Kathir News
Begin typing your search above and press return to search.

துணிவாவது, வாரிசாவது நாங்கதான் வசூலில் டாப் தெரியுமாடே? - மலைக்க வைக்கும் டாஸ்மாக் வசூல்!

தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் வாரிசு துணைவு என இரு படத்தில் யார் படம் கலெக்ஷன் அதிகம், வாரிசா? துணிவா? என போட்டி போட்டுக்

துணிவாவது, வாரிசாவது நாங்கதான் வசூலில் டாப் தெரியுமாடே? - மலைக்க வைக்கும் டாஸ்மாக் வசூல்!

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jan 2023 3:08 AM GMT

தமிழகத்தில் சினிமா ரசிகர்கள் வாரிசு துணைவு என இரு படத்தில் யார் படம் கலெக்ஷன் அதிகம், வாரிசா? துணிவா? என போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இருவரையும் தாண்டி டாஸ்மாக் அதிக கலெக்ஷனை அள்ளி லாபம் பார்த்துள்ளது.

தற்பொழுது தமிழகத்தில் மதுபான கடைகள் தமிழக அரசின் வசம் இருக்கிறது, அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய துறைகளில் டாஸ்மாக் இருக்கக்கூடிய ஆயத்துறை தீர்வு முன்னிலை வகிக்கிறது. இதன் அமைச்சராக செந்தில் பாலாஜி சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறார்! அதாவது அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் இவரது துறைக்கு நிகர் வேற எந்த துறையும் கிடையாது, மதுபாட்டில்கள் விற்பனை, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக விற்பனை, மேலும் அந்த டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பார்கள் ஏலம் விடப்படும் ஏலத்தொகை இது போன்ற கலெக்ஷன்களை அரசுக்கு வருவாய் கொழிக்கிறது.

இன்று போதையை ஒழித்தே தீருவோம் என முதல்வர் கூறினாலும் இந்த பக்கம் டாஸ்மாக் கடையை திறந்து லாபம் பார்க்கவே செய்கிறது அரசு, இன்றைய தேதியில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை கூட விடுமுறை விட எந்த ஒரு பேரிடர் காலம் வந்தாலும் அரசு தயங்காது! அது மழைக்காலம் ஆனாலும் சரி, கொரோனா போன்று நோய் தொற்று காலமோ எதுவானாலும் கல்விநிலையங்களை மூட துளியும் அரசு தயங்காது. ஆனால் டாஸ்மாக்கை இரண்டு தினங்கள் மூடுவதென்றால் அரசின் அத்தனை துறையும் அலறி அடித்துக் கொண்டு வேலை செய்யும்!

காவல்துறை பந்தோபஸ்து கொடுக்கும், வருவாய்த்துறை முறையாக கடைகள் இயங்குகிறதா என பார்க்கும், அரசு அதிகாரிகள் கடைக்கு சரியாக மதுபான பாட்டில்கள் சென்று சேர்ந்தனவா என தீவிரமாக கண்கணிப்பார்கள். ஒருவேளை மழைக்காலம் என்றால் கூட ஒரு பகுதியில் சாலை துண்டானால் கூட அந்த பகுதிக்கு மழை நிவாரண பணிகள் அல்லது உணவுப் பொருட்கள் சென்று மக்களுக்கு சேருகிறதா இல்லையா என பார்க்கும் முன் அந்த பகுதியில் உள்ள டாஸ்மார்க்ளுக்கு பத்திரமாக நனையாமல், உடையாமல் பாட்டில்களை கொண்டு சேர்ப்பது எப்படி என அரசு யோசித்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சாதாரண நாட்களில் தமிழகத்தில் மது விற்பனை 75 முதல் 85 கோடி வரையில் இருக்கும், இதுவே சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் சற்று அதிகமாகி 90 கோடி முதல் 100 கோடி வரை செல்வது வழக்கம்! மது பிரியர்கள் வழக்கமாக சாதாரண நாட்களில் அருந்தும் மதுவைவிட இது போன்ற பண்டிகை காலங்களில் அருந்தும் மதுவின் எண்ணிக்கையானது தமிழகத்தில் கடந்து சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சாதாரண நாட்களில் ஒருவர் தான் மட்டும் மது அருந்துகிறார் என்றால் இது போன்ற பண்டிகை நாட்களில் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மொத்தமாக வாங்கி வைத்து மது அருந்துவதனால் டாஸ்மாக் கடைகளுக்கு வசூல் வாரி குவிகிறது.

குறிப்பாக பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விடுமுறை விடப்படும் என தெரிந்ததால் முந்தைய நாட்களில் அவர்களுக்கு தேவையான பாட்டில்களை வாங்கி கூட இருப்புவைத்து குடிக்கும் அளவிற்கு டாஸ்மாக்கில் மது விற்பனை களைகட்டுகிறது.

இந்த முறை பொங்கல் பண்டிகை, அரசு விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையும் சேர்ந்து டாஸ்மாக் கடையில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பொங்கல் பண்டிகை துவங்கியது அதாவது போகி பண்டிகை சனிக்கிழமை, அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் என இரண்டு நாட்கள் பண்டிகை தொடங்கியதால் டாஸ்மாக் வசூல் விவரங்கள் ஓரளவுக்கு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் சாதாரண நாட்களில் 75 கோடி ரூபாய்க்கு விற்கும் அது சனிக்கிழமை போகிப் பண்டிகை அன்று 250 கோடி ரூபாய்க்கு அதாவது மூன்று மடங்கு அதிகமாக விற்று உள்ளது.

அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும், பொங்கல் தினத்தன்று 450 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடந்திருக்கலாம் என சில தரப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வார பொங்கல் பண்டிகையின் டாஸ்மாக் விற்பனையை கணக்கு வைத்து பார்க்கும் பொழுது எப்படியும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்டி இருக்கலாம் எனவும் தகவல்கள் உலா வருகின்றன.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை, குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே விடுமுறை தினங்களில் நடத்தப்படும் மதுபான சேல்ஸ் விவரங்களை டாஸ்மாக் நிர்வாகம் செய்திகளாக வெளியிடுவதில்லை. அதற்கு முன்னால் டாஸ்மாக் நிர்வாகம் மொத்த மதுபான விற்பனை எவ்வளவு என விவரங்கள் வெளியிட்டு வந்து நிலையில் தற்போது அது வெளியிடாத காரணமும் என்னவென்று மக்களுக்கு புரியவில்லை!

ஒருவேளை இவ்வளவு விற்கு மது விக்கிறோம் என அரசின் மேல் யாரேனும் கண் வைத்து விடுவார்களா என டாஸ்மாக் நிர்வாகம் கண்திருஷ்டிக்கு பயந்து மதுபான பாட்டில்களின் விற்பனையை மக்களுக்கு கூறாமல் இருக்கிறதோ என்னவோ? தமிழனை சமுதாயத்திற்கான நல்ல குடிமகன் ஆக்காமல் டாஸ்மாக்கிற்கான சிறந்த குடிமகன் ஆக்குவதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது! எனினும் இன்னும் கடைகளை அதிகமாக திறக்கலாமா எந்த பகுதிகள் கடைகள் இல்லை என மைக்ரோ லெவல் மேனேஜ்மென்ட் மூலம் புதிய கடைகளை திறக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது!

துணிவா? வாரிசா? என திரையரங்கில் பாதி தமிழர்கள் இருந்தாலும் மீதி தமிழர்கள் துணிவாவது, வாரிசாவது எங்களுக்கு பாட்டில் தான் பெருசு என மதுபான கடைகளின் முன்பு கிடக்கிறார்கள் இதுதான் தமிழக பண்டிகை காலங்களில் பண்டிகை கொண்டாட்ட நிலை!

கொண்டாட்டம் என்றாலே தமிழகத்தில் மது என மாறிவிட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News