'திராவிடம் எல்லாம் ஒன்னும் இல்லை எல்லாம் நாடகம்' என தோலுரிக்கும் 'திராவிட நாடு ஒரு வெங்காயம்' புத்தகம் - இணையங்களில் வைரல்
'திராவிடர் என்ற வெற்றுச் சொல்லை வைத்து சிலம்பாட்டம் ஆட வேண்டுமா?' என திராவிடத்தை விமர்சிக்கும் 'திராவிட நாடு ஒரு வெங்காயம்' என்ற புத்தகம் தற்பொழுது புயலை கிளப்பியுள்ளது.
By : Mohan Raj
'திராவிடர் என்ற வெற்றுச் சொல்லை வைத்து சிலம்பாட்டம் ஆட வேண்டுமா?' என திராவிடத்தை விமர்சிக்கும் 'திராவிட நாடு ஒரு வெங்காயம்' என்ற புத்தகம் தற்பொழுது புயலை கிளப்பியுள்ளது.
திராவிடம், திராவிடர், திராவிட நாடு என்கின்ற கோஷத்தை முன்வைத்து தமிழக மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க நாமெல்லாம் திராவிடர்கள் இந்த நிலத்தின் பூர்வ குடிகள் நான் தான் என தொடர்ந்து பேசி தமிழர்களிடையே அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில் இதை தொடர்ச்சியாக தி.மு.க'வின் சமூக வலைத்தளவாசிகள் திராவிடம் என்ற வார்த்தையை தொடர்ச்சியாக விளம்பரம் செய்து வருகின்றனர்.
தி.மு.க'வை ஆரம்பித்த அண்ணாதுரை முதல் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை இதை திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர். தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் திராவிடர்கள் என்றும் மற்ற பகுதிகளில் வசிப்போர் வேறு நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்றும் தமிழர்கள் மத்தியில் பேசி பேசி அக்கருத்தை பதிய வைத்து வருகின்றனர் தி.மு.க'வினர். ஆனால் அதற்கு அவர்களால் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியவில்லை. ஒரு காலத்தில் திராவிடம் என்ற வார்த்தையை முதன் முதலில் அரசியலில் பயன்படுத்திய ஈ.வே.ராமசாமி பிற்காலத்தில் அந்த ஒரு கருத்து போலி என்பதை புரிந்து கொண்டு அக்கருதாக்கத்திலிருந்து பின்வாங்கியதோடு 'திராவிடம் ஒரு வெங்காயமென' கூறியதும், திராவிடத்தை தலையில் தூக்கி வைத்து ஆடும் தி.மு.க'வையும் ஈ.வே.ராமசாமி கடுமையாக விமர்சனம் செய்ததும் வரலாறு.
இதன் பின்னணியில் திராவிடம் பற்றி தி.மு.க'விற்கு ஏராளமான கேள்விகளை எழுப்பியும், திராவிட கருத்திலிருந்து ஈ.வே.ரா பின்வாங்கியது எதனால் என்பதை ஆராய்ந்து 1961ம் ஆண்டு ர.சண்முகம் என்பவர் 'திராவிட நாடு ஒரு வெங்காயமென்ற' புத்தகத்தை வெளியிட்டார். சென்னை 222, தம்பு செட்டி தெரு என்ற விலாசத்தில் இருந்து மதுரை நிலையம் என்ற பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த காலத்திலேயே புயலை கிளப்பி எந்த புத்தகத்தின் பக்கங்கள் இப்பொழுது சமூக வலைதளங்களில் மீண்டும் முழுவீச்சாக பரவுகின்றன.
அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுளதாவது, திராவிடம் என்ற சொல் தமிழர் நெஞ்சத்தில் பாச்சப்படும் கொடிய நஞ்சு, திராவிடன், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்து கெடுக்கும் நாச கருத்துக்களாகும் இந்த நாச கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால், நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தில் பெருமையும் தமிழனத்தின் சிறப்பும் தமிழகத்தின் பண்பும் அடியோடு அழிந்த நாசமடைந்துவிடும்.
அந்த வகையில் எந்த முறையில் ஆராய்ந்து பார்த்தாலும் தி.மு.க'வினர் திராவிட வாதத்தில் பொருள் இல்லை. இன்று வாழும் தென்னக மக்கள் தான் திராவிடர்கள் என நிரூபிப்பதற்கான ஆதாரத்தை காமிக்கவே முடியாது! அப்படி நிரூபிக்கப்படவில்லை. தமிழகம், ஆந்திரம், கேரளம், கன்னடம் ஆகிய நாடுகளின் கூட்டாட்சி தான் திராவிட நாடு இந்த கருத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் உண்மையாகவே பிடிப்பு நம்பிக்கை வைத்திருந்தால் வேங்கடத்துக்கு வெளியே தங்கள் செல்வாக்கை பரப்பி திராவிட நாடு கருத்தை ஆதரித்து ஆட்சி செய்ய முயற்சித்திருக்க வேண்டும்.
வடநாடு ஒழிக வடநாடு ஆதிக்கம் வேண்டாம் என கூச்சலிட திமுக வட்டாரம் திராவிடத்திற்கு மட்டும் வடமொழி ஆதரவை தேடி திரிவது வெட்கக்கேடான விஷயம் அல்லவா? திராவிடம் என்ற சொல் தமிழகத்துக்கு தமிழுக்கும் புறம்பானது என்ற கருத்தை உறுதியாக கொண்டவர்கள் நாவலர்கள் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழர்கள். தி.மு.க பெருந்தலைவர்கள் என்னதான் சரித்திர ஆதாரம் காட்டி திராவிடம் பேசினாலும் வேங்கடத்துக்கு வடக்கே அதைப்பற்றி மக்கள் சிந்திக்கவே தயாராக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த புத்தகத்தில், 'தாம் பெற்ற குழந்தை தாமே கொன்று குழி வெட்டி புதைப்பது போல் திராவிட நாடு கோஷத்தை முதலில் எழுப்பியதாக கருதப்படும் ஈ.வெ.ராமசாமி 'திராவிட நாடாவது வெங்காயமாவது' என அந்த பிரச்சினையை கை கழுவி விட்ட பிறகு திராவிடத்தைப் பற்றியோ திராவிடர்களை பற்றியோ பேச்சு எடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் அண்ணாக்களுக்கும் தம்பிகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது? இளம் இதயங்களில் நஞ்சு தன்மையும், துவேஷத்தையும் வளர்த்து தியாக உணர்ச்சிக்கு பதிலாக சேவை மனப்பான்மைக்கு மாற்றாக துஷ்ட தனத்தையும் பலாத்காரப் போக்கையும் கற்பித்த இளைஞர் வட்டாரத்தை பாழ்பெடுத்தும் பணியைத்தான் அந்த நாள் முதல் இந்த நாள் வரை திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து செய்து வருகிறது.
பெற்ற தாயை மதிக்கும் பெயரை மதியினரை போல் பிறந்த பொன்னாட்டை பேசும் மொழியை மறந்துவிட்டு மாற்ற விட்டு வழக்கில் இல்லாத திராவிடர் என்ற வெற்றுச்சொல்லை வைத்து சிலம்பாட்டம் ஆட வேண்டுமா? என இதுபோன்ற திமுக பற்றி இடம்பெற்ற பல விமர்சனங்கள் அந்த புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.