Kathir News
Begin typing your search above and press return to search.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் திட்டத்திற்கும் மூடுவிழாவா - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு தி.மு.க அரசு நடத்தப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இது குறித்து விளக்கியுள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் திட்டத்திற்கும் மூடுவிழாவா - அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது என்ன?
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 July 2022 2:12 AM GMT

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு தி.மு.க அரசு நடத்தப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் இது குறித்து விளக்கியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 'அம்மா மடிக்கணினி' திட்டத்தை துவங்கி வைத்தார்.

இதன் மூலம் பள்ளிபயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு செலவில் லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துவைத்தார். மாணவ மாணவிகளுக்கு அ.தி.மு.க ஆட்சி காலம் வரையில் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசம் மடிக்கணினி வழங்கப்படாமல் உள்ளன, மேலும் இலவச மடிக்கணினியில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படங்களை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாணவர்களுக்கு வழங்கியது போக 55,219 மடிக்கணினிகள் பள்ளிகளின் கையிருப்பில் மீதம் உள்ளன.


இது குறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது, ஆனால் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன சிக்கல்களுக்கு தீர்வு கண்டு தொடர்ந்து செயல்படுத்துவோம். இதனால் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் அமலில் இருக்கும். மேலும் நிதி நிலையை ஆராய்ந்து படிப்படியாக மணிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என கூறினார்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News