Kathir News
Begin typing your search above and press return to search.

கையில் வேலை தூக்கி பிடித்த கருணாநிதியின் மகன்.. பதவிக்காக பகுத்தறிவை பறக்க விட்டாரா ஸ்டாலின்?

கையில் வேலை தூக்கி பிடித்த கருணாநிதியின் மகன்.. பதவிக்காக பகுத்தறிவை பறக்க விட்டாரா ஸ்டாலின்?

கையில் வேலை தூக்கி பிடித்த கருணாநிதியின் மகன்.. பதவிக்காக பகுத்தறிவை பறக்க விட்டாரா ஸ்டாலின்?

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jan 2021 6:32 PM GMT

சரியாக பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன கடந்த 24.10.02 அன்று தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது குழுமியிருந்த கிருஸ்துவர்களை மகிழ்விக்க "இந்துக்கள் என்றால் கள்வர்கள்" என்கிற வார்த்தையை பிரயோகித்தார். அப்பொழுது அது விமர்சனமானது, ஏன் நீதிமன்றத்தில் வழக்காக கூட மாறியது.

நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் என்பவர் மேற்குறிப்பிட்ட நிகழ்வை வழக்காக தொடர்ந்தார். பின் அது வெவ்வேறு காரணங்களுக்காக தள்ளுபடியானது. ஆனால் பத்தொன்பது ஆண்டுகள் கழித்து இன்று அதே தி.மு.க கட்சியின் தலைவரும், "இந்துக்கள் என்றால் கள்வர்கள்" என்று கூறியவரின் மகனுமான ஸ்டாலின் தி.மு.க சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கையில் வேல் பிடித்தபடி நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க சார்பில் தற்பொழுது 2021 தேர்தலை முன்னிட்டு பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் தி.மு.க தனது படைபலம் மற்றும் பணபலத்தை முழுவதும் பிரயோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க இந்துக்களுக்கு எதிரான செய்கைகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை இவ்வளவு காலம் தி.மு.க மறுத்து வந்தாலும் அதன் நடவடிக்கைகள் அவ்வபோது இந்துக்களை அவமதித்துதான் இருந்துள்ளதே தவிர இந்துக்களுக்கு தி.மு.க'வினர் ஒருபோதும் முக்கியத்துவம் குடுத்ததே இல்லை.

ஆனால் தற்பொழுது தேர்தல் வருகிறதே எனவும், இந்த தேர்தலில் எப்படியாவது தி.மு.க வென்று ஸ்டாலினை முதல்வராக அரியணையில் ஏற்றுவது என்றும் தி.மு.க கங்கணம் கட்டி கொண்டு இருப்பதால் யார் காலில் விழுந்தாவது ஓட்டுகளை பெற்றுவிட துடிக்கிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த வேல் யாத்திரையில் இந்துக்களின் மீதான் தி.மு.க'வின் வன்மங்கள் முழுவதும் மக்களிடத்தில் விழிப்புணர்வாக ஏற்படுத்தபட்டன. இதன் காரணமாக தி.மு.க'வின் வாக்கு வங்கி கணிசமான வாக்குகளை இழக்க வேண்டிய சூழல் உருவானதால் தற்பொழுது இழந்த வாக்கு வங்கியை திரும்பவும் மேலும் வாக்கு வங்கியை சேர்க்கவும் இன்றும் தனது "பெயரளவிலான மதச்சாற்பற்ற" கொள்கையை தி.மு.க காற்றில் பறக்கவிட்டுள்ளது.

இவர்களுக்கு பதவிதான் முக்கியமே தவிர தான் ஏற்கும் கொள்கைகள், அதில் உள்ள நிலைப்பாடுகள் அனைத்துமே பொய் என்பதும் பதவி வரும் எனில் எதை வேண்டுமானாலும் மாற்றி கொள்ள தி.மு.க தயார் என்றும் இந்த நடவடிக்கைகள் மூலம் தெரிகிறது.

மறைந்த "துக்ளக்" ஆசிரியர் 'சோ' அவர்கள் கூறினார் "நாளை இந்துக்கள் வாக்கு வங்கி என ஒன்று ஒருவாகினால் கருணாநிதி பட்டயைடித்துக்கொண்டு காவடி தூக்கி வருவார்" என அது நிகழும் காலம் கனிந்துவிட்டது. ஆனால் இந்துக்கள் இனியும் ஒன்றும் மடையர்கள் ஆக மாட்டார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News