Kathir News
Begin typing your search above and press return to search.

சொத்தின் வில்லங்கம் பார்ப்பதில் குளறுபடி - மோசடி பயத்தில் மக்கள்

சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதன் முன் ஆவணங்களை சரிபார்க்க எத்தனை ஆண்டுகளுக்கானது என்ற வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சார்-பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சொத்தின் வில்லங்கம் பார்ப்பதில் குளறுபடி - மோசடி பயத்தில் மக்கள்
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2022 1:40 PM GMT

சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும்போது அதன் முன் ஆவணங்களை சரிபார்க்க எத்தனை ஆண்டுகளுக்கானது என்ற வில்லங்க விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சார்-பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் சொத்து விற்பனை பதிவில் மோசடி மற்றும் ஆள்றட்டத்தை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பத்திரப்பதிவுத்துறை எடுத்து வருகிறது. பதிவுக்கு வரும் சொத்தில் முன் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது, குறிப்பாக சொத்தின் தாய்ப்பத்திரத்தின் அசல் பிரதியை சார்-பதிவாளர்கள் சரி பார்ப்பதுடன் அதன் குறிப்பிட்ட சில பக்கங்களை ஸ்கேன் செய்து புதிய ஆவணத்துடன் இணைக்க வேண்டும்.

இதில் சொத்தின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய வழக்கமாக 30 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது குறித்து சார்பதிவாளர்கள் கூறியதாவது, 'சொத்தில் உண்மை தன்மையை ஆய்வு செய்ய அதன் முன் ஆய்வு பத்திரங்கள் தேவை இதற்க கடைசியாக பதிவான விற்பனை பத்திரமும் அதற்கு முந்தைய பத்திரமும் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. சில சொத்துக்கள் சமீப ஆண்டுகளில் எந்தவித விற்பனை பரிமாற்றமும் நடக்காத நிலையில் 30 ஆண்டு வில்லங்கச் சான்று போதுமானதாக இல்லை இதனால் 50 முதல் 60 ஆண்டுகளுக்கான வில்லங்க விவரங்களை திரட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இது தெளிவான வழிகாட்டுதல் இல்லாத பொதுமக்களும் பத்திரப்பதிவாளர்களும் குழப்பம் ஏற்படுகிறது, பத்திரப்பதிவின்போது எத்தனை ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும். என்பதற்கு கால வரையறை நிர்ணயம் செய்ய வேண்டும் இது குறித்து பதிவுத்துறை தலைவரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறோம்' என கூறினார்கள்.

பத்திர பதிவுத்துறையில் பல மோசடிகள் இந்த தி.மு.க ஆட்சியில் நடந்து வருகிறது என தகவல்கள் வரும் நிலையில் இது போன்ற குழப்பத்தை முன்னுரிமை அளித்து தீர்க்க வேண்டியது அரசின் கடைமையல்லவா?


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News