தனித்துவமாகவும் பெரிய அளவிலும் வெளிப்பட்டது. கொரானா வைரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலியாவை சீனா மிரட்டியது.

இரண்டாவது, ஹாங்காங்கில் ஒரு நாடு - இரு அமைப்பு என்ற வாக்குறுதியில் இருந்து சீனா விலகி ஹாங்காங்கின் ஜனநாயகத்தை நசுக்கியது.

மூன்று, இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் வீரர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் அளவில் எல்லை மோதல்களில் ஈடுபட்டது.

நான்காவது, தெற்கு சீன பகுதியில் சீனாவின் அதிகரித்துவரும் முரட்டுத்தனம். ஆனால் சீன அச்சுறுத்தலானது அதன் பிராந்திய நாடுகளுக்கு மட்டும் உட்பட்டது அல்ல. உலகளாவிய ரீதியில் அது சென்று சேர உதவும், பெல்ட் அண்ட் ரோடு திட்டம் (BRI) இதற்கு ஒரு உதாரணமாகும்.

சீனாவைப் போலவே மற்ற சர்வாதிகார நாடுகளும் மேலை நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் சில சர்வாதிகார நாடுகள் இப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த உலகளாவிய மதிப்பு சங்கிலியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தும் என்ற அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது.

இத்தகைய ஆபத்துகள் இந்த கொரானா வைரஸ் பரவல் தொற்று காலத்தில் பல நேரங்களில், பல விதங்களில் வெளிப்பட்டது. நாடுகள் அத்தியாவசியமாக தேவைப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை உலகளாவிய ரீதியில் தங்களுடைய நன்மைக்காக பயன்படுத்த முனைந்தனர்.

இந்த இரண்டு செயல்பாடுகளும் ஜெர்மன் மற்றும் ஐரோப்பா வெளிநாட்டுக் கொள்கைகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. வெறும் வணிக ரீதியிலான நன்மைகளுக்காக உருவாக்கப்படும் கொள்கைகள், குறிப்பாக உணவு பாதுகாப்பு விஷயங்களில் தங்களுடைய குடிமகன்களை பலவீனமாகும் என்று உணர தொடங்கி உள்ளனர்.

இந்தியா உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியா, ஜெர்மனியின் நெருங்கிய கூட்டாளியாக மாறலாம். இந்தியா - ஜெர்மன் கூட்டுறவுக்கு எது தடையாக இருக்கிறது? இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வித்தியாசங்கள்:

இந்தியா மற்றும் சீனாவை ஒப்பிட்டு பேசுவது இன்னும் தொடர்கிறது. இரண்டு நாடுகளையும் ஒப்பிடுவது ஆப்பிள் களையும் ஆரஞ்சுகளையும் ஒப்பிடுவதற்கு சமமானது என்றாலும், இந்த இரண்டு நாடுகளும் ஆசியாவில் மிகப்பெரிய சந்தைகளை கம்பெனிகளுக்கு வழங்குகின்றன. இது மட்டுமே பல மேலை நாடுகளில் உள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பீடுகளை செய்ய தூண்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது.

சீனாவுடன் வியாபாரம் செய்வது எளிதாக தோன்றுகிறது. சீனாவில் கட்டாய டெக்னாலஜி பரிமாற்றங்கள், அறிவுசார் உரிமைகள் திருட்டு ஆகியவை நடந்தாலும் இந்தியா வியாபாரம் செய்வதற்கு மிகுந்த சிக்கலான நாடு என்று கருதப்படுகிறது. மோடியின் ஆட்சி காலத்தில் இது ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ் முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் அந்த கருத்துகள் நிலவுகின்றன.

இரண்டாவது, இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி, இந்தியா கூட்டாளியாக இருப்பதற்கு தகுதியற்ற நாடு என்று ஜெர்மனி முடிவுக்கு வருகிறது. சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பேசுவதே தவறானது. அப்படியே ஒப்பீடு செய்தாலும், ஜெர்மனி ஜனநாயக நாடுகளுடன் கூட்டணி கொள்வது மெதுவாகவும் சிக்கலானதாகவும் இருக்கலாம், ஆனால் அவற்றிற்கு நன்மைகளும் நம்பகத் தன்மையும் அதிகம் என்று உணரவேண்டும்.

இரண்டாவது, இந்திய ஜனநாயகத்தில் குறைகளே இல்லை என்று கூறிவிட முடியாது. ஆனால் இந்திய ஜனநாயகத்தில் இருக்கும் சில பிரச்சனைகளுடன், சீனாவில் நடக்கும் வெளிப்படையான மனித உரிமை மீறல்களை ஒப்பிடும் பொழுது மலை போன்று இந்தியா உயர்ந்து நிற்கிறது. ஜனநாயக நாடுகளில் குறைபாடுகள் இருப்பது இயல்புதான். ஐரோப்பிய ஒன்றியம், ஏன் அமெரிக்காவில் கூட இது இருக்கிறது.

இந்தியா இந்த விஷயத்தில் நன்றாகவே தாக்குப்பிடிக்கிறது. மூன்றாவது வணிக ரீதியாக மட்டுமே உறவு கொள்வது என்பது அந்த அளவிற்கு பலனளிக்காது. ஜனநாயகம் உலகம் முழுவதும் சர்வாதிகார நாடுகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் பொழுது, ஒரு மனதுடைய கூட்டாளிகள் அவசியம். இதை பிடென் நிர்வாகம் உணர்ந்துள்ளது. மேலை நாடுகளும் ஜனநாயக நாடுகளுடன் கூட்டணி வைப்பது குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்து தங்களுடைய கொள்கை முடிவுகளை மாற்றிக் கொள்ளும் நேரம் வந்திருக்கிறது.

Translated From: ORF

Next Story
கதிர் தொகுப்பு
Trending News