Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா? ஒரு பார்வை..!

அரைகுறை மாற்றத்தின் பிழையால் தூத்துக்குடி நகரம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஸ்டெர்லைட் செப்பு ஆலை 2018 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதா? ஒரு பார்வை..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Feb 2021 7:47 PM GMT

மனித உரிமைகள் மற்றும் தனிப்பட்ட பொருளாதார உரிமைகளுக்கு எப்படி சம முக்கியத்துவம் தருவது என்பது குறித்த விவாதங்கள் புதிதல்ல. சுற்றுச்சூழல், தனிநபர் பொருளாதார மற்றும் வாழ்வாதார உரிமைகளை எவ்வாறு சமமாக பாதுகாப்பது என்பது இதன் அடிப்படை அம்சமாகும். இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது, அரசாங்கத்தின் அனைத்து கொள்கைகளும், முடிவுகளும் பொருளாதார பாதிப்புகளை பொருட்படுத்தாமல் சுற்றுசூழல் பாதுகாப்பின் சார்பாகவே இருக்கின்றது. இப்படிப்பட்ட முடிவுகள் கேள்விக்குரியது, ஏனென்றால் மக்களின் வாழ்வாதாரங்கள் இதே போன்ற கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய சூழ்நிலைகளில், தொழிற்சாலைகளை நிறுத்த உத்தரவைப் பிறப்பிக்கும்போது, தீமைகளை விட நன்மைகள் அதிகமாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு வணிகம், தன்னுடைய பங்கு மற்றும் பண மதிப்பினால் மதிப்பிடப்பட்டதில் இருந்து, 'மக்கள், சுற்றுசூழல் மற்றும் லாபம்' என்ற வரிசைக்கு சென்றுவிட்டது. இருப்பினும் அரசாங்க கொள்கை, லாபத்திலிருந்து நேராக சுற்றுசூழலுக்கு நகர்ந்துள்ளது. அந்த மாற்றத்தில், சுவாசிக்க தூய்மையான காற்றைப் போலவே, பொருளாதார பரிமாணங்களும் சம பங்கு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறியதால், ‘மக்கள்’ தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இந்த அரைகுறை மாற்றத்தின் தவறான விளைவுகள் தான் தென் தமிழகத்தில் அமைந்துள்ள சிறிய நகரமான தூத்துக்குடியில் வெளிப்படுகிறது. அங்கு ஸ்டெர்லைட் செப்பு ஆலை 2018 இல் மூடப்பட்டது. ஸ்டெர்லைட்டுடன் 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக இருந்த மோகனுக்கு, அது மூடப்பட்ட பின்னர் நிலையான வேலை மற்றும் வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. CUTS மையத்தில் பொருளாதாரத்தை பாதித்த நீதித்துறை உத்தரவுகளின் விளைவுகளைப் பற்றி NITI ஆயோக்கிற்காக பிரதீப் மேத்தா, சாக்ஷி ஷா, அமோல் குல்கர்னி மற்றும் கபில் குப்தா ஆகியோர் ஒரு ஆய்வை செய்கிறார்கள். ஸ்டெர்லைட் வழக்கின் களப்பணியின் போது, அவர்கள் மோகனைச் சந்தித்தனர். மோகனுக்கு 30 நாட்களாக எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய மனைவி குறைந்தபட்ச ஊதியமாக ரூ 200 க்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

தமிழ்நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான வி.ஓ சிதம்பரனார் துறைமுகம் இங்குள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்தபோதிலும் இதன் பொருளாதாரம் வாடிப்போயுள்ளது. "தூத்துக்குடி குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை பின்னால் சென்றுவிட்டது" என்று தூத்துக்குடியில் உள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் கிடங்கு நிறுவனங்களின் இயக்குனர் விஜய் கூறுகிறார்.

பொருளாதாரத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டு, எல்லோரும் இப்போது தூய்மையான காற்றை சுவாசிக்கிறார்கள். சுத்தமான தண்ணீரைக் குடிக்கிறார்கள். இந்த அணுகுமுறையில் என்னென்ன தவறுகள் இருக்கிறது?

முதலாவதாக, இடைநிலை சமத்துவத்தை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் வெறும் 'பூமியின்' நல்வாழ்வுக்கு உட்பட்டது மட்டுமல்ல. தனிநபர் கல்வி, சுகாதாரம், காப்பீட்டுத் தொகை ஆகியவற்றிற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கத் தவறிவிடுகிறோம். இவையும் முக்கியம். இந்த இயலாமை ஸ்டெர்லைட் ஆலை மூடல் போன்ற முடிவுகளால் அதிகரிக்கிறது. இது தூத்துக்குடி மக்கள் மீது கற்பனை செய்யமுடியாத கீழ்நோக்கிய சுழல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டெர்லைட்டுடன் மற்றொரு ஒப்பந்த ஊழியரான தீபக், தற்போது காய்கறி சந்தையிலும், வெவ்வேறு வீடுகளிலும், 90% குறைவான சம்பளத்திற்காக பலவித வேலைகளை செய்து வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மோசமான விளைவு இது மட்டுமல்ல. கிழிந்த காலணிகளைத் தக்க வைத்துக் கொண்டு, மாதந்தோறும் சுமார் 5,000 ரூபாயைக் கூட தனது பெற்றோருக்கு வழங்க முடியாமல் இருக்கும் தீபக், தனது வாழ்வில் ஸ்திரத்தன்மையையும் தனது குழந்தைகளுக்கான கல்வி கற்பதற்கான வாய்ப்பையும் எதிர்பார்க்கிறார்.

அத்தகைய வாய்ப்புகள் இல்லாமல், தீபக் மற்றும் அடுத்த தலைமுறையினர் தூய்மையான காற்றை சுவாசிக்கக்கூடும். ஆனால் பொருளாதார ரீதியாக சமமான வாழ்க்கையை நடத்த மாட்டார்கள்.

நீதிமன்றங்கள் நிறுவனங்களுக்கு எதிராக முடிவுகளை எடுக்கும்போது, அவ்வணிகத்துடன் தொடர்புடைய நபர்களுக்கான இழப்புகளை ஈடு செய்தல் மற்றும் குறைகளை களைதல் ஆகிய கூறுகள் இல்லாமல் காணப்படுகின்றன.

‘லாபம் ஈட்டுவது’ குறித்த புரிதல் உடனடியாக மாற வேண்டும். ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் பிற பங்குதாரர்களின் பங்களிப்புகள் காரணியாக இருக்க வேண்டும். லாபத்தில் இருந்து சுற்றுசூழல் நன்மைக்கு மாறும் போது, மக்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்வது முன்னெப்போதையும் விட முக்கியமானதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சென்னை உயர்நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்தபோது, ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களிடமும், ஸ்டெர்லைட்டைச் சார்ந்த பல வணிகங்களிலும் அவர்கள் எடுத்த முடிவின் தாக்கத்தை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டனர். மேலும், ஏற்றுமதியாளர்களாக இருந்த நாம் தற்போது தாமிரத்தின் நிகர இறக்குமதியாளர்களாகிவிட்டோம்.

நாம் உண்மையில் ஒன்றிணைந்த சமத்துவத்தை உறுதிப்படுத்த விரும்பினால், நம் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் சமநிலைப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் சுமைகளைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை எளிதாகக் கண்டுபிடித்து செயல்படுத்தக்கூடிய வகையில் தொழில்நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. நீதித்துறை, வணிகங்களை தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தச் சொல்வதைக் காட்டிலும் அதற்கேற்ப பதிலளிக்கும்படி கேட்க வேண்டும். தீர்ப்பு மக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் சமத்துவத்தை உள்ளடக்கிய நீதியை உறுதி செய்யும் என்ற நம்பிக்கையில் தூத்துக்குடி மக்கள் இப்போது உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு காத்திருக்கிறார்கள்.

பிரதீப் மேத்தா, சாக்ஷி ஷா ஆகியோர் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியதன் தமிழாக்கம்.
Translated from the Opinion written by Pradeep S Mehta and Sakhi Shah in Economic Times.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News