Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக கல்விக்காக 4 வருஷத்துல மத்திய அரசு கொடுத்த தொகை எவ்ளோ தெரியுமா? - பொன்முடிக்கு வகுப்பெடுத்த அண்ணாமலை

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூபாய் 6,664 கோடி வழங்கி உள்ளளது என்று அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

தமிழக கல்விக்காக 4 வருஷத்துல மத்திய அரசு கொடுத்த தொகை எவ்ளோ தெரியுமா? - பொன்முடிக்கு வகுப்பெடுத்த அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 July 2022 8:43 AM GMT

தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு ரூபாய் 6,664 கோடி வழங்கி உள்ளளது என்று அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் கே. அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது சில கருத்துக்களை முன்வைத்தார்.அதைதெளிவுபடுத்த வேண்டியது தமிழக பா.ஜ.க.வின் கடமையாகக் கருதுகிறோம்.

தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகம் என்றார் உண்மைதான் அது மட்டுமல்ல 1967 க்கு பின்பு மட்டுமல்ல, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அறிவாற்றலில் முன் உதாரணமாக திகழ்ந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

1800ம் ஆண்டுகளில் தொடக்க காலத்திலேயே திராவிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் வருவதற்கு முன்பே தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் கல்வி பயின்று வந்துள்ளனர். என்பதற்கான சான்று உள்ளது .ஆனால் இன்றோ தமிழகத்தில் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்ற உண்மையை அமைச்சர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம் .தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது

2016-ஆம் 1,65, 417 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் 2020ஆம் ஆண்டு அது 85, 740 ஆக குறைந்துவிட்டது சுமார் 50 சதவீத வீழ்ச்சி.

மேலும் 2021 ஆம் ஆண்டு நடந்த அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வில் வெறும் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக செய்திகள் வந்தன.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழக இன்ஜினியரிங் கல்லூரியில் நுழைவோர் எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதன் வெளிப்பாடாகவே இது தெரிகிறது. தனது உரையை முடிக்கும் போது அமைச்சர் பொன்முடி தமிழகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டுமம் எனக் கேட்டுக்கொண்டார். தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தவும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி சென்றடையவும் சமக்ரா சிக்ஷா நிதி மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 6 ஆயிரத்து 664 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 942 மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் திட்டத்தின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மீண்டும் ஒருமுறை எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


Source - Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News