Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் தி.மு.க'வை வளர்த்தெடுக்க ஆர்வம் காட்டும் ஸ்டாலின் !

இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் தி.மு.கவை வளர்த்தெடுக்க ஆர்வம் காட்டும் ஸ்டாலின் !

Mohan RajBy : Mohan Raj

  |  8 Nov 2021 2:10 AM GMT

இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தை தன் இஷ்டம்போல் செலவு செய்து அதற்கு தி.மு.க லேபிள் ஒட்டி வருகிறது ஸ்டாலின் தலைமையிலான இந்து மத வெறுப்பு அரசு.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 6 மாதங்களாக எந்த துறையை கவனம் செலுத்துகிறதோ இல்லையோ இந்து சமய அறநிலையத்துறையை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறது. இதற்கு கோவில்கள் மீதோ அல்லது இந்து சமய மக்கள் மீதோ உள்ள அக்கறை என நினைத்துவிட வேண்டாம், தி.மு.க'விற்கு தோல்வி பயம் என்றால் என்னவென்று காட்டிய இந்துக்கள் வாக்கு வங்கியும், தமிழகத்தில் பெரும்பாலான சொத்துக்களையும், வருமானத்தையும் தன்னகத்தே அடக்கியுள்ள இந்து சமய கோவில்களுமே காரணம்.

இதுதான் தி.மு.க'விற்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். அதாவது இந்து சமுதாயத்திற்கு நாங்கள் எதிரி அல்ல என வரும் தேர்தல் காலங்களில் பிரச்சாரம் செய்யவும், எண்ணிக்கையில் அதிகளவுள்ள இந்து சமய கோவில்களின் வருமானத்தை எடுத்து செலவு செய்து அதில் தி.மு.க முத்திரையை குத்தவும் என தனது அரசியல் விளையாட்டை இந்து சமய கோவில்களின் மீது காட்டி வருகிறது. இதன் வெளிப்பாடே தி.மு.க'வின் அறநிலையத்துறை மீதான திடீர் கரிசனத்திற்கு காரணம். இல்லையெனில் தி.மு.க எட்டி கூட பார்க்காது.

இந்ந நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் வருமானத்தை கல்லூரிகள், கருணை இல்லங்கள், அன்னதானக் கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர்- ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில், நாதஸ்வர இசைப்பள்ளிகள் என வாரி இறைத்து அதம் மேல் தி.மு.க கொடியை நட்டு வைக்க திராவிடர் கழக பின்புல தி.மு.க அரசு துடிக்கிறது. இவை அனைத்துமே மக்களுக்கு பயன்படும் என்றால் இந்து சமய மக்கள் கட்டாயம் ஏற்று கொள்வர், ஆனால் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போன்று தி.மு.க'வை வளர்தெடுக்க, நற்பெயர் வாங்க, திராவிடர் கழக பின்புல கடவுள் மறுப்பு இயக்கங்கள் வளர பரம்பரை பரம்பரையாக இந்து சமுதாய மக்கள் அறித்த நன்கொடைகளில் வளர்ந்த அறநிலையத்துறை சொத்துக்களை தி.மு.க கபளீகரம் செய்வது போல் அப்படியே உபயோகித்து வளர்கிறது.

அதன்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகின்றது. முக்கியமாக அறம் சார்ந்த பணிகள் பள்ளி, கல்லூரிகள், சமயம் சார்ந்த பள்ளிகள், கருணை இல்லங்கள், அன்னதானக் கூடங்கள், சமய நூலகங்கள், தங்கும் விடுதிகள், அர்ச்சகர்- ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், தவில், நாதஸ்வர இசைப்பள்ளிகள் போன்றவை துவங்கப்படும் என்றும், மேலும் பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 கோவில்களில் தேவையான மருத்துவர் மற்றும் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மையங்கள் ரூபாய் 10 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பிரதான கோவில்களில் முக்கியமானதான பழனி தண்டாயுதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், சோளிங்கர் இலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகிய கோவில்களில் இரண்டு மருத்துவர், செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் கொண்ட முதலுதவி மையங்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் முதலுதவி மையங்கள் திறப்பில் இந்து சமய மக்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை ஆனால் தி.மு.க அரசின் ஊழல் கறை படிந்த கைகள் இந்து சமய கோவில்களின் பணத்தில் விளையாடப்போவதை நினைத்தால்தான் பயமாக உள்ளது. தீபாவளிக்கு இனிப்புகள் வாங்குவதிலேயே 30% கமிஷன் அடிக்கப் பார்க்கும் தி.மு.க இந்து சமய அறநிலையத்துறை'யின் சொத்துக்கள் என்ற தேனை நக்கிப்பார்க்காமலா இருக்கும்?

இது மட்டுமல்லாது அறநிலையத்துறை பணத்தில் சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய 4 இடங்களில் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய 4 பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உள்ளது தி.மு.க அரசு, அவ்வாறு தொடங்குவதில் இந்து சமுதாய மக்களுக்கு ஏக சந்தோஷமே! ஏனெனில் இதுவரை 210 மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். மேலும் பலர் சேர்ந்து படிக்கவுள்ளனர். அப்படி இந்து சமய அறநிலையத்துறை பணத்தில் மாணவர்கள் படிப்பது கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டிய விஷயமே ஆனால் இதற்கு தி.மு.க தன் சாயத்தை பூசவும், இதற்கு மூலமே முதல்வர் ஸ்டாலின்தான் என பிரச்சாரம் செய்வது கண்டிப்பாக எதிர்த்து கேட்க வேண்டிய விஷயம்.

காரணம் இந்துக்களின் பண்டிகைகள் என்றால் முதல்வருக்கு கசக்கும், இந்து சமுதாய கடவுள்களை தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் மூலம் கிண்டல் செய்வர், இந்து சமுதாயத்தை அழிக்க நினைக்கும் கட்சிகளை பாலூட்டி வளர்ப்பார், இந்து சமய அடையாளமான விபூதி போன்ற புனிதமானதை இழிவாக நினைப்பார் ஆனால் இந்து சமய அறநிலையத்துறை பணத்தை மட்டும் வைத்து வரும் திட்டங்களை தன் பெயர் போட்டுக்கொண்டு நல்ல பெயர் வங்க எவ்வித கூச்சமும் இருக்காதா முதல்வருக்கு.

News TM

Nakkheeran.in







Next Story
கதிர் தொகுப்பு
Trending News