இந்து மத கடவுள்களை அசிங்கப்படுத்தியவர்களை வெளியில் உலாவவிட்டு, கல்யாணராமனை நள்ளிரவில் தூக்கிய தி.மு.க !
By : Mohan Raj
பா.ஜ.க இளைஞரணி முன்னாள் தேசிய செயலாளரும், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினருமான திரு.கல்யாணராமன் அவர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து, தேசத்துரோக பயங்கரவாதியை கைது செய்வது போல, தி.மு.க அரசின் காவல்துறை கைது செய்துள்ளது.
இவ்வாறு தேசத்துரோக குற்றவாளியை கைது செய்வது போல் கல்யாணராமனை கைது செய்ய போலீசாருக்கு என்ன அவசியம், அப்படி உத்தரவிட தி.மு.க அரசுக்கு என்ன நிர்பந்தம் என பார்த்தால் ஒன்றுமில்லை மறைந்த தி.மு.க தலைவரை பற்றி கவிஞர் கண்ணதாசன் அவர்கள் 'வனவாசம்' என்ற புத்தகத்தில் எழுதியதை மேற்கோள் காட்டியதே காரணம்.
அப்படி என்றால் திரு.கல்யாணராமன் அவர்கள் என்னதான் செய்தார்? ஆதாரப் பூர்வமான உண்மைகளை கோடிட்டுக் காட்டினார். அவ்வளவுதான்! காலம்சென்ற திரு.கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய "வனவாசம்" புத்தகத்தில் உள்ள ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அவ்வளவுதான் கல்யாணராமன் செய்தது, அதற்குதான் இரவில் இழுத்து சென்று கைது செய்யப்பட்டார்.
அப்படி கவியரசு கண்ணதாசன் அவர்கள், என்னதான் எழுதி உள்ளார்?
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள கவியரசு கண்ணதாசனின் வனவாசம் புத்தகத்தில், 154-வது பக்கத்தில் ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.
"அரசியல் பிரமுகர்" என்ற 23-வது தலைப்பின்கீழ் அந்த சம்பவம் வருகிறது. அதை அப்படியே, எந்தவித மாற்றமும் இன்றி, எழுத்துப் பிழை திருத்தம் கூட செய்யாமல், அதை அப்படியே இங்கு பிரசுரிக்கிறோம்.
23. அரசியல் பிரமுகர்
அவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி! தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றிஅற்புதமான வசனங்கள் எழுதவார்.
ஆனால் ஒரு பிச்சைக்காரனுக்குக்கூட கையைவிட்டுக் காலணாக் கொடுத்ததில்லை. தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார்.
அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த
அளவு சம்பளமே கொடுப்பார். தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும்
முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழிகளையும்
கையாளுவார்.
அரசியல் உலகம் அத்தகைய பிரகிருதிகளுக்குத்தான்
வழி திறந்து வைத்திருந்தது.
ஏன்? வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில்புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தைக்
கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப்
பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர். தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, அந்தப்
பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்குப் போய், அவர்
செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவையானவை.
சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து. அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார்.
மூத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. மற்றும் இருவர் கன்னியர். அவனும் அந்தத் 'துள்ளுதமிழ்த் தோழனும்' இன்னும்
ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டில்
நுழைந்தார்கள்.
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது. இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார்.
அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பான பேச்சுக்குரல் எழுந்தது.நேரம் ஆக ஆக, அது வாக்குவாதமாக வளர்ந்தது.
'கலாரசிகர்' வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார், நாட்டு வைத்தியரைத் தட்டி எழுப்பினார். "உன் பெண் சரியாக நடந்து கொள்ளவில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக்கொடு" என்றார். "போலீசைக் கூப்பிடுவேன்'' என்று மிரட்டினார், போலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார்.
இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு
தான் ஆளை விட்டார். பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார்.
அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து
அதே மாதிரிக் காரியத்திற்குத்தான் பயன்பட்டது. விடுதலை இயக்கத்தின் பிரமுகர்களைக் கவனியுங்கள். எப்படியோ அப்பாவிப் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையைக்கவனியுங்கள்" இதைத்தான் கல்யாணராமன் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க அரசு நள்ளிரவில் வீடு புகுந்து அவரை கைது செய்துள்ளது.
அதற்கு காரணமாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சென்னை, தொண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு.கோபிநாத் என்பவர் சென்னை மாநகர காவல் துறையில் அளித்த பகாரில், சென்னையைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் தனது @Bjpkalyaan என்ற டிவிட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து பதிவிடுவதாக கூறி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார். அதன்பேரில் மததிய குற்றபிரிவு, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கல்யாணராமன் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 டிவிட்களை பதிவிட்டது தெரியவந்ததை தொடர்ந்து. வழக்கின் விசாரணை அதிகாரி தலைமையிலான தனிப்படையினர் கல்யாணராமன, வ/55, த/பெ.ரங்கசாமி சென்னை என்பவரை நேற்று (16.10.2021) இரவு கைது செயதனர்" என குறிப்பிட்டுள்ளனர். அதாவது கவிஞர் கண்ணதாசன் எழுதியதை குறிப்பிட்ட விவகாரத்தை கைது நடவடிக்கையில் குறிப்பிடாமல் கல்யாணராமன் மாற்று மதத்தை அவமதித்து அந்த மக்களுக்கு எதிராக ட்விட் செய்தார் என குறிப்பிட்டுள்ளனர்.
எத்தனையோ முறை இந்து சமுதாய மக்களை அவமதித்த அரசியல் பிரமுகர்களை இவ்வாறு நடத்தவில்லை, தமிழகத்தில் பாரத நாட்டின் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷா'வையும் அவதூறாக பேசியவர்கள் மீது இந்த நடவடிக்கை இல்லை, இந்து கடவுள்களை அவதூறாக தொடர்ந்து பேசி வரும் திருமாவளவனை கூட்டணியில் வைத்து அழகு பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் கல்யாணராமன் மீது மட்டும் காழ்ப்புணர்ச்சி தி.மு.க அரசுக்கு?