Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க மீண்டும் சந்திக்க இருக்கும் 1977 சம்பவம் - கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர், ஸ்டாலினுக்கு ரஜினியா?

தி.மு.க மீண்டும் சந்திக்க இருக்கும் 1977 சம்பவம் - கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர், ஸ்டாலினுக்கு ரஜினியா?

தி.மு.க மீண்டும் சந்திக்க இருக்கும் 1977 சம்பவம் - கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர், ஸ்டாலினுக்கு ரஜினியா?

Mohan RajBy : Mohan Raj

  |  4 Dec 2020 7:30 AM GMT

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஓர் வரலாறு உண்டு அது நடிகர்கள் நாடாள தேவையில்லை என முழக்கமிடுவது பின் அதே நடிகர்களிடம் முதல்வர் நாற்காலியை பறிகொடுத்துவிட்டு கடைசிவரை எதிர்கட்சி வரிசையில் உட்காந்திருப்பது என்பதே அந்த வரலாறு.

தி.மு.கவின் ஊழல் புகார்களை தட்டி கேட்ட எம்.ஜி.ஆரின் மேல் பழிசுமத்தி அவரை தி.மு.க'வில் இருந்து நீக்கினார் கருணாநிதி விளைவு 4.7.1977 அன்று கருணாநிதியை வீழ்த்தி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். பின் தன் வாழ்நாள் வரையில் எம்.ஜி.ஆர் முதல்வர்'தான், அமெரிக்கா'வில் சிகிச்சையில் இருக்கும் போது கூட இங்கே தேர்தல் சமயத்தில் கருணாநிதி "என் நண்பன் மீண்டு வந்தால் நான் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்" என மக்களிடம் கெஞ்சியும் மக்கள் எம்.ஜி.ஆரை படுத்துக்கொண்டே வெற்றி பெற வைத்தனர். அந்தளவிற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் வாங்கியிருந்தது தி.மு.க'வின் ஊழல் ஆட்சி.

பின் எம்.ஜி.ஆர் இறந்தார் கட்சி இரண்டானது, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது பின் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க தமிழக மக்களிடத்தில் சர்வ வல்லமை பொருந்தி ஆட்சி செய்தது. பின்னர் 2011'ல் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு அவரும் தன் மரணம் வரை தமிழக முதல்வராகவே இருந்தால் வழக்கம் போல் தனது ஊழல் மற்றும் ரவுடியிச பழக்கத்தால் தி.மு.க எதிர்கட்சி வரிசையில் உட்காந்து வேடிக்கை மட்டுமே பார்த்தது. பின் கருணாநிநி இறக்கும் தருவாயில் கூட தி.மு.க'வால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

தற்பொழுது அரசியல் வெற்றிடத்துடன் தமிழக சட்டசபை தேர்தல் வருகிறது இதனை நமக்கு சாதகமாக்கி, மக்களிடம் பொய் விளம்பரம் செய்து, அதற்காக 380 கோடிக்கு பிரசாந்த் கிஷோர் என்னும் ஆளை கூலிக்கு வைத்து, ஆளும் அரசுகள் மீது வன்மம் மற்றும் வெறுப்பை மக்கள் மத்தியில் வரவழைத்து அதனால் தான் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக ஆட்சி பீடத்தில் தன் குடும்பம் சகிதம் அமரலாம் என கணக்கு போட்டு வலம் வந்த தி.மு.க தலையில் சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வை திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் அறிவிப்பு குடுத்துள்ளது.

ஏற்கனவே இந்து மத துவேஷம், கடவுள் நி்ந்தனை, இந்துக்களை அவமதித்தல், இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துதல் என தி.மு.க மக்கள் மத்தியில் முகமூடி கிழிந்து வலுவிழந்து கிடக்கும் இந்த வேளையில் பணத்தை வைத்தாவது சில மக்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திலும் மண் விழுந்துள்ளது தி.மு.க'விற்கு. ஏனெனில் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பலத்தை அவரின் ரசிகர்களை விட தி.மு.க நன்கு அறியும் அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1996'ல் கருணாநிதி'க்கு முதல்வர் நாற்காலியை திரு.ரஜினிகாந்த் பரிசளித்த நிகழ்வை இன்றை தி.மு.க தலைவர் ஸ்டாலின் மறக்க மாட்டார்.

கருணாநிதி'க்கே முதல்வர் இருக்கையை பரிசளித்த திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு ஸ்டாலினை அந்ந இருக்கையின் பக்கம் அண்டவிடாமல் இருக்க நன்றாகவே தெரியும் என்பதுதான் இன்றைய தி.மு.க'வின் பயம்.

யார் செய்த பாவமோ இன்றைக்கு தி.மு.க'விற்கு அந்த பாவத்தின் பலனை தருகிறது. இனி தி.மு.க பரிகாரத்தை தேடி ஓட வேண்டியதுதான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News