சனாதன தர்மத்தை பற்றி பேசி ஆளுநர் பற்றவைத்த நெருப்பு - எரியும் சில வயிறுகள்
ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஐயப்ப சேவா சமாஜ விழாவில் சனாதன தர்மம் குறித்து பேசியது பல அரசியல் தலைகள் வயிற்றில் நெருப்பை பற்றவைத்து உள்ளது.
By : Mohan Raj
ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஐயப்ப சேவா சமாஜ விழாவில் சனாதன தர்மம் குறித்து பேசியது பல அரசியல் தலைகள் வயிற்றில் நெருப்பை பற்றவைத்து உள்ளது.
சென்னையில் ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஹரிவராசனம் பாடல் துவங்கப்பட்டு நூறு வருடமான நிலையில் அதனை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாவது, 'வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாடு என நமது நாட்டைப் பற்றி கூறுகிறோம், சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது' என்றார்.
மேலும் பேசிய அவர், 'சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தஹார், பெஷாவர் நகரங்களில் கஜினி முகம்மது உருவாக்கினார். ஆனால் அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் அழிக்கப்பட்டது, இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம்' எனவும் ஆளுநர் பேசினார்.
இப்படி சனாதன தர்மத்தைப் பற்றிய ஆளுநர் பேசியது தமிழகத்தில் சனாதன தர்மத்தை எதிர்த்து பிழைப்பு நடத்தும் சில அரசியல்வாதிகள் வயிற்றில் நெருப்பை பற்றவைத்துள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு பேசியதற்கு சிலர் அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தி.மு.க எம் பி டி.ஆர்.பாலு கூறுகையில், 'ஆளுநர் சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் மாணவர் பேசுவது அவர் வரைக்கும் பதவிக்கு அழகல்ல, அரசியலமைப்புச் சட்டமும் உச்சநீதிமன்றத்தின் பதிப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆளுநர் என்றுதான் சொல்கிறது' என ஆளுநர் கூறியதை எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.பாலு பேசியுள்ளார்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது, 'ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு விரோதமாக செயல்படுகிறார். இது தவறு இனி அவர் அதுபோல் பேசினால் அவருக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்' என எச்சரிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தை குறித்து பேசியுள்ளது பற்றி கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், 'ஆளுநர் அரசால் உருவாக்கப்பட்ட ஒரு ஆளுமை அவர் சனாதன தர்மம் இந்தியாவை உருவாக்கி இருக்கிறது இந்த தேசத்திற்காக அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கி இருக்கிறது என்றெல்லாம் உளற ஆரம்பித்திருக்கிறார்' என திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது, 'ஆளுநராக இருந்துகொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்துக்குரியது' என கூறியுள்ளார்.
சனாதன தர்மம், ஆன்மீகம் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே தமிழகத்தில் பலருக்கு தற்போது எரிச்சலடையச் செய்கிறது அந்த வகையில் ஆளுநர் தற்பொழுது சனாதன தர்மம் குறித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.