Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சியில் மக்கள் மறக்காத விஷயங்கள் - மீண்டு வர தத்தளிக்கும் தி.மு.க!

தி.மு.க ஆட்சியில் மக்கள் மறக்காத விஷயங்கள் - மீண்டு வர தத்தளிக்கும் தி.மு.க!
X

Saffron MomBy : Saffron Mom

  |  23 March 2021 12:53 PM GMT

தமிழ்நாட்டில் திராவிடத்தின் அரசியல் இருப்பை உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க), தற்பொழுது கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை என்றாலும்கூட சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சிகளிடமும் பலத்த விமர்சனங்களுக்கும் கிண்டல் கேலிகளுக்கும் ஆளாகி வருகிறது.

பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத ஒரு கட்சிக்கு தொடர்ந்து வைக்கப்படும் விமர்சனங்கள் ஒரு தனித்துவமான அரசியல் நிகழ்வாகும். அரசியல் பார்வையாளர்கள் கூறுகையில், இத்தகைய கடும் விமர்சனங்களை தி.மு.க எதிர் கொள்ள வேண்டியதன் காரணம் அதனுடைய சர்ச்சைக்குரிய கடந்த ஆட்சி, ஊழல்கள் மற்றும் கருத்தியல் நிலைப்பாடுகள் தான்.

வருகின்ற தேர்தல் தி.மு.கவிற்கு ஒரு எளிமையான தேர்தலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு போராட்டமாக மாறியுள்ளது. இதற்கு முக்கியமாக ஆறு காரணங்கள் உள்ளன.

1.நில அபகரிப்பு மாபியா

2006 முதல் 2011 வரை தி.மு.க கடைசியாக ஆட்சியில் இருந்தபொழுது நில அபகரிப்பு தொடர்பான பரவலான குற்றச்சாட்டுகளால் கடுமையாகத் தாக்கப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க அமைச்சர்கள் சமூக விரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபட்டதைப் பற்றி பேசிய போது, இத்தகைய நில அபகரிப்பு அட்டூழியங்களுக்கு ஆளான பலரின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக கூறப்பட்டது.

தி.மு.கவினர் விரும்பிய நிலங்களை அபகரிப்பதற்காக எப்படி போலியான பத்திரங்கள் தயாரிக்கப்பட்டது என்றும் காவலர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டு அமைதியாக வேடிக்கை பார்க்க நேர்ந்தது என்றும் தெரிவித்திருந்தார். தி.மு.க ஆட்சியில் பதிவுசெய்யப்பட்ட 6000 நில அபகரிப்பு வழக்குகளில் 300 மட்டுமே கவனிக்கப்பட்டது.

இதற்கெல்லாம் மேலாக திமுகவின் அதிகாரபூர்வமான பத்திரிக்கை முரசொலி SC பிரிவினரின் மேம்பாட்டிற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

2. தரமான கல்வியை மக்களுக்கு மறுப்பது

தமிழ்நாட்டில் கல்வி கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டங்கள் இரண்டையுமே நீர்த்துப்போக செய்து, தரமிறக்கியது தி.மு.க. சமச்சீர் கல்வி என்று பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட அந்த பாடத்திட்டம் மற்றும் பாட புத்தகங்களில் கருத்தியல் சார்பு போதனைகளில் ஈடுபட்டு அறிவியலையும் கணிதத்தையும் கவனிக்க மறந்து விட்டது.

இந்த பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் பாடத்திட்டத்தின் குறைந்தபட்ச பாடங்களால் நிரப்பப்பட்டு மாணவர்களுக்கான தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை. அதேசமயத்தில் தி.மு.க தலைவர்கள் தனியார் பள்ளிகளை நடத்தி கடும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது திமுகவிற்கு நெடுங் காலத்தில் உதவி புரிகிறது.

இதனால் சாதாரண மக்கள் எந்தப் போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்வதற்கு தகுதியற்ற பாடத்திட்டங்களை பெறும்பொழுது தி.மு.கவின் குடும்ப உறுப்பினர்கள் சிறந்த கல்வியை பெறுவார்கள். தி.மு.கவின் உயர்மட்டத்தில் நடத்தப்படும் பல வசதியான பள்ளிகளில் இந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட ஒருமுறை தயாநிதி மாறனுக்கு மத்திய அமைச்சரவைக்கு அவர் தகுதியானவர், ஏனெனில் அவருக்கு ஹிந்தி தெரியும் என்று கூறியிருந்தார்

3. மின்வெட்டு

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தைப் பற்றி எல்லோருக்கும் ஞாபகம் வைத்திருக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்று மின்வெட்டு. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் மின்வெட்டு இல்லாமல் இருந்ததில்லை. மின்வெட்டில்லாமல் ஒருநாளும் சென்றதில்லை. வெயில் கொளுத்தும் கோடைக்கால இரவுகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

அவர்களுடைய குடும்பத் தொழிலிற்கு உதவி செய்வதற்காக வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிகளும் மற்ற திட்டங்களும் கஜானாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி அடிப்படையான ஒரு கட்டமைப்புகளைக் கூட பராமரிப்பு செய்ய முடியாமல் போனது.

4. கிறிஸ்தவ மதமாற்றிகளுக்கு வசதி செய்வது

சமீபத்தில் வைரலாக சென்ற ஒரு வீடியோவில் கிறிஸ்தவ மிஷினரிகள் தி.மு.கவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டனர். அந்தப் பேச்சில் அவர்கள் இன்று அனுமதிக்காத பல இடங்களில் மத மாற்ற மையங்களை கட்டியெழுப்புவதற்கான சட்ட ரீதியான கட்டுப்பாடுகளை தி.மு.க நீக்கி விடும் என்ற நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

தி.மு.க மிஷனரிகளை புகழ்ந்து பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. திமுக தலைவர்கள், மிஷனரி மோகன் சி லாசரஸ் போன்றோருடன் மேடைகளில் தோன்றியிருக்கிறார்கள்.

5. இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது மென்மையாக செல்வது

முன்னாள் முதல்வராக இருந்தபொழுது கருணாநிதி தீவிர இஸ்லாமிய இயக்கங்களிடம் மென்மையாகவே நடந்து கொண்டார். இதற்கு ஒரு உதாரணமாக பிப்ரவரி 1998 இல் நடந்த கோயம்புத்தூர் குண்டு வெடிப்புகள் 70 பேரை பலிகொண்டது. 2006ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த போது பல தீவிர இஸ்லாமிய கூறுகள் விடுதலை செய்யப்பட்டன. இது பல இந்து போராளிகளின் கொலைகளில் போய் முடிந்தது.

6. தொடர்ச்சியான இந்து எதிர்ப்பு

தி.மு.கவின் கருத்தியல் ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்கள் மீது கடும் வெறுப்பை கொண்டுள்ளன. இது பெரும்பாலும் அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் இந்து மதத்திற்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுவதில் உணர முடிகிறது.

உதயநிதி ஸ்டாலின் விநாயகரை களிமண் என அழைத்தார் அதுதான் அந்த கட்சியின் விமர்சனங்களில் மிகவும் இலேசானது. ஸ்டாலின் இந்து திருமண மந்திரங்களை மோசமானது மற்றும் ஆபாசமானது என்று குறிப்பிட்டார். கனிமொழி, வெங்கடாஜலபதியை இகழ்ந்து கருத்துக்களை தெரிவித்தார்.

திராவிட போராளியான வீரமணி, ஸ்டாலினின் ஆதரவாளர் ஆவார். இவர் இந்து பெண்களின் மாங்கல்யங்களை அறுப்பதற்கு என்று ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். ஸ்டாலின் மேடையில் இருந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஒரு போலி சைவ பெண்மணி மேடையில் அழைத்துவரப்பட்டு இந்து மதம் பற்றி மோசமான கருத்துக்களை தெரிவித்தார்.

இத்தகைய ஞாபகங்களை மக்களின் மனதிலிருந்து அழிக்கவோ குறைக்கவோ தி.மு.க மிகவும் கஷ்டப்படுகிறது.

Reference: Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News