Kathir News
Begin typing your search above and press return to search.

IAS பாட, பயிற்சி முறை இடதுசாரி சித்தாந்தமுடைய அதிகாரிகளை பெரும்பாலும் உருவாக்குகிறதா?

IAS பாட, பயிற்சி முறை இடதுசாரி சித்தாந்தமுடைய அதிகாரிகளை பெரும்பாலும் உருவாக்குகிறதா?

IAS பாட, பயிற்சி முறை இடதுசாரி சித்தாந்தமுடைய அதிகாரிகளை பெரும்பாலும் உருவாக்குகிறதா?

Saffron MomBy : Saffron Mom

  |  11 Nov 2020 7:15 AM GMT

இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கு ஒருவர் சிவில் சர்வீஸ் பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டும். அது உலகத்திலேயே மிகுந்த கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்று. அதில் தேர்ச்சி பெற்று வெளியே வருபவர்கள் விகிதம் மிகவும் குறைவு, அதுவும் நல்ல மதிப்பெண்ணுடன். ஆனால் கடந்த சில வருடங்களாக சில IAS அதிகாரிகள் தங்கள் பதவியை விட்டு, சமூக நல ஆர்வலர்கள் ஆகவோ அல்லது அரசியல்வாதிகளாகவும் ஆவதை பார்க்கிறோம்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்களில் பலரும் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்கள் அல்லது சமூக ஆர்வலர் என்ற பெயரில் மோடி அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். இதற்கு சில சிறந்த உதாரணங்களாக கண்ணன் கோபிநாதன், சசிகாந்த் செந்தில் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்கள், 2019ல் ஜம்மு&காஷ்மீர் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்காக ராஜினாமா செய்ததாக கூறினர்.

காஷ்மீரை இந்தியாவுடன் ஒன்றிணைக்கும் முயற்சியில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்ததை நாடு முழுவதிலும் இருந்த மக்கள் பாராட்டினார்கள். ஆனால் இந்த அதிகாரிகளோ மக்களின் உணர்வுகளில் இருந்து மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். 2019 இல் ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில் என்ற அதிகாரி அப்போதிலிருந்து அரசாங்கத்திற்கு எதிரான பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவர் ட்விட்டரில் தான் தமிழ்நாடு காங்கிரஸில் இணைவதாக அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தன்னுடைய சண்டையை தொடரும் முயற்சியில் தான் காங்கிரசில் இணைந்து விட்டதை அனைவருக்கும் அறிவிக்க விரும்புவதாகவும் 'குறைந்த செல்வாக்குடைய' மக்களுக்காகவே தான் வாழ்நாள் முழுவதும் குரலாக இருக்க விரும்பியதாகவும் அதையே தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை நிறைவேற்றுவேன் என்றும் ஒரு கடிதத்தை இணைத்து ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

பெரும்பாலான அதிகாரிகள் இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவர்களாக இருந்தால் மத்தியில் இடதுசாரி அரசாங்கங்கள் வரும் பொழுது நன்றாக ஒத்துப் போகிறார்கள் ஆனால் சற்றே வலப்புறம் சார்ந்த கட்சிகள் ஆட்சிக்கு வரும் பொழுது நிர்வாகத்தில் கடும் குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கிறார்கள்.

எனவே இதில் நாம் கேட்க வேண்டிய அடிப்படையான கேள்வி என்னவென்றால் எதற்காக பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் இடதுசாரி சித்தாந்தத்தை நோக்கி செல்கிறார்கள், அவர்களுடைய பதவியின் படி அவர்கள் அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டியதும் , ஆட்சியின் விருப்பங்களை செயல்படுத்த வேண்டியது மட்டும் தானே அவர்களுடைய பணி?

இதற்கான பதில் அவர்கள் ஐஏஎஸ் பரீட்சைக்கு தயாராகும் பொழுது, என்ன மாதிரியான புத்தகங்களை, கட்டுரைகளை அவர்கள் படிக்கிறார்கள் என்பதிலும், அவர்கள் அந்த வேலைக்கு பணிக்குச் சென்ற பின் எந்த மாதிரியான பயிற்சி பெறுகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

சுப்பிரமணியன் சுவாமியால் 'நக்சல் பத்திரிக்கை' என்று அழைக்கப்படும் 'தி ஹிந்து', கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் N.ராம் ஆகியோரை அதனுடைய நிர்வாகத்திலும் தலையங்க உறுப்பினர்களிலும் கொண்டிருக்கிறது. இந்தப் பத்திரிக்கை தான் IAS பரீட்சை பாஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கட்டாயமாக படிக்க வேண்டிய பத்திரிக்கையாக இருக்கிறது.

'அவுட்லுக்' 2007 இல் வெளியிட்ட ஒரு கட்டுரையில், "வடக்கு டெல்லியில் முகர்ஜி நகரில் சுற்றியிருக்கும் ஐஏஎஸ் கோச்சிங் வகுப்புகளுக்கு அருகில் வசிக்கும் இளைஞர்கள் அறைகளை பகிர்ந்துகொண்டு, அந்த அறை முழுக்க புத்தகங்கள், வழிகாட்டிகள், நிறைய அட்டவணைகள், பழைய தேர்வுத் தாள்கள், மற்றும் 'தி ஹிந்து' பத்திரிக்கையின் நசுங்கிய பக்கங்கள் நிரம்பியுள்ளன" என்று குறிப்பிட்டது.

IAS ஆக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் ஒரு வலுவான செல்வாக்கைப் பெற்றுள்ளது 'தி ஹிந்து' பத்திரிக்கை. ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் டெல்லி ,அலகாபாத், புனே ஆகிய இடங்களில் அதனுடைய சர்க்குலேஷன் மிக அதிகமாக இருக்கிறது.

ஹிந்து மற்றும் அதனுடைய துணைப் பத்திரிகையான பிரண்ட்லைன் உடைய சித்தாந்தங்களும் நன்றாக அறிந்ததே. இது எந்த அளவிற்கு தீவிரமான இடதுசாரிக் கொள்கைகளை பரப்புகிறது என்பதை, 'தி வயர்' என்ற மோடி அரசாங்கத்துக்கு எதிரான போலி செய்திகளை பரப்பும் ஆன்லைன் தளத்தின் நிறுவனர் சித்தார்த் வரதராஜன், தி ஹிந்து பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்தார் என்பதிலேயே தெரிந்து கொள்ளலாம்.

ஊடக விமர்சகர்கள் கூறுகையில், வரதராஜன் அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டதற்கு காரணம் அவர் செய்திகளைக் கூட தலையங்கங்கள் போல எழுதத் துவங்கி விட்டார் என்பது என்றாலும் இதே விஷயம் தான் N.ராம் அங்கே ஆசிரியராக இருந்தபோது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் கூறுகையில் அந்த பத்திரிக்கையின் முக்கிய ஆசிரியராக இருந்த பொழுது சில வகையான செய்திகளை அவர்கள் புறக்கணித்தனர்.

உதாரணத்துக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் 2009 இல் திபெத்தில் நடந்த விஷயங்கள், மேற்கு வங்கத்தில் 2007இல் நந்திகிராமில் நடந்த வன்முறைகள் ஆகியவற்றை அவர்கள் தவிர்த்தனர். ஹிந்துவை தவிர்த்து IAS ஆக விரும்பும் அதிகாரிகள் படிக்க வேண்டிய புத்தகங்களில், மார்க்சிஸ்ட் வரலாற்று ஆசிரியர்களான ரோமிலா தாப்பர், பிபின் சந்திரா, சதீஷ் சந்திரா, இர்பான் ஹபீப் மற்றும் JNU வின் மற்ற சமூக அறிவியல் துறையில் உள்ள பேராசிரியர்களின் புத்தகங்களும் உள்ளன.

எனவே ஏற்கனவே மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு மாணவன் பரீட்சைகளை பாஸ் செய்து ஐஏஎஸ் பயிற்சி பெறுவதற்காக உள்ளே சென்றால், அந்த நிறுவனத்திலும் நேருவின் சோஷலிச கொள்கைகளே மேலும் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரைக்கும் அங்கே உள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அதை பயிற்றுவிப்பாளர்கள் எல்லோருமே காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களுக்கு சாய்ந்து இருந்தனர்.

இப்பொழுதும் கூட அங்கே பணிபுரியும் பயிற்சியாளர்கள் நேருவின் சோஷலிசக் கொள்கைகளுக்கு சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மோடி அரசாங்கம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பயிற்சி மையங்களை சீர்திருத்தம் செய்து வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.

மோடி அரசாங்கத்தின் திட்டத்தின்படி ஐஏஎஸ் அதிகாரிகளை பயிற்றுவிக்கும் போது ஒரு நிர்வாகத்தை எப்படி நடைமுறையில் நடத்துவது என்பதை அதிகம் பயிற்றுவிக்கும். அதை சித்தாந்த ரீதியாக அல்லது தியரியாக கற்பிக்கக் கூடாது என்பதில் அக்கறை காட்டுகிறது,

அவர்கள் ஒரு பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பதில் பயிற்சி அளிக்க வேண்டுமே தவிர, சித்தாந்தவாதியாக வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு IAS ஆபீசர் தெரிவிக்கிறார் ஆனாலும் மூளைச்சலவை செய்யப்பட்ட சில செந்தில் போன்றவர்கள் சில சித்தாந்தங்களுக்கு மிகவும் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களால் ஒரு வித்தியாசமான அரசியல் தலைமையின் கீழ் வேலை செய்ய முடியாது, அரசாங்கத்துக்கும் அவர்கள் ஒரு சுமையாக மாறுகிறார்கள்.

எனவே ஏற்கனவே பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் உள்ளே நுழையவிருக்கும் மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கும் முறையை சீர்திருத்தம் செய்வது இந்த பிரச்சினையை தீர்க்க சரியான வழியாக இருக்கும்.

Translated From: TheTFI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News