'இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டுறதோட நிப்பாட்டுங்க தம்பிகளா...!' - சீட்டுன்னு வந்தா அது எங்களுக்குத்தான் - காங்கிரஸ் விடுத்த செய்தி
'ஏதே இளைஞர்களுக்கு வாய்ப்பா? இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டுறதோட நிப்பாட்டுங்க தம்பிகளா, அதை விட்டுட்டு கட்சியில சீட்டு! கீட்டு! கேட்டு வரக்கூடாது'
By : Mohan Raj
'ஏதே இளைஞர்களுக்கு வாய்ப்பா? இளைஞர்கள் எல்லாம் போஸ்டர் ஒட்டுறதோட நிப்பாட்டுங்க தம்பிகளா, அதை விட்டுட்டு கட்சியில சீட்டு! கீட்டு! கேட்டு வரக்கூடாது' என காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த இளைஞர்களுக்கு தலையில் அடித்தது போல் ஒரு பதிலை கூறியது போல் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டதுங்க, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சுங்க.
இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே பார்க்கப்பட்டது, ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு திமுக கூட்டணியில் இருந்த தொகுதி இன்னொரு பக்கம் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் யார் வேட்பாளர் அறிவிக்குறதுன்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் பாஜக க்கு இது வரபோற நாடாளுமன்ற தேர்தலோட பலப்பரிட்சை இப்படி மூன்று மிகப்பெரிய கட்சிகளுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்பவே முக்கியமா பார்க்கப்பட்ட நிலையில இந்த தொகுதியில போட்டியிடும் வேட்பாளர் கண்டிப்பாக கவனம் குவிக்கிற வேட்பாளராக இருப்பாங்க என்று எதிர்பார்ப்பு நிலவி வந்துச்சு.
இப்படி தமிழக அரசியல அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு நகர்த்தி கொண்டு போற மைப்புள்ளியா ஈரோடு இடைத்தேர்தல் மாறியிருக்கிற நேரத்துல யாருப்பா ஈரோடு தொகுதியுடைய வேட்பாளரா வருவாங்கன்னு சொல்லி எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு! இந்த நேரத்துலதான் இறந்து போன திருமகன் ஈவேரா ஓட தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன காங்கிரஸ் ஓட தலைமை வேட்பாளரா அறிவிச்சிருக்கு.
அதாவது இப்படி அறிவிச்சதுக்கு பின்னாடி காங்கிரஸ் சொல்ல வர விஷயம் என்னன்னா என்னதான் கட்சியில வந்து புதியவர்கள் வேணும் கட்சிக்கு, புது ரத்தம் பாய்ச்சணும், கட்சிக்கு அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போகணும்னு மேடைகளிலும்/ வெளியிலயும் பேசி வந்தாலும் தேர்தல்னு வந்துட்டா, சீட்டுன்னு வந்துட்டா கட்சியில் இருக்க கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கும், கட்சியில பல வருஷமா இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் வாய்ப்பே தவிர புதுசா இருக்கிற இளைஞர்கள் போஸ்டர் ஒட்டுறதுக்கும், சோசியல் மீடியால காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் தேவை என்று போஸ்ட் போடுறதுக்கு தான் உபயோகப்படுத்த முடியும்ன்னு சொல்லாம சொல்லி இருக்கு காங்கிரஸ் கட்சி. இது ஒரு பக்கம்!
இன்னோரு பக்கம் பார்த்தீங்கன்னா இது திமுகவோட கூட்டணி கட்சி தொகுதி எப்படி பார்த்தாலும் காங்கிரஸ் அங்க வேலை செய்ய போறது கிடையாது! என்ன அவங்க வந்து எந்த தேர்தலுக்கும் வேலை செஞ்சு பழக்கமும் கிடையாது! வேலையும் செய்ய மாட்டாங்க! அவங்களுக்கு என்ன திமுக கூட ஒட்டிட்டு இருக்கணும், அவங்க கொடுக்கிற சீட்டு வாங்கணும், அவங்களே வேலையையும் பார்த்திடுவாங்க இதுதான் காங்கிரஸோட நிலைப்பாடாக இருந்துச்சு! இதை காங்கிரஸ்காரங்களை ஒத்துப்பாங்க!
இந்த மாதிரி இருக்கிற நிலைமைல திமுக தரப்பிலேயோ ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சி வசம் இருக்கு அதனால தோத்துப்போன காங்கிரசுக்கு அசிங்கமா இல்லையோ இது திமுக கூட அசிங்கன்றது காங்கிரஸ் விட திமுக நல்ல நம்புதுங்க, அதனால எங்கள நாங்க காப்பாற்றுவதற்காக உங்களை ஜெயிக்க வைக்கிறோம் சொல்லி தான் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் திமுக கொடுத்திருக்கு.
இப்படி இருக்கிற பட்சத்தில் உங்களுக்கு நாங்க தொகுதியை கொடுத்துட்டோம் ஆனால் நீங்க பாட்டுக்கு யாராவது புது ஆட்களை கொண்டு வந்து போட்டு அவங்களுக்கு எங்களை வேலை பாக்க எங்க வச்சிடாதீங்க! ஏன்னா நாங்களே ஒரு குடும்பத்துக்கு வேலை பார்த்து பழக்கப்பட்ட ஆளுங்க நாங்க புது ஆட்களுக்கு வேலை பார்க்க மாட்டோம். அதே எங்க ரத்தத்துல ஊறிருச்சு! அதனால நீங்க எங்கள மாதிரி வழக்கம் போல யாராவது உன் கட்சியில் இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுங்க அப்படின்னு சொல்லி சொல்லும்போது வேற வழி இல்லாம ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சீட்டை கொடுத்து காங்கிரஸ் கட்சி அறிவிச்சுட்டாங்க.
கட்சியில் புது ரத்தம் பாய்ச்சணும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்ன்னு சொல்லி சொல்லியே இளைஞர்களி கிட்ட வேலை வாங்கிட்டு நோகாம குடும்ப உறுப்பினருக்கு சீட்டு கொடுத்து காங்கிரஸ் இளைஞர்களுக்கு அல்வா கொடுத்திருக்கு காங்கிரஸ்.
ஆனா அது வெளியில் இருந்து பார்க்கிற மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னா ஒன்னும் அப்பா, அதை விட்டா மகன் இது ரெண்டையும் தவிர உங்களுக்கு வேற எதுவும் தெரியாதா? அப்படின்னு மக்களே நினைக்கிற அளவுக்கு ஆகிப்போச்சுங்க!
என்னதான் வெளியில் மேடையில் சமுதாயம் முன்னேற்றம், சமூக நீதி, மக்கள் எல்லாரும் வேணும், புது ரத்தங்கள் வரணும்னு சொல்லி திமுக, காங்கிரஸ் பேசினாலும் தேர்தல்ன்னு வந்துட்டா எங்களுக்கு குடும்பம் தான் முக்கியம் அப்டின்றது நல்லாவே தெரிஞ்சுபோச்சு மக்களுக்கு! காங்கிரஸ், திமுக தொண்டர்கள்தாங்க பாவம் அடுத்த எலெக்ஷனுக்கும் போஸ்டர் ஓட்டிட்டு தான் இருப்பாங்க.