Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நெருங்கும் அமலாக்கத்துறை - விரிவான பின்னணி என்ன?

அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நெருங்கும் அமலாக்கத்துறை - விரிவான பின்னணி என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Oct 2022 1:30 PM GMT

அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அந்த சமயத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காலத்தில் செப்டம்பர் 29ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது தங்களையே மனுதாரராக சேர்த்துக்கொள்ள சொல்லி அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அமலாக்கத்துறைக்கும் நடக்கும் களேபரத்தின் பின்னணி இதோ! 2011 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி! அப்போது அரசு போக்குவரத்து துறையில் நடத்துனர், ஓட்டுனர் போன்ற வேலைகளை வாங்கித் தருவதாக 81 பேரிடம் 40 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் 2018 ஆம் ஆண்டில் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் அடுத்த நாளே செந்தில் பாலாஜி, அசோக்குமார், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் அருள்மணி, முத்தையா, முருகேசன், வேணுகோபால், குமார், சரவணன், வேலாயுதம் உள்ளிட்ட 14 பேர் பாதிக்கப்பட்டவர்களாக குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடர்ந்தவரும் மூன்றாவது குற்றவாளிமான சண்முகம் தங்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு விட்டதாக சொன்னதை எடுத்து 2021 ஆம் ஆண்டில் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செந்தில் பாலாஜி மீதான இந்த மோசடி வழக்கில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக சொல்லப்பட்ட புகாரின் அடிப்படையில் 2021ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து விசாரணைக்காக ஆஜராகும் படி செந்தில் பாலாஜி, அசோக், சண்முகம் உள்ளிட்டோருக்கு 2022 ஏப்ரல் 29ஆம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது என்றும் எஃப்.ஐ.ஆர் பதிவுகளில் செந்தில் பாலாஜியின் பெயர் முதல் இடம் பெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இருப்பினும் அப்பொழுது சம்மன் வர துவங்கி விட்டது துணை குற்ற பத்திரிகையில் தான் மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் முன்னிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்றங்கள் நடந்ததற்கான இருப்பதாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளச் சொல்லி சொல்கிறது.

செந்தில் பாலாஜி வழக்கில் மட்டும் ஏன் இந்த அக்கறை என அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் ரமேஷ் கூறும் பொழுது, 'அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் பணப்பரிமாற்றம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பது காவல்துறை விசாரணையிலேயே தெளிவாகியுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சர் எனும் போது மாநிலத்தின் காவல்துறை எப்படி சுதந்திரமாக நடக்கும் என்பதை நம்ப முடியும் எனவே லஞ்ச வழக்கை வெறும் ஏமாற்று வழக்காக மட்டும் பதிவு செய்திருக்கும் காவல்துறை மீண்டும் விசாரணை செய்தால் எப்படியும் முழு உண்மை வெளியில் வரும் என்று சந்தேகம் இருக்கிறது. தள்ளுபடி செய்ததையும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும் பட்சத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா இல்லையா என விசாரணை செய்ய அமலாக்கத்துறை இருக்கிறது இந்த வழக்கு விவகாரத்தில் மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழ்நாடு அரசு அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதில் அமலாக்கத்துறை தலையிட்டால் மட்டுமே நேர்மையான விசாரணை நடக்கும் உண்மை வெளியில் வரும்' என கூறினார்.

தற்பொழுது விசாரணை முழுமையாக நடந்தால் அது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தி.மு.க அரசுக்கும் உயர்தர சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் சிலர், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதில்தான் இருக்கிறது சஸ்பென்ஸ்.


Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News