கூகுள் பே - இரண்டு மணி நேரத்தில் 25 ஆயிரம் வரை கடன்
இதற்காக Google Pay பல்வேறு கடன் வழங்கும் தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் கடன் வழங்கப்படுகிறது.
By : Karthiga
அவசர பணத்தேவை இருக்கிறது. யாரிடம் பணம் கேட்பது என்று தெரியவில்லை என்ற நிலையை நாம் அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடந்து வந்திருப்போம். அப்படி ஒரு சூழல் வரும் போது இனி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு மேட்டரை தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். அதுவும் வெளியில் ஆள் தேடாமல்.
நீங்கள் கூகுள்பே பயன்படுத்தும் நபராக இருந்தால் இது உங்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி தான். பிரபலமான UPI இயங்குதளமான Google Pay தான் இந்த கடன் சேவைகளை வழங்குகிறது. அதுவும் நாள் கணக்கில் ப்ராசஸ் செய்து அல்ல. உடனடி கடன்களை வழங்குகிறது. இதற்காக Google Pay பல்வேறு கடன் வழங்கும் தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தான் கடன் வழங்கப்படுகிறது.
கூகுள் பே மூலம் கடன் பெற விரும்புபவர்கள் முதலில் கூகுள் பே செயலிக்கு செல்ல வேண்டும். அதில் பிசினஸ் எனும் விருப்பத்தை தேர்ந்தெடுங்கள். அதில் பேருந்து, ரயில், விமான பயணம், பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன் , பங்கு சந்தை போன்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள். இதில் Insta Money என்ற ஆப்ஷன் தான் நமக்கு உடனடி கைகொடுக்க போவது.
இந்த பக்கத்தில் ஒரு கணக்கை உருவாக்கி வெறும் 2 நிமிடங்களில் ரூ. 25 ஆயிரம் வரை கடன் அனுமதி பெறலாம் என்று நிறுவனம் கூறுகிறது. மிக விரைவான பண விநியோகம், முழு டிஜிட்டல் செயலி, குறைந்தபட்ச ஆவணங்களுடன் கடன் பெறலாம். InstaMoney கடன் என்பது RBI பதிவு செய்யப்பட்ட NBFC P2P இயங்குதளமான Innofin Solutions நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதால் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு குறைவு.
நீங்கள் பேஸ்புக் அல்லது கூகுள் கணக்கு அல்லது மொபைல் எண் மூலம் உள்நுழையலாம். பின்னர் தேவையான விவரங்களை வழங்கி. நீங்கள் கடன் பெற தகுதியுடையவரா? என்பது தெரிந்த பின்னர் KYC முடிக்க வேண்டும். அதில் பான் கார்டு, வங்கி அறிக்கை போன்ற ஆவணங்களை அங்கு பதிவேற்றம் செய்ய வேண்டும். முடித்தபின்னர் 2 மணி நேரத்திற்குள் தங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறலாம்
இந்த நிறுவனம் மட்டுமின்றி, கூகுள் பே மற்ற நிறுவனங்களுடனும் கூட்டு சேர்ந்துள்ளது. இது கேஷ், ஃபைப் லோன்ஸ், ப்ரீஃபர் லோன், மணி வியூ போன்ற பல கடன் வழங்கும் தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இவற்றின் மூலமாகவும் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உடனடி கடன் பெற விரும்பும் மக்கள் இந்த வசதியை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.